புரவி ஜூலை இதழில் வெளியான கட்டுரை. பேரெழிலின் சங்கமங்கள் எழுத்தாளனுடைய, கவிஞனுடைய, இசைக்கலைஞனுடைய, ஓவியனுடைய, சிற்பியுடைய, யோகியுடைய பார்வையிலிருக்கும் அதே பாவத்தோடு ஒன்றிப் போகச்செய்யும் போது படைப்பாளனும் நுகர்வோனும் ஒரு பிறப்புகணத்தின் இரு பகுதிகளாகின்றனர். _ நித்ய சைதன்ய யதி நாவலாசிரியர் அஜிதன் உத்ரகண்டில் உள்ள ருத்ரபிரயாகையில் நாவல் தொடங்குகிறது. பிரயாகை என்றால் சங்கமம். மைத்ரி என்றால் ஒருமை. மிச்சமின்றி சங்கமித்தல். மனிதனும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். இயற்கையும் இயற்கையும் சங்கமிக்கும் இடங்கள். மனிதரும் மனிதரும் சங்கமிக்கும் உணர்வு நிலைகள். மனமும் மனமும் சங்கமிக்கும் இடங்கள். ஆணும் பெண்ணும் சங்கமிக்கும் இடங்கள். இறுதியில் தானே தன்னை அறிந்து தன்னுடன் சங்கமிக்கும் ஒரு அறிதல் நிலையில் நாவல் முடிகிறது. மேலே கூறியவை எழுத்தாளர் அஜிதனின் ‘ம...
ஒரு விதை எத்தனை எளியது இந்நிலத்தில், செடிகளில் கொடிகளில் மரங்களில் என்று ஒரு விதை எத்தனை எளியது இந்த நிலத்தில், காற்றில் பறந்து .. நிலத்தில் கிடந்து...நீரில் மிதந்து...எத்தனை புரளல்கள் அதன் வழியில், நிலத்தில் நின்று நீரில் நனையும் ஒரு விதையில் முளைவிடும் உள்ளுணர்விற்கு முன்பு, ஒரு விருட்சத்தின் விதை எத்தனை எளியது இந் நிலத்தில்.. 🌳 கமலதேவி