Posts

Showing posts from August, 2023

பேரன்பை அருளும் துக்கம்

Image
 [2023 சொல்வனம் 300 வது சிறப்பிதழில் வெளியான கட்டுரை] அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். [ குறள். அதிகாரம்: மக்கட்பேறு] வழக்கமான சொல்லுடன்  கட்டுரையைத் தொடங்கலாம்.  இலக்கியம் என்பது எப்போதும் வாழ்க்கையை தன் பேசுபொருளாகக் கொண்டது. உலகம் முழுவதுமே  இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வாழ்க்கைமுறை வெகுவாக மாறி இருக்கிறது. சமூகத்திலிருந்து குடும்ப அமைப்பு,தனிமனிதன் வரை உலகமயமாக்கலால் மாறிக்கொண்டிருக்கிறது.  தனிமனிதன் என்ற கருதுகோலிற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. வாழ்க்கையை விரிவாக பேசும் இலக்கியவடிவமான நாவலின் பேசுபொருளானது  விதவிதமான வாழ்க்கை முறைகள்,மனிதர்கள்,நிலப்பரப்புகள் என்று விரிந்து செல்கிறது. தத்துவம்,வரலாறு,காதல்,மண் சார்ந்த வாழ்க்கை,தனிமனிதன்,விளிம்பு நிலை வாழ்க்கை என்று நாவலின் பேசுபொருள்கள் மிகப்பரந்தவை. சமூகமனிதரான காந்தியையும் அவர் மகனையும் மையப்படுத்திய ஹரிலால் த/பெ மோகன்தாஸ் காரம்சந்த் காந்தி  என்ற நாவலையும்,தனிமனிதரின் குழந்தையின்மை சிக்கலை பேசும் காயாம்பூ நாவலையும் இந்தக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்கிறேன். எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் காயா

வெந்தழலால் வேகாது : 4

Image
      [ 2023 ஜூலை வாசகசாலை இணையஇதழில் வெளியான தொடர் கட்டுரை ]        கதைசொல்லியின் மேழி ஒரு சம்சாரி [விவசாயி] தன் உயிரின் ஆதார மலர்வை தன் நிலத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார். அதன் பலனில் உடல் வளர்த்து, உயிர் காத்து குடும்பமாக செழிக்கிறார். ஒரு விதையை விதைக்கும் போதும், அது மலரும் போதும், கனியும் போதும், காய்ந்து உதிரும் போதும் அவர் மீண்டும் மீண்டும் அடையும் ஒன்று உண்டு.  ஒரு சம்சாரியின் நுண்ணுணர்வு  ஆழமானது விரிந்தது. அவர்  மனிதர்களை, விலங்குகளை, நிலத்தை பார்க்கும் பார்வை வேறு. அந்த மலர்வு [Pleasure] தான் இங்கே தெய்வங்களை நிறுத்தியது. கலைகளை வளர்த்தது. கதைகளை பெருக்கியது.            எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அந்த வாழ்க்கை முறை மாறும் போது அந்த ஆதாரமான ஒன்றும் மாறுகிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சியை நுண்ணுணர்வுடன் காணும் சம்சாரி தன்னுள்ளே காமம் அழிவதை அப்பட்டமாக உணர்கிறார்.  மண்ணையும், பெண்ணையும், பசுவையும் அறிபவர் தன்னுள் அகங்காரமான ஒன்றை, தீராத ஒன்றை கடக்கிறார். அதற்கும் மேலுள்ள ஒரு விடுதலையை, நிறைவைத் தொட்டு இறுதிக்கட்டிலில் விழும் போது ‘பிறகென்ன காய்ச்சதெல்லாம்.. பழுத்ததெல்லாம்..

ஆதித்தனிமை [பொன்முகலியின் இரு கவிதைகள்]

Image
                        உனது தனிமை என்பது உனது பனிக்குடத்தில் எழுதப்பட்டது அன்பே                                   _பொன்முகலி         இந்தக்கவிதையை வாசித்ததும் நம்முள் உறையும் காரணமில்லாத தனிமையின் ஆதி ஊற்று இது தானாே என்று தோன்றியது. தனிமைக்கு காரணங்களாக எந்த மனிதராவது எந்த பொருளாவது இருந்தால் அந்தத்தனிமை ஒரு பிரிவர்த்தத்தை பெற்றுவிடுகிறது. ஆனால் காரணமில்லாத ஒரு தனிமை நம்மில் உண்டு. இந்த உணர்வு எங்கிருக்கிறது என்ற எண்ணம் அடிக்கடி வரும். இதை ஒரு மனிதர் நீக்கிவிட முடியாது. சில நேரங்களில் நாய்க்குட்டிகளால் மிகஎளிதாக நம்முள் எழும் அந்த தனிமையை சட்டென்று நீக்கிவிட முடியும்.  அந்தத்தனிமை எங்கிருந்து பதியமாகி நம்முள் உறைந்து அவ்வப்போது உருகுகிறது என்பதை இந்தக்கவிதை காட்டுகிறது. சட்டென்று  பரணில் கிடந்த ஒரு பழைய பெட்டியை திறந்து பெரியவீட்டின் கனமான சாவியை எடுப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்தக் கவிதை தரக்கூடிய தவிர்க்க முடியாத துக்கத்தை மழை நீரால் கனத்துக்கிடக்கும் இலையை மெல்ல துடைத்து துடைத்துவிடும் காற்றாவோ, சூரிய ஔியாக அடுத்தக்கவிதை உள்ளது. அன்பு எப்போதும் நுனி மரத்தில் அமர்ந்தே அடிம

