Posts

Showing posts from July, 2023

வெந்தழலால் வேகாது :2

Image
        புரவி இதழிலி வெளியான கட்டுரை                           உயிர்ப்பின் வெளி            இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின்   புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத்  தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும் போது வா. - வில்லியம் சிட்னி வால்கர்  உன் கடிதத்தை இவ்வாறாக எதிர்பார்த்தேன் என்று கி.ராவிற்கு கு.அழகிரிசாமி எழுதுகிறார். கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள் ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதன் முன்னுரையில் கி.ரா இந்தக்கடிதங்கள் காதல் கடிதங்களின் அளவிற்கு உணர்வுபூர்வமானவை என்கிறார். இந்தநூலின் வழி இன்னொரு அழகிரிசாமியை நம்மால் தரிசிக்க முடிகிறது. நண்பரை அளவு கடந்து நேசிக்கும் ஒருவரின் அலைகழிப்புகளும், அன்பின்பித்தும் நிறைந்த கடிதங்கள் இவை. சென்னையில் இருந்து இடைசெவலிற்கு தினமும் ஒரு கடிதம். அழகிரிசாமிக்குதான் அனைத்து அலைகழிப்புகளும். கி.ரா கு.அழகிசாமியின் அழியா அன்பின் மீது நம்பிக்கை வைத்து ‘பயல்’ எங்கே போய்விடப

துறைமுகம் : சிறுகதை

Image
      ஜூலை 2023 வாசகசாலை இணைய  இதழில் வெளியான சிறுகதை.                   துறைமுகம் பாரிமுனையில் இறங்கி ட்ராம்வேயின் இந்தப்புறமே நடந்தேன். சத்தமில்லாது பூனைப்போல ட்ராம்வண்டி நகர்ந்து சென்றது.  காலையிலையே ஜானகியிடம் கோபத்தை காட்டியதை நினைத்தால் சஞ்சலமாக இருக்கிறது. பெர்னாலியின் Kஎண்கள் காணாமல் போனதற்கு ஜானகி என்ன பண்ணுவாள். ஆனால் அவள் தான் வாங்கிக் கட்டிக்கொள்கிறாள். வேறு யாரிடமும் குரல் உயர்த்தாத நான் அவளிடம் மட்டும் கத்தித்தொலைக்கிறேன்.  மதராஸ் வழக்கம் போல காலை நேர அவசரத்தில் இருப்பதை பார்த்தபடி ஒதுங்கி நடந்தேன். இன்னும் இந்த அவசரம் எனக்கு கைவரவில்லை. வீட்டில் சீக்கிரமே கிளம்பிவிடுவேன். மேலும் துறைமுகக்கழகத்தற்கு மணலில் நடக்க வேண்டும். சென்ற ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பி. எஃப் படிக்கும் போது தினமும் ட்ராமில் சென்று வருவேன். கல்லூரியில் சேர்ந்த மூன்றாம்  நாளே ட்ராம்காற்று என் குல்லாயை பறித்து சாலையில் வீசியது.  சமஸ்கிருத வகுப்பில் பேராசியர் கிருஷ்ண சாஸ்த்ரி முறைத்து எழுப்பினார். “மிஸ்ட்டர் சீனிவாச ராமானுஜன்…இது ஃபெல்லோ ஆஃப் ஆர்ட்ஸ் படிப்பாக்கும். இது ஒன்னும் பள்ளிக்கூடமில்ல… குடுமி வ

மரணமும் ஆசிரியர்களும்

Image
மனதிற்கு ஆசிரியரின் துணை எவ்வகையிலேனும் அவசியம். அதுவும் இழப்பின் காலத்தில் ஆசிரியருடன் எவ்வகையிலேனும் அருகில் இருக்க வேண்டும். அதை நான் மீண்டும் மீண்டும் நடைமுறையில் உணர்கிறேன்.  ஜூன் மாதம் சின்னய்யாவிற்கு [சித்தப்பா] உடல் நிலை மோசமானது. ஜூலை துவக்கத்தில் இறந்தார். மிக மெதுவாக படிப்படியான புற்றுநோய் மரணம்.  மாடியில் அவரை பார்த்துவிட்டு கீழிறங்கும் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை பற்றிய விசாரணையை தொடங்கி மனம் தொந்தரவு செய்துகொண்டிருந்தது. நீலி கட்டுரைக்காக அம்பையின் 'காட்டில் ஒரு மான்' தொகுப்பை வாசித்து முடித்துவிட்டு மாடியேறுவது தான் கடைசியாக உயிருடன் சின்னய்யாவை பார்ப்பது என்று நினைக்கவில்லை. அன்று இரவு அவர் இறந்தார். ஏற்கனவே நீலிக்காக எழுதிய கட்டுரைகளை அவரிடம் சொல்லும் போது புன்னகைப்பார். வலி இருந்தாலும் நான் சொல்லும் கதைகளையும், கட்டுரைகளையும் கேட்டு தலையாட்டிக்கொள்வார்.  அவருக்கு எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,கல்கி,வாசந்தி,சுஜாதாவை பிடிக்கும்.  அம்பை சொல்கிற அளவுக்கா நாங்கள் இருக்கிறோம் என்று ஒரு முறை கேட்டார். அப்போது அவருக்கு புற்றுநோய் வயிற்றில் பரவத்தொடங்கி நுரையீரலில் கைவைத்திரு

அடுத்த நாட்கள்

Image
மிக மெல்ல தீப்பிடித்து சாவின் ஐந்தாம் நாள் சீறி எரிகிறது பிரிவின் எரி, பிரிவின் கைப்பிடித்து மனம்  இருளிற்குள் செல்லப்பார்க்கிறது, அதோ மழைமுடித்த காலை வானம். மேகங்களின் இடையில் கிழக்கே ஔிக்கீற்று சிதறுகிறது. அதன் எதிரே  மரகதப்பச்சையாகிறது மாமலை. அறுப்பு முடிந்த கழனியில் மிதக்கின்றன... நாளை முளைக்கப்போகும் நெல்மணிகள். வானில் வெள்ளை பறவை ஒன்று  இறைதேடிப்பறக்கிறது... உதித்துக்கொண்டிருக்கும் சூரியனின் வெப்பத்தில் என் சிறகுகளும் உலரட்டும்...