Posts

Showing posts from February, 2022

சித்திரக்கூடம்

Image
 தமிழினி ஜனவரி இதழில் வெளியான சிறுகதை. தமிழினியில் இது என் முதல் சிறுகதை. நன்றி:தமிழினி                            சித்திரக்கூடம் ஜன்னலைத் திறந்ததும் மார்கழியின் பனி சட்டென்று அறையினுள் பாய்ந்தது. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு சன்னல்பக்கமாக நின்றேன். வயல்வேலைக்கு செல்லும் ஆட்கள் எப்போதா எழுந்து வாசலில் கோலமிட்டு மண்அகல்களை ஏற்றி வாசல் படிஓரமாக வைத்திருந்தார்கள். அவை சிவந்த பொட்டுப்பொட்டான கனல்துண்டங்களாக கருப்புத்  திரையில் கனன்று கொண்டிருந்தன. மாரியம்மன் கோவில் ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலி பரவி  ஊரின் செவிகளைத் தொட்டு எழுப்பத் தொடங்கியிருந்தது. மாடியறை என்பதால் தெளிவாக கணீரென்ற எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் மார்கழிபனி போல காதுகளில்  நுழைந்தது. காற்றாகி கனலாகி கடலாகினாய்… நிலமாகி பயிராகி உணவாகினாய் தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்… அறையின் விளக்கை ஔிரசெய்தேன். இரவு முழுவதும் வரைந்த படங்களால் நிறைந்திருந்தது சிமெண்ட் தரை. ஒன்றுகூட இதற்கு முன் வரைந்த வடிவங்கள் இல்லை. அனைத்தும் விசிறி இழுக்கப்பட்ட கோடுகளால் ஆன புரியாத வடிவங்கள். இதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை. இதெல்லாம் எப்படி வரைய வரு

என்னுடைய சின்னஞ்சிறு பாற்கடல்

Image
                    ஒவ்வொரு முறையும் குடும்பத்துடன் குலதெய்வத்தின் சன்னிதிக்கு செல்லும் போது உறவில் புதிதாக எதாவது நடந்திருக்கும். திருமணம்,சொத்து வாங்குதல்,வேலை என்று வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் யாருக்கேனும் கைக்கூடியிருக்கும். நோய்களுக்கான வேண்டுதல்களும் அதில் உண்டு. அது சிங்களாந்தபுரம் என்ற ஊரில் பெரிய ஏரிக்கரையின் கீழ் அமைந்த சாமுண்டீஸ்வரி ஆலயம். நான்  வாழ்க்கைப் பற்றிய பொருளின்மையை மனதிற்குள் பொத்தி வைத்தபடி அனைவருடனும் இயல்பாக இருந்துவிட்டு வீடுவந்து சேர்வேன்.  இந்த வாழ்க்கையில் குடும்பமோ, உறவுகளோ, வேலையோ,செல்வமோ, ஏன் கற்றகல்வி கூட மனநிறைவை தரமுடியாது என்பதே எனக்கு  இதுவரையான அனுபவம். என் மனம் வாழ்வின்  நிலையில்லாத தன்மையை பத்து வயதிற்குள் தொட்டுப் பார்த்துவிட்டது என்று இப்போது தெரிகிறது. மிக இளம் வயதில் நீள்நாள் நோய் யாருக்கும் வரக்கூடாது என்பதே என் வேண்டுதலாக இருக்கிறது. நாம் 'செத்து போய் விடக்கூடும்' என்ற கற்பனையோ, நிஜமோ அது எதுவானலும் அந்த சின்னஞ்சிறு மனதை ஊசி முனை போல தொட்டுக் கலைக்கிறது. அது அகம் புறம் என அனைத்தையும் பாதிக்கிறது. தனிமையை உணரச்செய்கிறது. அதிலிருந்து ம

