Posts

Showing posts from August, 2021

எழுத்தாளர் ம.நவீன் நேர்காணல்

Image
மலேசிய எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் பேய்ச்சி நாவலை மையப்படுத்தி புரவி ஆகஸ்ட் இதழிற்காக செய்த நேர்காணல். எழுத்தாளர் நவீன் மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு. எழுத்தாளரின் நூல்கள்: 1.சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்), 2.வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல் 3.மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு) 4.போயாக் 2018 (சிறுகதை தொகுப்பு) 5.பேய்ச்சி (2019) நாவல் 6.மகாராணியின் செக் மெட் (2019) கவிதை 7.உச்சை (2020) சிறுகதை தொகுப்பு 8.கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு) 9.விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு) 10. வகுப்பறையின் கடைசி நாற்காலி  – 2015 (கட்டுரைத் தொகுப்பு) 11. லகின் நாக்கு - 2017 (உலக இலக்கிய அறிமுகம்) 12.மீ ண்டு நிலைத்த நிழல்கள் 2018 (நேர்காணல் தொகுப்பு) 13.நா ரின் மணம் 2018 (பத்தி தொகுப்பு) 14.மனசிலாயோ - 2020 (பயண நூல்) ம 15.ம லேசிய நாவல்கள் (2020) தொகுதி   நேர்க்காணல்: எழுத்தாளர் ம.நவீன் நேர்க்கண்டவர்:எழுத்தாளர் கமலதேவி கேள்வி: பேய்ச்சிக்கான முதல் விதை விழுந்த நிகழ்வென்று ஏதாவது உள்ளதா? அதை எத்தனை காலம் மனதிற்குள் காத்து வைத

கதை

Image
       காலச்சுவடு ஜீன் இதழில் வெளியான கதை. ஓவியம் :காலச்சுவடு.                                                        ஒன்றெனக்கலத்தல் குருவாயி கோவிலின் முன்னால் கிளைபிரிந்த அய்யாற்றில் தண்ணீர் சுழித்துக்கொண்டு பாய்ந்தது. ஆற்றின் சீறல் ஓசை தொலைவு வரை கேட்டது. எங்கும் புங்கைகள் கிளைநீட்டி தடித்து வளர்ந்திருந்தன. மழை கழுவிய கரும்பச்சை இலைகள் சூரிய ஔியில் மினுமினுத்து அசைந்தன.  ஆற்றின் அக்கரையில் சிவப்பு நிறத்துணி அசையும் மங்கலாய் குருவாயி தெரிகிறாள். இக்கரையில் புளியம், மா, பலா பெருமரங்கள் நின்ற அடிவாரப்பகுதியை அடுத்து அய்யாற்றின் அடுத்தக்கிளை. அதைஅடுத்த காட்டிலிருந்து கொல்லிமலை ஏற்றம். சற்று நேரம் நின்ற காளங்கன் நான்கு ஆட்கள் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத புளியமரத்தின் மழைஈர வேர்ப்புடைப்பில் அமர்ந்தார். அவர் முன்பு விரிந்த இடத்தில் முன்பு இருந்த அதே அளவுள்ள மாமரங்களை, புளியமரங்களை வெட்டி தோண்டி எடுத்தப்பள்ளங்களை நிரப்பியிருந்தார்கள். எப்போதும் அரையிருள் சூழ்ந்திருக்கும் அந்தஇடம் இன்று பார்க்க பளிச்சென்று கண்களை கூசியது. ‘ஆ’ வென்று வாயைப்பிளந்த பெருமிருகத்தின் வாய் என அந்த இடம் மட்ட

தாகமுள்ளவன் தனக்கு விதிக்கப்பட்ட பாலையிலிருந்தும் அமுதம் பெறுகிறான்

Image
  எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர் செந்திலின் காணொளிக்கான இணைப்பு கீழே. https://youtu.be/OFGHuw0y4Hk இந்த வீடியோ எனக்குள் இருக்கும் வாசகிக்கு உத்வேகம் அளிப்பது. வாசிப்பின் உன்னதத்தை ஒரு சிறந்த வாசகரின்றி எவர் சொல்லமுடியும். வாசிப்பு என்பது 'வேலையற்றவர்கள் செய்கிற வெட்டிவேலை' என்ற கேலியை உடைக்க இது ஒரு கூர்மையான குரல். இப்படியான ஒன்றை வாசகர் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் சொல்லும் பொருள் மேலும் அர்த்தம் உள்ளதாகிறது. நாள் முழுதும் உழைக்கும் ஒருவரின் சொல்லில் கலைமகள் மேலும் அழகாகிறாள்...அர்த்தப்படுகிறாள்...அன்றாடத்தில் அவளின் இருப்பு மேலும் வலுவாகிறது. தமிழ் போன்ற வளம் மிக்க மொழியை கொண்ட சமூகத்தில் ,வாசிப்பு என்பது எங்கோ சிலர் செய்வதும் செய்யகூடியது என்பதும் எனக்கு ஏற்புடையது அல்ல. அதுவும் நம் அன்றாடத்தின் மிகமுக்கியமான செயல்பாடு. செந்திலின் குரல் அன்றாடத்தில் இருந்த அவரை ஒரு அழகியபறவையாக சிறகுவிரிக்க வைக்கிறது. இலக்கியம் அவரை மண்ணிலிருந்து விண்ணின் பறவையாக சிறகுதந்திருக்கிறது. திருமகளைப்போல கலைமகளும் பொன்னாகி பொலிபவள் தான். பொலியும் இடங்கள்தான் வேறு.

