Posts

Showing posts from February, 2023

ஆழி

Image
 என்னுடைய ஐந்தாவது சிறுகதை தொகுப்பான ஆழி பற்றி வாசகர் விக்னேஷ் ஹரிஹரன் வாசகசாலை ஏற்பாடு செய்த புத்தக அறிமுக விழாவில் அறிமுக உரை ஆற்றினார்.  தன் வாசிப்பை அவர் எடுத்து வைக்கும் விதமும் அதில் உள்ள உண்மைத்தன்மையும் இந்த உரையின் பலங்கள். திறந்த மனதுடன் ஒரு படைப்பை அணுகும் வாசகர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் வாசிப்பில் ஒரு படைப்பு வெளிச்சம் கொள்கிறது. விக்னேஷ் ஹரிஹரனிற்கும் வாசகசாலைக்கும் என் அன்பு.    உரைக்கான இணைப்பு: https://youtu.be/-0-mdWCga30 ஆழி வாங்க : https://www.panuval.com/vasagasalai-publications

அகமும் புறமும் : 14

Image
  நோம் என் நெஞ்சே                      கவிதை: 1 பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் இன்னாறு இருந்த இச் சிறுகுடியோரே பாடியவர்: மிளைவேல் தித்தன் திணை: குறிஞ்சித்திணை தோழிக்கூற்று. அலரை அஞ்சிய தலைவியை நோக்கி தோழி கூறியது. கவிதை: 2 நோம் என் நெஞ்சே நோம்என் நெஞ்சே இமை தீய்ப்புஅன்ன கண்ணீர் தாங்கி அமைவதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே குறுந்தொகை : 4 திணை: நெய்தல் திணை பாடியவர்: காமஞ்சேர் குளத்தார். தலைவி கூற்றுப்பாடல். தோழிக்கு தலைவி உரைத்தது. முதல்பாடலை எழுத எடுத்தபோது இயல்பாகவே இரண்டாம் பாடல் இதனுடன் இணைந்து கொண்டது. இந்தப்பாடல்களில் பெண்அகத்தின் இரு நிலைகள் உள்ளன. இவை இரண்டும் பெண்ணை காலகாலமாய் அலைகழிப்பவை. முதல்பாடலை நான் அகத்தின் புறம் என்றும் இரண்டாம் பாடலை அகத்தின்அகம் என்று சொல்வேன். தலைவியின் அகப்பாடல்களை கவனித்தால் பொதுவான ஒரு தன்மை புலப்படும். காதல் ஒரு மறைக்க முடியாத மலர் போல மணத்

கம்பா நதி : அம்மை தழுவக்குழையும் அத்தன்

Image
  அம்மை தழுவக்குழையும் அத்தன் [எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் கம்பநதி நாவல் குறித்து அகழ் இதழில் வெளியான கட்டுரை] நதியில் விழுந்து மறையும் மழைத்துளிகளைப் போன்று நெல்லை மனிதர்களால் பெருகும் நாவல் கம்பாநதி. நூற்றிபத்து பக்கம் உள்ள இந்தநாவலில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். நாவலின் ஒரு சில இடங்களில் ஒரு பக்கத்தில் பத்துமனிதர்கள் கூட வருகிறார்கள். கண்ணாடியில் விரல்களைக் கொண்டு வரையும் ஒரு ஓவியமுறை உண்டு. அனைத்து விரல்களையும் தூரிகைகளாக மாற்றும் ஓவியமுறை. வரையும் கைமுழுவதும் அந்தநிறம் இருக்கும். முதலில் கோடுகள், புள்ளிகள், நெளிவுகள் போல பல வடிவங்கள் கண்ணாடியில் எழுந்துவரும். சற்று நேரத்தில் அவை எல்லாம் ஒரு பெரிய இயற்கைகாட்சியின் மரங்கள், புதர்கள், அருவிநீர் என்று மாறும். அதே போல கம்பாநதியை வாசிக்கத்தொடங்கும் போது ஒரு திருவிழா கூட்டத்தை பார்க்கும் திசையழிந்த நிலை முதலில் வந்து நம்மை அலைகழிக்கும். ஆனால் ஒரு பத்துப்பக்கத்திற்குள்ளாகவே அதனுள் சென்று விடலாம். எதார்த்த களம் சார்ந்த நாவல் என்பதால் அத்தனை மனித நெருக்கடியிலும் நாவலுக்குள் நம்மால் நுழைந்துவிட முடிகிறது. கண்ணாடி ஓவியம்