கவிதை என்றும் பெயர் வைத்துக்கொள்ளலாம்

Image
           சொல்வனம் ஜனவரி இதழில் வெளியான சிறுகவிதைகள். நன்றி சொல்வனம். அழகிய ஒன்றிரண்டு வரிகள் சட்டென மூளையில் உதிக்கின்றன. அவற்றை மறந்துவிட மனம் ஒப்புவதில்லை. அதற்கு கவிதை என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம். அப்படியான வரிகளை எப்பொழுதாவது இதழ்களுக்கு அனுப்ப மனம் ஒத்துக்கொள்கிறது.   கல் தன்மீது கடந்து செல்ல தாகத்துடன் நதிநீரில் கிடக்கும் கூலாங்கல் மலர் எட்டுதிசைகளிலும் மத்தகம் உயர்த்தி  நிற்கும் யானைகளின் காலடிகளில் பத்திரமாய் உறங்குகிறது நெருஞ்சியின் சிறுமுகை. பாலை ஒருசொட்டு நீர்போதும் அந்த ஓவியத்தை நிறம் மாற்ற… உகிர் தன் மீது கால்பதித்து தத்தி நடந்து  முதன்முதலாக பறக்கக் கற்றுக்கொண்ட  பறவை கட்டிக்கொண்ட கூட்டை வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது.

கடல் சிறுகதை தொகுப்பை பற்றிய ஒரு குறிப்பு

Image
 சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் கடல் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியுள்ளார். கடல் பற்றிய முதல் குறிப்பு. நன்றி. https://saravananmanickavasagam.in/ கடல் – கமலதேவி: ஆசிரியர் குறிப்பு: திருச்சி மாவட்டம் பா.மேட்டூரில் வசிப்பவர். முதுகலை நுண்ணியிரியல், இளங்கலை கல்வியியல் ஆகிய பட்டப்படிப்புகளைப் படித்தவர். இதுவரை மூன்றுசிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது நான்காவது. நிகழ்காலத்தில் கதை நகர்ந்து கொண்டு போகையில் எந்த எச்சரிக்கையும் இல்லாது, கடந்தகாலம் வந்து கலந்து காலமயக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் கமலதேவியின் கதைகள். Nuclear familyயே நம்மைச்சுற்றிப் பரந்து விரிந்திருக்கும் காலகட்டத்தில், கமலதேவியின் கதைகளில், சித்தப்பா திருமண செய்முறைகளைப் பற்றிப் பேசுகிறார். சித்தி, அக்காவின் குழந்தையை ஆறுமாதத்திற்கு தத்து எடுத்துக் கொள்கிறாள். சுற்றம் சூழ வாய்த்த கதையுலகம் கமலதேவியின் கதைகள். கிராமத்து வாழ்க்கையே பெரும்பாலான கதைகளுக்கான களங்கள். விவசாயத்தை நம்பிய, மண் போகுமுன் உயிரைவிடும் மனிதர்களின் கதைகள். அவர்களது ஆசாபாசங்கள், உறவுச்சிக்கல்கள், அலைக்கழிப்புகள் இவைகளைக் காட்சிப்படுத்துவ

புனைவின் வரை படம்

Image
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இரு நேர்காணல்களின் தொகுப்பானது புனைவின் வரைபடம் எனும் சிறுநூலாக வெளிவந்துள்ளது.  இந்த நூலில் எழுத்தாளர்களின் நேர்காணல் முக்கியத்துவம் குறித்து எஸ்.ரா குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்களின் மனமும்,வாழ்வும்,அன்றாடமும் எழுத்தாளர் அல்லாதவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டவை. பொதுவாக வைக்கப்படும் கோட்டிற்குள் நிற்க திணறுபவை. எழுத்தாளர்களுடைய படைப்புகளுடன் இணைத்து அவர்களுடைய அந்த படைப்பு சார்ந்து அவர்கள் சொல்வதை எழுதுவதை கேட்பதும் வாசிப்பதும் ஒரு துணை வாசிப்பு போல. சிலருக்கு புத்தகமே போதுமானது. அந்த வகையில் துயில் நாவல் குறித்து எனக்கு இருந்த கேள்விகளுக்கு அல்லது நாவல் பற்றிய என் எண்ணங்களின் பகிர்தலிற்கு இந்த நேர்காணல் உதவியாக இருந்தது. அது அவருக்கும் நல்ல நேர்காணலாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன். புரவி இதழிற்கு நன்றி.

