Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

தூக்கணாங்குருவி

  சரவணப்பொய்கையின் மூன்றாவது படிக்கட்டில் சுப்பு அமர்ந்திருந்தான். பொய்கை தழும்பிக்கொண்டிருந்தது. மழைகால காவிரி பொங்கி எழுந்து கிணறு குளம் குட்டை ஏரி என்று அனைத்தையும் நிரப்பி வழிந்தது. ஊரே காவிரி ததும்பும் காலம். பொய்கையின் வடிகாலை முழுவதுமாக திறந்து விட்டிருந்தார்கள். தண்ணீர் வருவதும்  தொடர்ந்து வெளியேறுவதுமாக பொய்கையின் கலங்கல் தெளிந்து கொண்டிருந்தது. நடேசனை எதிர்பார்த்து சுப்பு காத்திருந்தான். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வர இவ்வளவு நேரமா? முதல் முறை சந்தித்ததிலிருந்தே  சுவாமிமலை தரிசனம் பண்ணனும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அந்தி காற்றும், வரும் தண்ணீரும், வெளியேறும் தண்ணீரும் சேர்ந்து கொள்ள பொய்கை தன்னைத்தானே சுழற்றிக்கொண்டு அலையடிக்கத்தொடங்கியது. நடேசனின் நாவலில் வரும் முசிறி காவிரியும் ,கரைவேலி கிராமங்களும் மனதில் வந்து போயின. ஆலங்கட்டி மழைவிழ சிறுவர்கள் ஆலங்கட்டிகளை பிடிக்க மழைக்குள் ஓடுவது அழகான தொடக்கம். வானத்திலிருந்து ஆலங்கட்டி கையில் விழுந்து  பார்த்துகொண்டிருக்கும் போதே அது கைசூட்டில் கரைவதை போன்ற விவசாய வாழ்க்கையை அந்த நாவல் மூலம் வாசிப்பவருக்கு ...

மொட்டு மலர் அலர்

 [வாசகசாலை இணைய இதழ் 2025 ஆகஸ்ட் இதழில் வெளியான சிறுகதை] மொட்டு மலர் அலர் பௌர்ணமி அதிகாலை. வாசல் தெளிக்க கதவை திறக்கும் போது மேற்கே கொல்லிமலைத்தொடரின் சிகரம் ஒன்றில் முழுநிலா அமர்ந்திருந்தது.  நிலாவை மெல்ல மெல்ல மலை விழுங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று எழுந்த உடுக்கை ஒலியில் என்  கைகளிலிருந்து தண்ணீர் வாளி நழுவியது. கிழக்கு பக்கம் அந்த இரண்டாம் வீட்டின் வெளிமுற்றத்தில் உடுக்கை அடிக்கிறார்கள். வாளியை எடுத்து எதிரே இருந்த கிணற்றடி தண்ணீர் குழாயின் கீழ் வைத்துவிட்டு நின்றேன். மேற்குவீட்டு அக்கா அடுத்த குழாயடியில் வாளியை வைத்தாள். “உடுக்கு சத்தத்துல திடுக்குன்னு நெஞ்சு பதறி போச்சு..அது என்னமோ நம்ம நெஞ்சுக்குள்ள அடிக்கறாப்ல,” “ம்,” “ நேரங்கெட்ட நேரத்துல வயலுக்கு போறதுனால பயந்துருப்பாளோ ,” “முல்லையும் ஒத்தையாளவே எல்லாத்தையும் பாக்கனுல்லக்கா..”  பெருமூச்சுவிட்டவாறு வாளியை தூக்கிக்கொண்டு சென்றாள். வயல்காட்டிற்கு செல்லும் பசுக்கள், ஆடுகள், காகங்கள் ,சிட்டுகள் ,குயில்கள் தவிர வாசல்களை பெருக்கும் தென்னம்விளக்குமாறுகளின் ஓசைகள். வாளியிலிருந்த தண்ணீர் துளிகள் தரையில் விழ விழ காலைநே...

அந்தராளம்

[ ஆகஸ்ட் 2025 ஆவநாழி இதழில் வெளியான சிறுகதை] அந்தராளம் இன்னும் விடியவில்லை. கிழக்கே விடிவெள்ளி வரும் நேரம். மொட்டை மாடியில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தேன். வலது கை தானாகவே மனதில் ஓடும் தாளத்திற்கு ஏற்ப தொடையில் தட்டிக்கொண்டிருந்தது. முடியிலிருந்து சொட்டிய ஈரம் முதுகில்  நனைத்திருந்த இடத்தில் காற்று பட்டு உடல் சிலிர்த்துக் கொண்டது. தாளமிடும் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். தவிப்பு தொண்டையை அடைத்தது. கூடாது..மனதை அடக்கிக்கொண்டேன். அலைபேசியில் ஏதோ விளம்பர குறுஞ்செய்தி மடக் என்றது. மனதை மாற்றுவதற்காக எழுந்து நடக்கத் தொடங்கினேன். அந்தப்பக்கம் கொட்டிலில் விளக்கெரிந்தது. ரங்கனிற்கு தானமாகக் கொடுக்கப்படும் சிறுகன்றுகள் வளரும் கொட்டில். அந்த செம்புநிறக் கன்றை இப்போதுதான் பார்க்கிறேன். இங்கும் அங்கும் மருள விழிப்பது நன்றாக தெரிகிறது. பட்டையாக மையெழுதியது போன்ற தடம் கொண்ட மணிக்கண்கள். அது நிற்கும் இடத்திலிருந்த கல்தூணை தலையால் இடிக்கிறது. சிறிது நேரம் கழித்து முகவாயை தூணில் தேய்க்கிறது. பின் நெற்றி. மீண்டும் தலையால் தூணை முட்டிவிட்டு இருகால்களால் மண்டியிட்டு நாவால் தடவ...

