Posts

Showing posts from November, 2021

சிறுகதை

Image
  மார்ச் 2019  பதாகை இதழில் வெளியான கதை.                          குன்றத்தின் முழுநிலா                                                           மூவேந்தரின் எரி நின்ற  பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து  நிமிர்ந்து நோக்குகையில் தொலைவில் என்றாலும், பறம்பு இங்கு இதோ நான்கடிகளில் என்றே அவர்களுக்குத் தோன்றியது. பரந்து கைவிரித்திருந்த கரும்பாறையில் அமர்ந்த கபிலர், “இன்றிரவு இங்கு துயின்று கருக்கலில் செல்லலாம்,”என்று கால்களை நீட்டிக்கொண்டார். அங்கவையும் சங்கவையும் ஒன்றும் நவிலாமல் பாறையில்  அமர்ந்து கொண்டனர்.இலைகள் குறைந்த கிளைகளுக்கு இடையில் நிலவொளி மேலும் தெளிவு கொண்டது. ஒருத்தி,“பறம்பின் தொலைதூர தோற்றம்,” என்றாள். மற்றவள் பாறையைத் தடவி, “ஆம்,” என்றாள். கபிலரின் துவண்ட முகத்தில் மென்நகை மலர்ந்து சுருங்கியது.எங்கு சென்று இந்த மகள்களை சேர்ப்பிப்பேன்.உன் மகள்கள் என்று ஒப்படைத்துவிட்டான்.என் செய்வேன்? என்று தன்னுள்தான் உரையாடிக்கொண்டிருந்தார். வேங்கைமரத்தி