விடாய் :முதல் கதை

Image
                            விடாய் ஊரே பயிர்ப்பொங்கலுக்கு சேவல், கெடாய்கைளை ஊர்சுற்றியிருந்த சாமிகளை எண்ணித் தேர்ந்து கைமாற்றி கொண்டிருந்த வெயிலேரும் பொழுதில் மெய்யன் வயல்வெளி கடந்து மாசிகுன்றடிக்கு வந்திருந்தார். கார்த்திகை வெயில் கழனிக்கு நல்லதில்லன்னு சொரக்கா வாத்தியர் சொன்னதை  துன்முகி கார்த்திகையில ஆமான்னு சொல்லுது காடு மேடெல்லாம். தெற்கே கும்பிட்டு “ஓங்கிட்ட இத்தன சுழச்சிக்கு பிறவு இழுத்தாந்துட்ட போறவழிக்கு தொணைக்கு வாய்யா ”என்று ஓங்கி சொல்லிவிட்டு இடைதுண்டை அவிழ்த்து  கரியதோளில் போட்டு வேட்டியை மடித்துக்கட்டி பெரியண்ணசாமியின் எல்லைக்கடந்து தாயம்மாளின் எல்லைக்குள் நுழைந்தார்.  எங்கால் அவமூட்டில் இடிக்குன்னாலும் இடுப்பில் தூக்கிக்கும் அம்மா. விறகை தலையில வைச்சு திரும்பையில முந்தானய புடுச்சிக்கிட்டு ஓடிவரனும். அந்த கொடுக்காபுளிமரத்துக்கிட்டதான் கொமரன் பொறந்தான்.  மழைநின்றகாலையில் அம்மாவோட வந்தப்ப மழவில்லுல இருக்கற அத்தனநெறத்துலயும் கருப்பு சிறகுல புள்ளியா போட்ட வண்ணாத்திப்பூச்சிகளை பாத்து கண்ணுக்கு சலிக்கல. “வெவரங்கெட்டவனே ஆளுக வாரதுக்குள்ள காளான கிள்ளி மடியில போடுவியா..வெறும் பார்

கடத்தல் அரிது:சிறுகதை

Image
 ஜனவரி புரவி இதழில் வெளியான இந்த ஆண்டின் முதல் சிறுகதை.                           கடத்தல் அரிது பதினாறு ஆண்டுகளுக்குப்பின் துறையூரின் பெரியஏரி கடைபோன அன்று நான் துறையூருக்குள் நுழைந்தேன். காவாத்தா எல்லைக்கு முன்பே பேருந்து நின்றுவிட்டது. முதன் முறையாக இந்த இடத்தில் வாகன நெரிசல். இரவிலிருந்து மனம் சரிந்துகொண்டிருந்தது. பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பினேன். கிழக்கு புறம் பள்ளிசாலையை நிறைத்து வெள்ளம் வருகிறது. ஆர்ப்பரித்து பாய்ந்து சாலையை கடந்து அதன் வழியில் பாய்ந்தது.  இருநூற்று எண்பது ஏக்கருக்கு மேல் பரப்பு கொண்ட ஏரி நிரம்பியதை நம்பமுடியாது ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நான் பேருந்திலிருந்து இறங்குவதைக் கண்ட நடத்துனர், “இந்த எடத்துல எங்க போறீங்க…துறையூருக்குள்ள போறதுனாலும் கால்மணியாவும்…பஸ்ஸில ஒக்காருங்க,”என்றான். “பெரியஏரியப் பாக்கனும்…பஸ் போனாலும் அப்படியே தெப்பகுளத்தை சுத்தி பாலக்கரை வந்திருவேன்…” “நீங்க வேற…தெப்பக்குளமும் பெரியஏரியும் லிங்க்கு…வழிஞ்சு சிவன் கோவில் அக்ரஹாரமே தத்தளிக்குது. தெப்பக்குளத்துல உள்ள பதினாலு கிணறும் நிரம்பி உள்ள இருக்க ஜந்தெல்லாம் தண்ணில