Skip to main content

Posts

Showing posts with the label சினிமா

காட்சி...

  https://youtu.be/_YNIG1TKMdk?si=GqsGmIiSuEyU1LU9 இந்தப்பாடல் பதினோரு வயதிலிருந்து வெவ்வேறாக மனதில் நீங்காமல் உள்ளது. பதினோரு வயதில் பாடலில் வரும் காட்சிகள்  பிடித்தது. இப்போதும் காட்சிகள் தான் இந்தப்பாடலை திரும்ப பார்க்க வைக்கிறது. ஒரு Break தேவைப்படும் போது  இந்தப்பாடலின் காட்சிகள் சலிக்காதவை. இந்தப்பாடல் நான் ஐந்தாம் வகுப்பு முடித்து  புதுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்த போது கேட்டப்பாடல். அப்போது தான் சன் டி.வி கனெக்ஷன் உப்பிலியபுரம் என்ற ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று வீடுகளில் என்று நினைக்கிறேன். மற்ற வீடுகளில் தூர்தர்ஷன் மட்டும். ட்யூஷன், பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பும் போதும் அந்த வீட்டு முற்றங்களில் நின்று கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்ப்போம்.  ஒரு நாள் இரவு ட்யூஷன் முடிந்து அப்போது பிரபலமாக இருந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் பார்த்த பாடல் இது. அய்யா ட்யூஷன் ஹாலை பூட்டிவிட்டு சைக்கிளில் வருவார். வீட்டிற்கு நான்கு தெருக்கள் நடக்க வேண்டும். பாடல் முடிந்ததும் வழியெல்லாம் வானத்தை நிலாவை பார்த்துக்கொண்டு தனி...

மதுரம்

  https://youtu.be/zpHNHJCzmxI செங்கோல் என்ற மலையாளத் திரைப்படத்தின் பாடல். மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி கேட்கும் பாடல். ப்ளே லிஸ்ட்டில் முதலில் உள்ள பாடல். இன்று ஏனோ கேட்க வேண்டும் என்று தோன்றியது.  இந்தப்படத்தை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதியிருந்தார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படம்.  என்னுடைய 'கொறச்சு அறியும்' மலையாளத்தை வைத்து நானாக புரிந்து கொண்ட படம். தமிழ் தெரிந்தவர்கள் மலையாளத் திரைப்படங்களை புரிந்து கொள்ளலாம். இந்தப்பாடலையுமே அப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.  'மதுரம் ஜீவாமிர்த பிந்து'  எந்த நிலையில் இருந்தாலும் இந்த வாழ்க்கை இனிது என்று சொல்லும் இந்தப் பாடல் படத்தில் வரும் இடம் முக்கியமானது. மோகன்லால் சிறையில் இருந்து விடுதலையாகி தினமும் உள்ளூர் காவல்நிலையத்தில் கையெழுத்திடும் நிலையில் இருப்பார்.  சிறைக்கு செல்லும் முன் காவல் துறை பணிக்கான தேர்வு எழுதி நேர்முகத் தேர்விற்காக காத்திருக்கும் இளைஞர் அவர். காவலரான தன் தந்தையை தெருவில் அவமானப்படுத்தும் ரௌடியை அடிப்பதால் குற்றவாளியாவார். அதற்கு முந்தின காட்சியில் மோகன்லால் அற்புத...