Posts

Showing posts from December, 2022

2022_ மீண்டும் மீண்டும்:2

Image
விடைபெறுதலும் தொடக்கமும்  2022 ஜனவரியில் என்னுடைய நான்காவது சிறுகதை தொகுப்பான கடல் வெளியானது. என்னுடைய சிறுகதை தொகுப்பில் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுப்பு கடல் என்று நினைக்கிறேன். வாசகசாலையின் ஸ்பாட் லைட் நிகழ்வில் விமர்சகர் ஜா.ராஜகோபாலன் கடல் தொகுப்பை குறித்த முக்கியமான உரையை வழங்கினார்.  வழக்கம் போல இந்த ஆண்டும் தொடர்ந்து மாதம் ஒரு சிறுகதை வெளியானது . இரண்டு மாதங்கள்  இரண்டு மூன்று கதைகள் வெளியாகின.  வெந்தழலால் வேகாது கட்டுரை தொடருக்காக தொடர்ந்து கி.ராவையும் அழகிரிசாமியையும் வாசிக்கிறேன். நிதானமாக ஒரு நாளைக்கு இருகதைகள் என்று வாசிக்கிறேன். துணை நூல்களாக அழகிரிசாமி கி.ராவிற்கு எழுதிய கடிதங்கள்,கி.ராவின் சங்கீத நினைவலைகள்,பெண் எனும் பெருங்கதை,முரண்பாடுகள் என்ற நாடகம்,கரிசல் காட்டு கடுதாசி மற்றும் கி.ராவின் உரைகளை, பேட்டிகளை யூடியூபில் பார்க்கிறேன். இந்த நேரத்தில் அழகிரிசாமியின்   கொலாக்கால் திரிகை என்ற  ஆவணப்படத்தை பார்த்தது முக்கியமானது. எப்போதும் ஒரு எழுத்தாளரின் நூலை முடித்தப்பின் அடுத்ததாக என்ன என்று பார்ப்போம். இந்த நண்பர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் இணையாக வாசிப்பது புதுவாசிப்பு அன

2022 _ மீண்டும் மீண்டும்;1

Image
                    மீண்டும் மீண்டும் எப்போதும் ஒரு ஆண்டின் இறுதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப்பார்க்கும் போது புத்தகம் வாசித்தது தான் அந்த ஆண்டின் பொருள் உள்ள செயலாகத் தோன்றும். இந்த ஆண்டு என்ன வாசித்திருக்கறேன் என்பதும் , என்ன எழுதியிருக்கிறேன் என்பது முக்கியமானது. முன்பெல்லாம் டைரியின் பின்புறம் எழுதி வைப்பேன். இப்பொழுது அந்த நல்லப்பழக்கத்தை விட்டுவிட்டேன். மீண்டும் தொடங்க வேண்டும். எப்பொழுதும் போல வாசிக்காத ஒரு நாள் இல்லை என்பது நிறைவளிக்கிறது. எழுத்தாளர் அஜிதனின் முதல் நாவலான மைத்ரியை என் பிறந்தநாளன்று வாசித்தேன் என்பது சட்டென்று நினைவிற்கு வருகிறது. அன்றே நாவல் பற்றி பேரெழிலின் சங்கமங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அது புரவி இதழில் வெளியாகியது. ஒரு இளம் எழுத்தாளரின் முதல் நாவல் வெளியான உடனே வாசிப்பது இது தான் முதல் முறை. அதுவே மனதிற்கு பரவசமாக இருந்தது. அதுவுமில்லாமல் அஜிதனை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்து நாவல் பற்றி பேசியதும் நிறைவளிக்கிறது. புத்தம் புதிதாக எழுதுபவர்களை பார்ப்பதே உற்சாகமளிக்கும் என்று அன்று உணர்ந்தேன். நான் சுனிலை,கார்த்திக்கை,அகரமுதல்வனை,விஷால

நேர்காணல்: எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்

Image
 புரவி அக்டோபர் இதழில் வெளியான எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களுடனான நேர்காணல். எழுத்தாளருக்கும் புரவிக்கும் என் அன்பு. சலனத்துடன் உறைதல் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழில் தொடர்ந்து இயங்கும் முக்கியமான படைப்பாளி ஆவார். மூன்று நாவல்கள்,இரண்டு சிறுகதை தொகுப்புகள்,ஒரு கவிதை தொகுப்பு,மொழிபெயர்ப்புகள்,நேர்காணல்கள் என்று தமிழ் இலக்கியத்தின் பல வகைமைகளில் தொடர்ந்து எழுதுகிறார்.  அம்மன் நெசவு,மணல்கடிகை,மனைமாட்சி என்று மூன்றுநாவல்கள் எழுதியுள்ளார். இதில் மனைமாட்சி என்ற நாவலை மையப்படுத்திய நேர்காணல் இது. ஆண் பெண் அன்பின் பின்னணியில் உருவாகிவந்த நம்  சமூகஅமைப்பு  எதிர்கொள்ளும் சிக்கல்களை இந்த நாவல் பேசுபொருளாக கொண்டுள்ளது. இந்த நொடியில் நாம் காண்பது முந்தின நொடியில் கண்ட அதே நதியை அல்ல என்ற வரியை எப்போதோ வாசித்த ஞாபகம். அதே போலதான் சமூகம் வரையறுத்த வாழ்வியல்எல்லைகள். கண்முன்னே நகர்ந்து செல்வது தெரியாமல் நகர்ந்துவிடும். அப்படி நிறைய எல்லைகளை படிப்படியாக கடக்கும் போது ஒரு சந்தியில் திசைமாறலாம். இன்னொன்றில் சங்கமித்து பெருக்கெடுக்கலாம். அப்போது மாற்றங்கள் கண்முன்னே நடக்கின்றன. மாற்றங