வானம்

Image
              அந்த சிறுகுருவி  உலகை எட்டிப்பார்த்த கணம் அத்தனை பச்சை அத்தனை குளுமை கூட்டுக்குள் இருந்தபடி  பசுமை பார்த்திருந்தது. மெல்ல கிளைகளில் நடந்து ஆகாயம் பார்த்தது. பின் எப்போதோ நிலம் பார்த்தது. தண்ணீர் வற்றிய கோடையில் சிறகு வலிக்க பறந்து திரிந்தது... அதற்கென்று ஒரு துளி நீரும்  இல்லாமல் போன ஒருநண்பகலில் பறக்க முடியாத வானத்தை பார்த்தபடி கிளையமர்ந்த அதன் மீது...  மழைத்துளிகளை  அள்ளி வீசியது வானம்.

பொம்மலாட்டம்_ மாணிக் பந்தோ பாத்யாய

Image
       2021 சொல்வனம் வங்கச்சிறப்பிதழில் வெளியான கட்டுரை.                                                                அபத்தநாடகத்தின் கதை நாவல்:பொம்மலாட்டம் ஆசிரியர்:மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம்:த.நா.குமாரஸ்வாமி வெளியீடு:சாகித்திய அக்காதெமி புதுல் நாச்சேர் இதிகதா என்ற வங்கநாவலின் தமிழாக்கம் பொம்மலாட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பத்தாண்டுகள் நாவலின் காலம். சுதந்திரத்திற்கு முன்பான வங்ககிராமமான காவுதியா என்ற ஊரின் கதை.  ஆங்கிலமருத்துவம் பயின்று தன் கிராமத்தில் மருத்துவம் பார்க்கத் தொடங்கும் சசி என்ற இளைஞன் மையக்கதாப்பாத்திரம். படித்துமுடித்தவுடன் இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் மிக்க லட்சிய கனவுகளும், நேர் வாழ்க்கை அதனுடன் முரண் நிற்கும் களமாக மாறுகிறது. நடைமுறை வாழ்வில் நுழையும் சசியின் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும் மாற்றங்கள், அவனுடன் தொடர்புடைய குடும்பங்களின் அமைப்பு, தனிமனிர்கள், அவர்களின் வாழ்க்கை முறை என்று நாவல் விரிகிறது. ஹாருகோஷ் என்ற விவசாயி இடிவிழுந்து ஊரின் பெரியவாய்க்கலுக்கு அருகில் குறுங்காட்டில் இறப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. கிராமத்தில் உள்ளவர்களின் வீ

கீறல்

Image
 தமிழினி அக்டோபர் இதழில் 2022 ல் வெளியான சிறுகதை கீறல் புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு உஷா பள்ளிவாயிலை நோக்கி ஓடினாள். வகுப்பிலிருந்து அனைவருமே வெளியேறியிருந்தார்கள். காலை பதினோரு மணிக்கு பள்ளிக்கூடம் சாத்தப்படும் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கவில்லை. நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வகுப்பிலும் அறிவுறுத்தி சொல்லி அனுப்பினார்கள். குதித்து கொண்டும், சிரித்தபடியும் தலைமையாசிரியர் அறைக்கு அப்பால் உள்ள தென்னை மரங்களை கடந்து சிறிய படல் வழியில் வெளியேறினார்கள்.  பள்ளிக்காவலாளி ராமசாமி மேற்கு பக்கமாக இருந்த பள்ளியின் முக்கிய வாயிலை பெரிய தென்னம்படலை இழுத்து வைத்து மூடிக்கொண்டிருந்தார். பக்கவாட்டில் உள்ள நெட்டிலிங்கமரத்தின் அடித்தண்டுடன் படலை பிணைக்கும் கனமான இரும்பு சங்கிலியை இரண்டு முறை கீழே தவறவிட்டு எடுத்து மாட்டினார்.  பெரிய அரசஇழைவடிவிலான இரும்புப் பூட்டு அது. உஷா அவருக்கு பூட்டை எடுத்துக்கொடுப்பதற்காக திரும்பி ஓடி வந்தாள். “நானே பூட்டிக்கிறேன்..நீ  சுருக்க வூட்டுக்கு ஓடு,”என்று அவர் கத்தினார். அவர் குரல் இரும்பு ட்ரம்மை குச்சியால் அடிப்பதைப்போல அழுத்தமாக ஒலித்தது.  அவள்