Posts

Showing posts from June, 2023

மூங்கில் காடு : சிறுகதை

Image
       ஜூன் 2023 சொல்வனம் இணைய இதழில்   வெளியான சிறுகதை                     மூங்கில்காடு   அனுமன் எரித்த பொன்இலங்கையின் அதிகாலை அது. கதிரவனின் முதல் கீற்று நிலத்தில் விழும் பொழுதில் முக்கூடல் மலைச்சரிவிலுள்ள அந்த  மூங்கில் காட்டின் மூங்கில்கள் பொன் நிறத்தில் பூத்திருந்தன. கதிரவனின் ஔிப்பொறிகளை கோர்த்ததைப் போன்று மூங்கில் காடு முழுவதும்  பொன்மலர் சரங்களாக மலர்ந்திருந்தன. இலங்கைவாசிகள்  அனைவரும் மூங்கில் பூத்த  நிலத்தின் வசீகரத்தை அஞ்சினர். அழிவின் காலம் என்று சாமியாடிகள் சிறுகுடி விழாக்களில் அருள் வந்து கூறினார்கள். அது இலங்கை முழுவதும் பரவியதால் மக்கள் அந்த அதீதமான அழகையும்  அபசகுனம் என்று எண்ணினார். அடுத்த ஒருசில நாட்களிலேயே அனைத்தும் இயல்பாக மாறினாலும் இலங்கை எரிந்ததை கண்முன்னால் கண்ட ஒவ்வொருவர் மனங்களிலும் அது அனுதினமும் அணையாது எரிந்தது. அரசன் அரியணையில் இருக்கும் காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட ‘எரிப்பறந்தெடுத்தலால்’ அதிர்ந்திருந்தது இலங்கை. அதிகாலையில் திடுக்கிட்டு விழித்த பெண்கள் தங்களின் சிறுமக்களை அணைத்து கண்ணீர்விட்டனர். அப்பால் உறங்கும் துணைவர்களை நீர் நிறைந்த கண்களால் பார்த்து ம

மாயை : சிறுகதை

Image
       [2020 ல் எழுதிய சிறுகதை]                                                                        மாயை சிலநாட்களாக பெய்து கொண்டிந்த மழையால் ஆறு பெருகி ஏரிகளில் வாய்க்கால்களில் ஓடைகளில் நிறைந்து அலையடித்துக் கொண்டிருந்தது.இருட்டிற்குள் நீரின் மினுமினுப்பு மட்டும் கண்களுக்குத் தெரிந்தது.ஸ்கூட்டியின் பின்புறம் அமர்ந்திருந்த பாரிஜாதத்தின் கண்களிலும் அதே ஈரமினுமினுப்பு. இருவரும் நேரம்காத்து ஏரிக்கரையில் நின்றார்கள்.ஏரிக்காற்று தயங்கித்தயங்கி நகர்ந்து சென்றது.மேட்டிலிருந்து நோக்க தெருவின் கோடியில் பந்தல் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.சிவராசு வண்டியின் இருக்கையை தட்டியபடி சட்டென்று பேச்சை துவங்கினார். “பாரி…பாரிஐாதம்..”  கிழக்கு பக்கம் திரும்பியிருந்த பாரிஜாதம் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஒற்றை வைரம் மூக்கில் ஔிரும் முகம் கண்டு அவர் கண்களை சுருக்கிக்கொண்டார்.சிரித்தாலும் புன்னகைத்தாலும் அழுதாலும் வராத முகவசீகரம் சோகத்தின் மென்மையில் இவளுக்கு வந்துவிடும்.அவளுக்கு பின்புறம் கிழக்குவானில் பச்சைமலைத்தொடரின் பின்னிருந்து மந்தமான சூரியஔி பரவத்தொடங்கியது. “அவரு சரியில்லன்னு கேள்விப்பட