இற்றை திங்கள் அந்நிலவில் : 2

Image
 2023 ஜூலை சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரைத்தொடர். சங்கப்பெண்கவிகள் : 2                              பொன்னொளி அள்ளூர் நன்முல்லையார் பாண்டிநாட்டை சேர்ந்த சங்கக்கவிஞர். சங்க கால அரசன் கொற்ற செழியனையும்,அவனுடைய அள்ளூரையும் இவர் பாடல்கள் வழியே அறிகிறோம். இவர் பதினோரு பாடல்கள் இயற்றியுள்ளார். வேம்பின் கனிகளும், காடைகளும், வற்றிய சிறிய குளமும்,நெல்லங்காடுகளும் உளுந்தஞ்செடிகளும்,வள்ளைக் கொடிகளும்,நெருஞ்சி மலர்களும்,ஓணான்களும், முள்வேலிகளும்,தாமரைக் குளமும், காரானும் நடமாடும் நன்முல்லையின் நிலமும், பொழுதுகளும் இந்தப்பாடல்களில் உள்ளன . இங்கு நிலமாக இருப்பதும், பனியாய் குளிர்வதும், வாடையாய் வீசுவதும்,கலங்கி சேறாவதும்,மலர்வதும், காய்ப்பதும், துவர்ப்பதும், கனிவதும் மனமே.  சங்ககால போரில் பகைநாட்டின் நீர்நிலைகள் மற்றும் வேலிஅரண்களை யானைகளை விட்டு அழிக்கும் வழக்கம் இருந்தது. சீறூரின் பெண் ஒருத்தி என்றோ யானைகளால் சிதைக்கப்பட்ட முள் வேலியை தினமும் காண்கிறாள். ஊரின் அழகுக்கெட்டு பாழடைந்து கொண்டிருக்கிறது. பயன்பாட்டில் இல்லாத நீர் தேக்கத்தை கடந்து செல்லும் போது அவள் மனம் பதைக்கிறது. ஒரு காலத்தில் பெ

மதுரம்

Image
  https://youtu.be/zpHNHJCzmxI செங்கோல் என்ற மலையாளத் திரைப்படத்தின் பாடல். மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி கேட்கும் பாடல். ப்ளே லிஸ்ட்டில் முதலில் உள்ள பாடல். இன்று ஏனோ கேட்க வேண்டும் என்று தோன்றியது.  இந்தப்படத்தை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதியிருந்தார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படம்.  என்னுடைய 'கொறச்சு அறியும்' மலையாளத்தை வைத்து நானாக புரிந்து கொண்ட படம். தமிழ் தெரிந்தவர்கள் மலையாளத் திரைப்படங்களை புரிந்து கொள்ளலாம். இந்தப்பாடலையுமே அப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.  'மதுரம் ஜீவாமிர்த பிந்து'  எந்த நிலையில் இருந்தாலும் இந்த வாழ்க்கை இனிது என்று சொல்லும் இந்தப் பாடல் படத்தில் வரும் இடம் முக்கியமானது. மோகன்லால் சிறையில் இருந்து விடுதலையாகி தினமும் உள்ளூர் காவல்நிலையத்தில் கையெழுத்திடும் நிலையில் இருப்பார்.  சிறைக்கு செல்லும் முன் காவல் துறை பணிக்கான தேர்வு எழுதி நேர்முகத் தேர்விற்காக காத்திருக்கும் இளைஞர் அவர். காவலரான தன் தந்தையை தெருவில் அவமானப்படுத்தும் ரௌடியை அடிப்பதால் குற்றவாளியாவார். அதற்கு முந்தின காட்சியில் மோகன்லால் அற்புதமாக நடித்திரு

