சில சமயம் கவிதை வரிகள் மனதின் அகால த்திலிருந்து சட்டென்று நினைவிற்கு வருவதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. நாம் அதற்கான சரியான காரணங்களைக் கூடசொல்லிவிட முடியும். நம் சூழல் மற்றும் உடல்நலம் அல்லது மனநிலை தூண்டலால் அப்படி நினைவிற்கு வருகிறது என்று சொல்லலாம் தான். ஆனால் பதினோரு வயதில் பள்ளிப் படமாக வந்த கவிதை எப்படி மின்சாரம் இல்லாத அமாவாசை இரவில் வானத்தை நிறைத்திருக்கும் விண்மீன்வெளியிலிருந்து குதித்து வருகிறது ஒரு மழை துளியை போல. விண்வெளி என்பது நம் மனம் தானா? மண்ணை விட வானம் நமக்கு ஏன் இத்தனை அணுக்கமாக இருக்கிறது? தமிழ் வழி கல்வியில் அரசு பள்ளியில் மனப்பாடம் செய்ய சிரமப்பட்ட ஆங்கிலகவிதை வரிகள் இன்று வானத்தை பார்க்கும் போது சட்டென்று மனதில் ஓடியது. நம் அனைவருக்குமே தெரிந்த வரிகள். கவி ராபர்ட் ப்ராஸ்ட்டின் வரிகள். The woods are lovely dark and deep But I have promises to keep I have miles to go before I sleep I have miles to go before I sleep 6 ம் வகுப்பில் பாடப் பகுதியாக வந்த கவிதை. இப்போதெல்லாம் சில நேரங்களில் பள்ளிப் படங்களிலிருந்து இத்தகைய வரிகள் மனதில் ...
நேற்று ஒரு கதை எழுதுவதற்கு பாலைநில மலர்களை தேடி பார்த்துகொண்டிருந்தேன். குறிப்பாக இஸ்ரேல் பாலை நில மலர்களை பார்த்தேன். கூகுள் அதாகவே அடகாமா பாலைவன மலர்களை காட்டியது. எத்தனை வகை மலர்கள். எத்தனை நிறங்களில்! பாலைநிலத்தின் வசந்த காலங்களில் மிகக்குறைவான மழைக்குப்பின் இந்த மலர்கள் சட்டென்று மலர்கின்றன. நம் கள்ளி பூப்பது போல. நல்ல இரத்த நிறத்தில் பாலைவன ட்யூலிப்பை பார்த்ததும் இயேசுவின் படங்களில் அவர் மீதுள்ள சிவந்த சால்வை மனதில் வந்தது. பாலைவனத்தில் ,மணலின் கொதிக்கும் வெம்மையில், இத்தனை மலர்செடிகளின் விதைகள் உயிர்காத்து, ஒருமழையைக்காத்து, ஒருகாலநிலையை காத்து நிற்கிறது என்பதை நினைக்கும் போது இயற்கையின் இயல்பை நினைத்து மனம் பரவசமாகிறது. வரிசையாக பூக்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெண்மையும் மஞ்சளுமாக ஒருவகை மலர். அது என்னவோ என்னை மறுபடி மறுபடி பார்க்க செய்தது. உள்ளுக்குள் அதுவோ என்ற எண்ணம். அப்படி இல்லை என்றால் பதின் வயதின் அழகான சித்திரம் ஒன்று உடைந்து விடுமே என்று அந்தப் பூவின் பெயரை பார்ப்பதை தவிர்த்தேன்.இதற்கு முன்பும் சிலமுறை அந்தப்பூவை தேடும் ஆவலை தவி...