கதை : மாலே

Image
         புரவி ஜூன் இதழில்  வெளியான என்னுடைய கதை 'மாலே' . ஓவியங்கள் புரவி இதழிற்காக வரையப்பட்டவை. சுரதானியின் ஒரு ஓவியம் மட்டும் பதினாறு வயதான சிறுமி பார்கவி என்பவள் தனிப்பட்ட முறையில் எனக்கு வரைந்து தந்தாள். இந்த ஓவியத்தை எனக்கு கிடைத்த  ஆகச்சிறந்த வெகுமதியாக நினைக்கிறேன். இதழின் அட்டைப்படம் மனதிற்கு நெருக்கமானது. மே பதினேழாம் தேதி எழுத்தாளர் கி.ராவின் இறப்பிற்கு பின் அவருக்கு இந்த இதழ் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.  நன்றி:புரவி                                                                                        மாலே …                       இளம்பனி திரையென படரும் வெளி அது. கனவுகள் விழுந்து  நகராக முளைத்து நிற்கும் நிலம். கனவுகள் துளிர்ப்பதென எழும் பேரரசுகள் வீழும் நிலம். அந்நிலத்தின் பனித்துளிகளை ஆதவன் உறிஞ்சி எடுத்து தனதாக்க பொழுது எழுந்துகொண்டிருந்தது. இளங்காலையின் தண்மையும் வெம்மையும் படற அந்த அகன்ற பெரிய நீள்வட்டவடிவ, ஆறுசாளர அறையில் காலைக்காற்று புகுந்து வெளியேறியது. அதன் அமைதியில் கிணற்றில் விழும் முதல் துரும்பென பணிப்பெண் ஜவந்தா உள்நுழைந்தாள். வண்ண வண்ண சிறுப்பூவேலைபா

கடுவழித்துணை சிறுகதை தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்

Image
  தமிழ்வெளி இலக்கிய காலண்டிதழில் ஜீலை மாதம் என்னுடைய கடுவழித்துணை தொகுப்பை பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது. எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் மற்றும் தமிழ்வெளி இதழிற்கு நன்றி. மனக்கேணியின் பாதாளக்கரண்டி: கமலதேவியின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு கடுவழித்துணை. திருச்சியை முக்கியமாக துறையூர் வட்டாரத்தை கொல்லிமலையை, பச்சைமலையை, துறையூர் திருச்சி சாலையை சார்ந்த நிலப்பரப்புகளை அதிகமும் பேசும் கதைகள் கமலதேவியுடையது. இவர் கதைகளில் வரும் கொல்லிமலையும் பெருமாள் மலையும் எங்கள் முன்னோர்களும் குலதெய்வமும் குடிகொண்ட இடம். அதே நிலத்தை சார்ந்தவள் என்ற முறையில் இந்தக் கதைகள் எனக்கு மனதுக்கு நெருக்கமாகின்றன.  மனதின் தனிமை சிடுக்கங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் ஏராளமான நினைவுகளை கிளற ஏதேனும் ஒரு காரணம் வேண்டும், மரணம் அவ்வாறான பாதாளக் கரண்டிகளாக இவரது பலக்கதைகளில் வருகின்றது. இந்தத் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன.  எழுத்தாளர்    லாவண்யா சுந்தரராஜன் பதினைந்தில் ஒன்பது கதைகளில் மரணத்தில் சாயல் ஏதாவது ஒருவிதத்தில் இருக்கின்றது. அம்மாவின் மரணத்தால் பழைய நினைவுகளால் அலைக்கழியும் இரண்டு பெண்களின் கதை ஜீவனம் மற்ற

எழுத்தாளர் சுனீல்கிருஷ்ணன் நேர்காணல்

Image
'புரவி' இதழிற்காக செய்த நேர்காணல்.  நான் செய்த முதல் நேர்காணலும் இதுதான். எனக்கு கேள்விகளை எழுப்பமுடியும் என்ற நம்பிக்கையை தந்த நேர்க்காணல். வாசகசாலை நண்பர்களுக்கும்,எழுத்தாளர் சுனீல்கிருஷ்ணனுக்கும் என் அன்பு. தத்தளிப்புகளின் கலைவடிவம் நேர்காணல்; எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் நேர்கண்டவர்; எழுத்தாளர் கமலதேவி  எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான, ’அம்புப் படுக்கை’ மற்றும் முதல் நாவலான, ’நீலகண்டம்’ நாவலை மையப்படுத்தி இந்நேர்க்காணல் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் என்பதையும் தாண்டி இவர்  மொழிபெயர்ப்பாளர், ’பதாகை’ இணைய இதழின் ஆசிரியர், காந்தியவாதி எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளரை எழுதச் செய்யும் விசைகள், எழுத்தின் ஆழத்தில் நின்றிருக்கும் கேள்விகள் மற்றும் அவரது அன்றாடம் இம்மூன்றையும் பற்றிய மிக அடிப்படையான கேள்விகள் முக்கியமானவை. அவற்றை இந்நேர்காணலில் முயன்றிருக்கிறோம். அலைநீரில் விழுந்த ஆலிழையின் தத்தளிப்புகளைக் கொண்ட மனித மனத்தின் ஆழத்தை இயக்கும் அகவிசைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சுனீல் கிருஷ்ணன். மருத்துவரான அவர் இத்தகைய நெருக்கடியானதொரு காலக