செம்புலம் : சிறுகதை

Image
ஆகஸ்ட் மாத ஒலைச்சுவடி இணையஇதழில் வெளியான சிறுகதை செம்புலம் வேட்டுகளின் அடுத்தடுத்த ஒலிகள்  அந்த கருக்கல் நேரத்தை அதிர உசுப்பியது. மரங்களில், வயல்வெளிகளில் உறங்கிய பறவைகள் விலங்குகள் சட்டென்று கலைந்து சத்தமிடத் தொடங்கின. ம்மா என்ற பசுக்களின் கார்வையான அடிக்குரல் அழைப்புகளால், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகளில் விளக்கொளிகள் ஒவ்வொன்றாக ஔிர்ந்தன. பரவும்  புகைப்போல சுற்றிலும் மெல்லிய குளுமை பரவியிருந்தது. என் கண்களுக்கு முன் இருள் கலங்காமல் அழுந்தி நின்றது. தலைக்கு மேல் இருளில் ஆலிலைகள் அசையாமல் செறிந்திருந்தன. வேட்டுகளின் அதிர்வுகளால் நெஞ்சு படபடத்து அடங்கும் வரை படுத்திருந்துவிட்டு எழுந்து அமர்ந்தேன். எதிரே சாலையில் நாய் ஒன்று காதுகளை செங்குத்தாக விடைத்தபடி கண்களை இடுக்கிக்கொண்டு நான்குபுறமும் பார்த்துவிட்டு  படுத்துக்கொண்டது.   எங்கிருக்கிறேன் என்று இன்னும்  நினைவுக்கு எட்டவில்லை. சட்டென்று காயத்தில் வெயில் படர்வதைப்போல உடலில் ஒரு எரிச்சல். இப்பொழுதெல்லாம் அவ்வப்போது இப்படித்தான் உடல் எரிச்சல் வருவதும் மறைவதுமாக இருக்கிறது. மீண்டும் கருங்கல் தரையில் உடல் பட படுத்துக் கொண்டால் தேவலை

என் வயலையும் காத்துக்கொள்க

Image
 ஊரில் கார்த்திகை மாதம் மிக உற்சாகமான மாதம். ஐப்பசியில் நடவு வேலைகள் முடித்து பயிர் தலைதூக்கும் காலம். ஊரை சுற்றி கொல்லிமலை அடிவாரத்தை எங்கெங்கு காணினும் சீரகசம்பா நெல் குத்துகள். பறிந்து நட்ட பயிர்கள் தண்ணீர் தேங்கிய வயல்களில் வேர்பிடிக்க தொடங்கும் காலம். நிலமே குழந்தையாகி நிற்பதைப்போல இருக்கும். நுண்ணுணர்வுள்ள விவசாயி கண்கலங்குவார். உற்சாகமான விவசாயி தொடை தட்டி சிரித்துக் கொள்ளலாம்.  கார்த்திகை முதல் ஞாயிறு ஒவ்வொரு வீட்டிலும் மாரியம்மன் வழிபாட்டுடன் கார்த்திகையின் பயிர்பொங்கல் தொடங்கும். இந்த மாதம் முழுக்க ஊரே மணக்கும். வயல்களை சுற்றி எத்தனை எத்தனை சிறு தெய்வங்கள்.  அத்தனைக்கும் பொங்கலும் சேவல்களும் கிடாய்களும் பலிகொடுக்கப்படும். பலிகொடுக்காதவர்களின்  சர்க்கரைப்பொங்கலுக்காக தெய்வங்கள் புன்னகைக்கும் காலம்.  அதுவும் இல்லை என்றால் ஒரு சூடம் ,பத்தி. பயிரை காக்கவும், பாம்பு போன்ற விஷ உயர்களிடமிருந்து தங்கள் உயிரை காக்கவும் வைக்கப்படும் பொங்கல் வழிபாடு.  தீபாவளி வெடிகளால் என்னை பதட்டப்படுத்தி மிரட்டி சிரிக்கும் விழா. கார்த்திகை தீபம் எனக்கு மிகப் பிடித்தவிழா.  இந்தநாளில்தான் என் முதல்சிறுக