Skip to main content

Posts

Showing posts from August, 2026

வேர்ட்ஸ்வொர்தின் பொன்மலர்

 நேற்று ஒரு கதை எழுதுவதற்கு பாலைநில மலர்களை தேடி பார்த்துகொண்டிருந்தேன். குறிப்பாக இஸ்ரேல் பாலை நில மலர்களை பார்த்தேன். கூகுள் அதாகவே அடகாமா பாலைவன மலர்களை காட்டியது.  எத்தனை வகை மலர்கள். எத்தனை நிறங்களில்!  பாலைநிலத்தின் வசந்த காலங்களில் மிகக்குறைவான மழைக்குப்பின் இந்த மலர்கள் சட்டென்று மலர்கின்றன. நம் கள்ளி பூப்பது போல.  நல்ல இரத்த நிறத்தில் பாலைவன ட்யூலிப்பை பார்த்ததும் இயேசுவின் படங்களில் அவர் மீதுள்ள சிவந்த சால்வை மனதில் வந்தது.  பாலைவனத்தில் ,மணலின் கொதிக்கும் வெம்மையில், இத்தனை மலர்செடிகளின் விதைகள் உயிர்காத்து, ஒருமழையைக்காத்து, ஒருகாலநிலையை காத்து நிற்கிறது என்பதை நினைக்கும் போது இயற்கையின் இயல்பை நினைத்து மனம் பரவசமாகிறது.  வரிசையாக பூக்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெண்மையும் மஞ்சளுமாக ஒருவகை மலர். அது என்னவோ என்னை மறுபடி மறுபடி பார்க்க செய்தது. உள்ளுக்குள் அதுவோ என்ற எண்ணம். அப்படி இல்லை என்றால் பதின் வயதின் அழகான சித்திரம் ஒன்று உடைந்து விடுமே என்று அந்தப் பூவின் பெயரை பார்ப்பதை தவிர்த்தேன்.இதற்கு முன்பும் சிலமுறை அந்தப்பூவை தேடும் ஆவலை தவி...

லில்லி மலர் பூக்கும் நிலம்

  ( முனைவர் யோ . ஞான சந்திர ஜாண்சன் அவர்களின் கிறித்தவக்காப்பியங்கள் நூலை   முன் வைத்து … ) காப்பியம் என்பதும் காவியம் என்பதும் ஒரே பொருள்படுபவை . வடமொழியில் காவியம் . தமிழில் காப்பியம் . தமிழில்   1. ஐம்பெருங்காப்பியங்கள் 2. ஐஞ்சிறுகாப்பியங்கள் 3 . சமயகாப்பியங்கள் என்ற வகைமைகள் உள்ளன . சமய காப்பியங்களுள் கிருத்துவ காப்பியங்கள் வருகின்றன . சைவ வைணவ காப்பியங்கள் பக்தி காலகட்டத்தை சேர்ந்தவை . இதன் காலம் தோராயமாக பத்தாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை.  கிருத்தவக்காப்பியங்களின் காலம் கிருத்தவர்கள் நம் நாட்டிற்குள் வந்த காலகட்டத்தில் துவங்குகிறது . இந்தியாவில் முதன்முதலாக அச்சான மொழி தமிழ் . இயேசு சபை துறவியான ஆன்ட்ரிக் அடிகளார் கோவாவில் தமிழில் உலோக அச்சுகள் உருவாக்கி பயன்படுத்தி தமிழ் அச்சு வரலாற்றை தொடங்கி வைக்கிறார் . 1570 களில் இந்த தொடக்கம் நிகழ்ந்து விட்டது . கொல்லத்தில் முதல் நூலான தம்பிரான் வணக்கம் அச்சடிக்கப்படுகிறது . தமிழில் அச்சு நூலாக வந்த முதல் நூல் ஒரு மொழி ...