Posts

Showing posts from February, 2024

வாடிவாசல்

Image
 [2024 ஜனவரி நடுகல் இணைய இதழில் வெளியான கட்டுரை] எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் குறுநாவலான வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. எண்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குறுநாவல்.  மதுரை பக்கமிருக்கும் ஊரில் நடக்கும் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வே அதன் கதை.  ஜல்லிக்கட்டிற்காக ஆட்களும் காளைகளும் சங்குவாடியை நோக்கி ஒரு வெயில் மதியத்தில் கிளம்பி சாரி சாரியாக வருவதில் இருந்து கதை தொடங்குகிறது. பொழுது அணையும் நேரத்திற்காக கும்பல் காத்திருக்கிறது.  காளைகளை ஜல்லிக்கு விடும் வாடி வாசல் அருகே கூட்டம் இடித்துக்கொண்டிருக்கிறது. வாடிவாசலின் வலதுபுறம் ஊன்றப்பட்ட பனை மரத்தின் பக்கத்தில் திட்டிவாசலில் பிச்சி நிற்கிறான். அவன் ஒரு மாடுபிடி வீரன். அவனுடைய சகா மருதனும் உடன் இருக்கிறான். அவர்களுக்கு அருகில் நிற்கும் ஜல்லிக்கட்டு பார்வையாளரான கிழவர் அவர்களுக்கு பேச்சு துணையாகிறார். பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பார்க்கும் அவர் தன் அனுபவங்களை அந்த இளைஞர்களிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். செல்லாயிசாட்டு முடிந்து ஜல்லிக்கட்டு துவங்கப்படும் வழக்கம் முதல் ஜல்லிக்கட்டு என்ற நிகழ்வை சார்ந்த அனைத்து தகவல்களும், நுணுக்கங்களும்

இற்றைத்திங்கள் அந்நிலவில் 8

Image
 [2024 பிப்ரவரி  சொல்வனம் இணையஇதழில் வெளியாகிய கட்டுரை] வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் காக்கைப்பாடினியார் நச்செள்ளை குறுந்தொகையில் ஒரு பாடலும், புறநானூற்றில் ஒரு பாடலும், பதிற்றுப்பத்தில் ‘ஒருபத்தும்’ பாடியுள்ளார்.  திண்தேர் நள்ளிகானத்து அண்டர் பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே  [குறுந்தொகை 210] தலைவன் தோழியிடம் தான் பிரிந்து சென்ற காலத்தில் தலைவியை நலத்துடன் பார்த்துக் கொண்டதற்காக நன்றி சொல்கிறான். அதற்கு தோழி இந்த தொண்டி நாடு முழுவதும் உள்ள பசுக்கள் தந்த நெய்யுடன்,சேரநாடு முழுவதும் கழனிகளில் விளைந்த சோற்றை கலந்து பலிசோறாக வைத்தாலும் அந்த காக்கைக்கு தகும். ஏனெனில் அது தினமும் நம் இல்லத்தில் கரைந்து உன் வரவை அறிவித்ததாலேயே அவள் நலத்துடன் இருந்தாள் என்கிறாள். இந்தப் பாடலில் நாட்டு வளமும், மக்களின் அன்றாட வாழ்வில் தொடரும் நம்பிக்கையும் சொல்லப்பட்டுள்ளது. காகத்தைப் பாடியதால் நச்செள்ளையார் காக்கைப்பாடினியார் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார். ப

இற்றைத்திங்கள் அந்நிலவில் 7

Image
 [2024 ஜனவரி சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை] தீரத்தின் ஔி சங்கப்பெண்கவிகளின் பாடல்களில் ஒப்பீட்டளவில் அகத்தை விட புறம் பற்றிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு. என்றாலும் துறவு,மன்னனின் வீரம்,இழப்பு,கைம்மை நோன்பு,தோற்றவனின் வீரத்தை வெற்றவன் முன்பாடுதல் என்று விதவிதமான பாடுபாருட்களில் பாடியுள்ளார்கள். மாறிப்பித்தியார் புறநானூறில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் துறவறம் பூண்டவர்களின் துறவு நிலையையும்,முன்னர் உலகவாழ்வில் அவர்களின் நிலையையும் ஒப்பிடும் பாடல்கள். இவரின் இரண்டு பாடல்களும் தாபதவாகை துறையை சார்ந்தவை. இரண்டு பாடல்களிலும் பாடப்பட்ட தலைவனின் தலைமுடியின் அழகு மாறியுள்ளதை பற்றி சொல்லப்படுகிறது. சடாமுடி வளர்த்தல் மற்றும் நறுநெய்யிட்ட மின்னும் கருங்கூந்தல்  சங்கப்பாடல்களில் அங்கங்கே இருப்பதை காணலாம். துறவின் குறியீடாக புரிசடை உள்ளது. ‘ கழைக்கண் நெடுவரை அருவியாடிக் கான யானை தந்த விறகின் கடுந்தேறல் செந்தீ வேட்டுப் புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே [புறம் : 251] இல்லறத்திற்கு பிறகு துறவறம் ஏற்று வாழும் வாழ்க்கையைப் பாடுவது தாபதவாகை எனப்படுகிறது. இரண்டுபாடல்களிலும்  துறவறத்தில் இருக்