Posts

Showing posts from September, 2023

வெந்தழலால் வேகாது 5

Image
      [வாசகசாலை 2023 செப்டம்பர் 2 இதழில் வெளியான கட்டுரை]                   கரிசலின் கனி புன்செய் நிலத்தில் அறுவடை முடியும் காலத்தில், மேய்ச்சல் நிலம் தேடி எங்கிருந்தோ தங்களின் ஆடுகளுடன் மேய்ப்பர்கள் வருவார்கள். இதை  ஊர்ப்பக்கம் பட்டிப்போடுதல் என்பார்கள். வயல்களின் நடுவில் மெல்லிய மூங்கில் சிம்புகளால் முடையப்பட்ட வளையும் தட்டிகளை வைத்து வலுவான மரத்தடிகளை அங்கங்கே ஊன்றி வட்டமான பட்டிகள் அமைப்பார்கள். ஆடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பட்டிகளின் அளவு இருக்கும். லாந்தர் விளக்குகள், கைத்தடிகள்,முரட்டு சால்வைகளுடன் இருப்பதே பட்டிக்காரர்களின் கலை. சில நாட்களுக்கு ஒருமுறை அந்த தற்காலிகப் பட்டிகளை இடம் மாற்றுவார்கள். இப்படி வயல் முழுவதையும் வளப்படுத்தியப்பின் விதைப்புக்காலத் தொடக்கத்தில்  தங்களின் மேய்ச்சல் கோலுடன் ஆடுகளின் பின்னால் கிளம்பிவிடுவார்கள். சாயுங்காலமானால் ஆடுகளுக்கு தண்ணீர்க்காட்டி  ஆடுகளை பட்டிகளில் அடைப்பார்கள். குட்டியிட்ட ஆடுகள் பட்டிகளுக்கு வெளியே படுத்திருக்கும். கிணற்று மேட்டில் உள்ள தொட்டியில் குளிப்பார்கள்.  பட்டியின் முன் ஈன்றுகொண்டிருக்கும் ஆடு நிற்கும். அதை ஒரு கண்ணில் பா

கிருபா விருது

Image
இது எனக்கான முதல் விருது. எப்போதும் போல எதையும் ஏற்கும் முதல் தயக்கம் இதற்கும் இருந்தது. தமிழினி என்ற பெயர் தந்த நம்பிக்கையில் சரி என்று சொன்னேன். சென்னைக்கு இரண்டாவது முறையாக செல்கிறேன். என்னுடைய முதல் தொகுப்பான சக்யை வெளியீட்டு விழாவிற்கு முதல் முறை சென்றேன். அதே இக்சா மையம். இதுவரையான என்னுடைய ஐந்துபுத்தகங்களும் இங்கு தான் வெளியிடப்பட்டன. அந்த மையத்தின் வெளியில் கத்தரிக்கப்பட்டு நிற்கும் ஆலமரம் என் மனதிற்கு இனிய நினைவு. எங்கு நின்றாலும் அது பெருவிருட்சம். கன்னிமாரா நூலகமும் இந்த ஆலமரமும் ஏதோ ஒரு வகையில் தன் கீழ் அமர்ந்தவர்களை மேல் எழ செய்திருப்பவை. நானும் தங்கையும் தங்கையின் கணவர் குமார் மற்றும் சென்னையில் இருக்கும் உறவுக்காரத்தம்பி மோகனபாபுவும் சென்றோம். எழுத்தாளர் பெருமாள் முருகன் குமாரின் கல்லூரி பேராசிரியர். இருவருக்கும் இனிய ஒரு சந்திப்பு. மனம் ஆழத்தில் இருந்ததால் கண்ணாடியில் இறுக்கமான என் முகம் எனக்கே அன்னியமாக இருந்தது. ப்ரான்சிஸ் கிருபாவின் கவிதைகள் எனக்குள்ளே காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன. சென்னை மேலும் அந்தக்காட்களை தீவிரப்படுத்தியது. நான் அதை தள்ளிக்கொண்டு புறத்துடன் இணைய