அரும்பு

  சாயுங்கால வெயில் தணிந்திருந்தது. எங்கள் சுற்றுக்குள் உள்ள நான்கு வீடுகளிலும் மதியஉறக்கம் முடித்த அம்மாக்களின் நடமாட்டம் தொடங்கியது. நான்கு வீடுகள் சுற்றியிருக்க வீடுகளுக்கு நடுவில் உள்ள சிமெண்ட் தளம் இறகுபந்து விளையாட்டு பயிற்சிக்களம் அளவுக்கு மேல் இருக்கும். தெற்கு ஓரத்தில் பழைய கிணறு ஒன்று. அதன் முடிவில் கிழக்கு பார்த்த சுற்றுசுவரில் பெரிய இரும்பு கதவுகளின் முன்னே வண்டி வந்து நின்றது. சனிக்கிழமை என்பதால் வங்கியிலிருந்து சீக்கிரமே அப்பா வந்துவிட்டார். நான் அவருக்கு கைக்காட்டிவிட்டு ஓடிப்போய் கதவுகளைத் திறந்துவிட்டேன். திரும்பி வந்து துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டேன். அவர் ஹீரோ ஹோண்டாவை உள்ளே தகரதாழ்வாரத்தின் அடியில்  நிறுத்தி விட்டு கருப்பு தோள்பையை கையில் பிடித்தபடி என் அருகில் வந்து நின்றார். “எப்பப்பாத்தாலும் இந்த ஹெட்ஃபோனை மாட்டிக்கிட்டே திரியற. யாரு பேசறதையும் கேக்கறதில்ல,” “பாட்டு கேக்கறது ஒரு தப்பாப்பா,”  “பொழுதன்னைக்கும் பாட்டா..லீவ்ல கம்ப்யூட்டர் க்ளாஸ் போகனுன்னியே..என்னாச்சு..இப்படிஒக்காந்து ஒக்காந்தே துவைக்கற கல்லை தேய்க்கப்போறியா,” “இல்லப்பா..விசு ஸ்டார்...

அமுது

  காரைக்கால் துறைமுகம் அந்திக்கு முந்தைய பரபரப்பில் இருந்தது. கடல்புறத்து அங்காடிகளையும், கடலையும் பார்த்தபடி திலகவதி கடல்திசை நோக்கி திறந்திருந்த பூக்கண் சாளரத்தின் அருகில் நின்றாள். விரல்கள் சாளரங்களின் இடைவெளிகளை பற்றியிருந்தன. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பரமதத்தன் கடலேறி சென்று ஒரு திங்கள் ஆகியிருந்தது. கண் முன்னே கடல் தழும்பிக்கொண்டிருந்தது. பரதவர்கள் கட்டுமரங்களை கரையில் இழுத்துவிட்டுக்கொண்டிருந்தனர். பரமதத்தனை நினைக்கும் போதே அவளுக்கு  தொண்டையில் விண்னென்று ஒரு வலி வந்து போனது. வரும் திங்களோடு அவளுக்கு பதினாறு அகவை திகைகிறது. கடல் அலைகளை பார்த்துக்கொண்டு வரையப்பட்ட ஓவியம் போல நெடுநேரம் நின்று கொண்டிருந்தாள். ஒரு சில கணங்கள் புறாவென தத்தும் விழிமணிகள் பின்  கடலில் நிலைகொண்டன. மென்னிளம் மாங்கொழுந்தின் நிறம் அவளுக்கு. எதிரே மேற்கு சாளரத்தின் வழி வந்த ஔிப்பட்டு அவளின்  மஞ்சள் பூசிய முகம் வியர்வையில் மினுங்கியது. “இப்படியே நாள் பொழுது இல்லாமல் உப்புக்காற்றில் வெயில்பட நின்றால் உடல் வெம்பிப்போய் விடும் புனிதா,” என்று சொல்லியபடி பூங்கொடி உணவுத்தட்டை மனைபலகைக்கு கீ...

விக்ரமாதித்தனும் வேதாளமும்

 [  2024 அக்டோபர் வாசகசாலை  100  வது இதழில் வெளியான சிறுகதை] விக்ரமாதித்தனும் வேதாளமும் கயிற்று கட்டிலில் படுத்திருக்கிறேன் . அதன் கீழே பெரிய வலை . அதற்குள் விழுந்து விடுவனோ என்று கட்டில் சட்டத்தை இறுக்கிப்பிடிக்கிறேன் .   அந்தரத்திலிருந்து ஒரு முகம்   என்னை     குனிந்து பார்க்கிறது . அதன் கண்களில் எத்தனை குளுமை . கமலா .. என்று அழைக்க நினைக்கிறேன் .   குரல் எழவில்லை .   விழித்துக்கொண்டேன் .     தேகத்தை சிரமப்பட்டு அசைத்து நிமிர்ந்து படுத்தேன் . நான் படுத்திருப்பது ரயில் பெட்டியின் கீழ்     படுக்கை . ஒன்றிரண்டு படுக்கைகளில் ஆட்கள் இல்லை . வானம் வெளுக்கும் நேரத்தில் மெட்ராஸ் வந்துவிடும் . அதற்குள் யாருக்காவது காகிதம் எழுத வேண்டும் .   பங்குனி மாதம் . ஜன்னலுக்கு வெளியே பார்ப்பவருக்கு நேரங்கொடாமல்   அதிகாலை காட்சிகள்   ஓட்டப்பந்தயம் நடத்தின . பஸ் பிரயாணம் ஒரு சுகானுபவம் . மெல்ல வெற்றிலை போடுவது போல . எரிச்சல் கொண்ட கண்கள்   களைத்து வந்தது . ...