நேர்காணல் : எழுத்தாளர் கா.சிவா

Image
        2023 ஜூலை வாசகசாலை இணையஇதழில்  வெளியான  நேர்காணல். எழுத்தாளர் கா.சிவா அவர்களுக்கு நன்றி. மனித மனதின் நுண்தளங்கள்  இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின்  சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த  புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதை தொகுப்புகளை மையமாக வைத்தும்,அவர் புனைவுலகம் சார்ந்தும், அவரின் முதல் நேர்காணல் என்பதால் எழுத்தாளராக அவரை எடுத்து வந்த விசைகள் சார்ந்தும் இந்த நேர்காணலை விரித்தெடுக்கலாம். மீச்சிறுதுளி என்ற வார்த்தையை  இதுவரை கா.சிவா எழுதியுள்ள சிறுகதை புனைவுலகிற்கான சாவியாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மீச்சிறுதுளியே பெருங்கடலாக விரிய சாத்தியமுள்ளது. அல்லது ஒன்றுமில்லாமல் ஆகக்கூடிய சாத்தியமும் உள்ளது. கதைகளில் திரிபாகும் இந்த மீச்சிறு துளியே, திரிந்தப்பின் எஞ்சும் அமுதத்துளியாகவும் மாறும் விந்தை இந்தக்கதைகளில் உள்ளது. அந்த அமுதமே நம் லௌகிகத்தின் அடியில் உறையும் துளி இனிமை. வாழ்வின் அத்தனை உவர்ப்பிற்கு அடியில் உறையும் துளி இனிமை அத

அம்பையின் படைப்புலகம் :2

Image
       [ 2023 மே நீலி இதழில் வெளியான  கட்டுரை ]               விசிறியடிக்கப்பட்ட வண்ணக்கலவைகள்                'அதிகாலையில் கலைத்துவிடுகிறது காற்று இனி  அது வேறொரு குளம்' அம்பை அவர்களின் அம்மா ஒரு கொலை செய்தாள் என்ற சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தப்பின் கதைகளை மனதிற்கு ஓட்டிப்பார்த்த போது மேற்கண்ட வரிகள் மனதில் ஓடின.   ‘மனம் திசைமாறும் தருணங்களின்’ கதைகள் என்று இவற்றை சொல்லலாம். எழுத்தாளர் அம்பை சிறகுகள் முறியும் என்ற  கதையில் திருமணமான புதிதில் தானே சமைத்து அனுப்பும் உணவு பற்றி சாயா பாஸ்கரனிடம் கேட்கும் போது வெளியில் உண்பதை விட பணம் மிச்சம் என்று அவன் சொல்கிறான். அவளின் திருமணம் பற்றிய கனவுகள் மீது விழும் முதல்கல் அது. இந்தக்கதையில் கணவன், மனைவி,பணம், இல்லறத்தில் பெண்ணுக்கு இருக்கும் சங்கடங்கள் மட்டும் பேசப்படவில்லை. ஒரு பறவை தன்னை அறியாமலேயே பறவையாய் இல்லாமலாகும் தருணத்தை கதைத் தொடுகிறது. இதில் சாயா திருமணத்திற்கு பின் தன் இயல்பிலிருந்து தன்னை தானே நழுவவிடுகிறாள். அந்த பதட்டம் கதை முழுவதும் அந்தரங்கமாக அவளுடன் அவள் நடத்தும் விவாதமாக விரிகிறது.  அண்மையில் சமயபுரம் கோவிலுக்கு

புதிதாக எதையும் கற்பிக்கவில்லை

Image
 [ 2019 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை ]                                                         புதிதாக எதையும் கற்பிக்கவில்லை                            நூல்:சத்தியசோதனை ஆசிரியர்:மோகன்தாஸ் கரம்சந் காந்தி என்னுடைய பதினான்காவது வயது கோடைவிடுமுறையில் தந்தையால்  பரிசளிக்கப்பட்ட புத்தகம் சத்தியசோதனை.பத்துநபர்களைக் கொண்ட வீட்டில் காந்தியை விமர்சிக்கும் ஒருதரப்பும்,வழிபடும் மறுதரப்பும் என்னை குழப்பிய  நாட்கள் அவை. அய்யா தினமும் போராடி வீட்டின் வழக்கமான குடும்பப் பேச்சு சூழலை ,பிள்ளைகளுக்காக  மாற்றிக் கொண்டிருந்தார்.அவருக்கு பிடித்த அல்லது தெரிந்த ஆண்டாள், காந்தி,நேரு,காமராஜர்,பாரதி,பெரியார்,கல்கியால் ஆனது  அந்தவட்டம். “புரியலேன்னாலும் சத்தியசோதனைய படி..அடுத்த வருஷ லீவிலயும் படிக்கனும்..ஒவ்வொரு வயசில படிக்கறப்பவும் புதுசாதான் இருக்கும்..”என்றார். தனிப்பட்ட பேச்சில் அவருக்கு எதிர்கேள்வி கேட்கத் தொடங்கியிருந்த நான் ஏன் நிறையமுறை படிக்கனும் என்றேன்.“முதல்ல படி,” என்றார். “சுயசரிதைய  ஏன் படிக்கனும்,” என்று பேச்சு நீண்டு கொண்டிருந்தது. அய்யா முகச்சவரம் செய்ய, முற்றத்தில் நின்று பேசிக்கொண்டி