காலத்தின் துளி

Image
       [ஜூலை 2023 கவிதை இதழில்  வெளியான கட்டுரை] கவிதை என்பது ஒரு மொழி அனுபவம் அல்லது எடுத்த பாடுபொருளை தொடர்புறுத்தும் விதம் அல்லது உணர்வுநிலை சார்ந்தது என்று பல அவதானிப்புகள் உண்டு.  சில நேரங்களில் மொழியின் ஒவ்வொரு வார்த்தையும் கவிதை என்ற பித்து நிலையும் உண்டாகும். எனக்கு அரங்கன்,அரங்கம் என்ற சொல்லின் மீது தீராத பிரேமை உண்டு. காவிரி நீர் சூழ அவன் கோயில் கொள்ளும் அரங்கம் என்பதில் இருந்து மனம் என்னும் அரங்கில் குடி கொள்பவன் என்பது வரை அதை விரிக்கமுடியும். அவன் குடி கொள்ளும் ஒவ்வொரு சொல்லுமே அரங்கம். ஆழ்வார்களின் கவிதைகளின் ஒவ்வொரு சொல்லிலும் அவன் குடியேறுகிறான். பச்சை மாமலை போல் மேனி என்ற வரியுடன், பசுமை தீப்பிடிக்கும் ஜூன் மாத கொல்லிமலையின் முன் நிற்பது நெகிழ்ச்சியான கவிதானுபவம். அந்த ஒற்றை வரி தீர்வதில்லை. இதே போல பதின்வயதில் வாசித்த இந்த இருகவிதைகள் ஒரு மங்கிய புகைப்படம் போல மனதில் தங்கியிருக்கின்றன. பழைய இதழில் எதேச்சையாக வசித்தக்கவிதை. அந்த வயதில் கவிதைகள் சரிவர புரியாது. இந்தக்கவிதைகளின் எளிமையே இவற்றை நினைவில் இருக்கச் செய்கின்றன. தொடர்ந்து  கவிதைகளை வாசிக்கிறேன். இவை இன்று வரை

கண்ணாடி இல்லாத நாளின் நினைவுகள்

Image
 'இமைகணத்தில்' ஒரு சம்பவத்தை கிட்டி [கிருஷ்ணவிகா] நடத்திவிட்டாள். அவளுடைய மூத்தகூட்டாளியான தனுஷ் ஆவணியாவட்டத்திற்காக பள்ளிக்கூடத்தை 'கட் ' அடித்துவிட்டு ஜாலியாக தங்கை பப்லுவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிட்டி நான்கு நாட்களுக்கு ஊருக்கு சென்று திரும்பியிருந்தாள். அவளைக் கண்டதும் ,"கிட்டு.."என்று அவன் ஓடி வரவும், இவள் அவனைக் அவனைக் கண்ட குஷியில் தாறுமாறாக என் முகத்தில் அடித்துக் குதித்தாள். நான்கு நாட்கள் பிரிவிற்கு இத்தனை வலிமை இருக்கும் என்று நினைக்கவில்லை. என் கண் கண்ணாடியின் சட்டம் உடைந்து கீழே விழுந்ததை கண்டுகொள்ளாமல் இரண்டும் குதித்து விளையாடத் தொடங்கியது. என் கண்கள் புகைமூட்டமாகி பார்வை கலங்க திகைத்து அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கூட கண்ணாடியில்லாது  ஜீவிக்க முடியாத ஜீவன். மணி காலை பதினொன்று. இனி துறையூர் வரை செல்வது சாத்தியமில்லை. குழந்தைகளும் மூத்தவர்களுமாக குடும்பம் அப்படி. முதல் நாளே 'திட்டம்' போட வேண்டும்.  புதிதாக நடைபயின்ற குழந்தையும் ஊர்சுற்றும் பப்பியும் ஒன்று என்று பழமொழி உண்டு. [நாய் என்று சொல்ல மனம் துணியவில்லை]. நாள் முழுதும் நடந