Posts

Showing posts from December, 2023

இற்றைத்திங்கள் அந்நிலவில் :6

Image
[2023 டிசம்பர் சொல்வனம் இதழில் வெளியானக் கட்டுரை]   இயற்கையை நோக்கியிருத்தல் கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன.  இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர். ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் ‘முல்லை எயிறு என நகைக்கும் கார்காலம்’ முழுவதும் முல்லை மலர் அனைத்துப் பாடல்களிலும் மலர்ந்து கொண்டிருந்தது. கழார்கீரன் எயிற்றியாரின்  பாடல்களில் பல நிறங்களில் பலவிதமான மலர்கள் மலரும் கார்காலத்தின் இறுதிநாட்களின்  சித்திரம் உள்ளது. தோன்றிப்பூ அகல் ஔியை போல சுடர்ந்தன என்று ஒரு பாடலில் வருகிறது. கார்த்திகை மாதமான இதே காலத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலை இன்று வாசிக்கிறோம்.  ஈங்கை மலர் விண் அதிர்பு தலைஇய,விரவு மலர் குழைய தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள் [அகம்: 163] இடிகள் முழங்கி மலர்கள் உதிர குளிர்ந்த மழை பெய்து முடிக்கும் காலம். எதிர்பார்ப்பின் மகிழ்ச்சி, கோபம் என அனைத்து உணர்வுந

2023 ன் ஊசல்

Image
 இந்த ஆண்டு முழுவதும் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். சங்கஇலக்கிய கட்டுரைகளில் இருந்து கி.ரா,கு.அழகிரி சாமி நூற்றாண்டு கட்டுரைகள் வரை.  நீலியில் அம்பையின் படைப்புகள் பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இடையில் உமாமகேஸ்வரி சிறப்பிதழிற்காக அவரின் நாவல்கள் பற்றிய 'வீடும் வீடு சார்ந்தும்' கட்டுரை எழுதினேன்.  இடையில் நண்பர்களுடன் அலைபேசியில் உரையாடும் போது கட்டுரை நிறைய எழுதினால் புனைவு எழுதறது சிரமமாயிடுமா? என்று நானே கேட்டுக்கொண்டிருந்தேன். சுனில் கிருஷ்ணன் இந்த ஆண்டு தொடக்கத்தில்... கட்டுரைகளில் இருந்து அவரை விடுவிக்குமாறு வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸில் கேட்டிருந்தார்.  புனைவு எழுத வருமா என்ற ஐயம் வந்துவிட்டது? என்று ஜெ விடம் கேட்டதாக '2022 நினைவின் பாதையில்' என்ற பதிவில் எழுதியிருந்தார். நான் அப்போதுதான் இரண்டு கட்டுரை தொடர்கள் எழுதிக்கொண்டிருந்தேன். நீலியில் கட்டுரை எழுதுவதற்கு சரி சொல்லியிருந்தேன். நம் வகுப்பில் நிதானமான ஒரு படிக்கற பிள்ளையோ,பையனையோ நாம் கவனித்துக்கொண்டே இருப்போம்.ஏனென்றால் நான் ஒரு அவசரக்குடுக்கை இல்லையா? அதனால் வரும் கவனம் அது. அவன் விளையாடும் போது எங

அகமும் புறமும் : என்னுரை

Image
 நாளை என்னுடைய முதல் கட்டுரை தொகுப்பான அகமும் புறமும் வெளியாகிறது. சமர்ப்பணம் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு…. நன்றி வாசகசாலை நண்பர்களுக்கும், வாசகசாலை இணைய இதழில் தொடராக வெளியான போது வாசித்து பின்னூட்டம் அளித்த வாசகநண்பர்களுக்கும் அன்பும் நன்றியும். இந்த நூலை பிழை நோக்கி உதவிய நண்பர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும். என்னுரை கடலும் மலையும் சங்க இலக்கியம் மீது பள்ளி வயதில் இருந்து ஈடுபாடு உண்டு. அதற்கு காரணம் என்னுடைய தமிழாசிரியர்கள். மருதை அய்யா, இராஜாராமன் சார்,மதர் அல்ஃபோன்ஸ் சிஸ்ட்டர்,தமிழ் விரிவுரையாளர் ராதா ஆகியோர்களை நினைத்துக் கொள்கிறேன். அதற்கு பிறகு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘சங்க சித்திரங்கள்’ கட்டுரைத்தொகுப்பு மீண்டும் சங்கஇலக்கிய வாசிப்பை தூண்டுவதாக இருந்தது.  தொடர்ந்து சங்கப்பாடல்களை வாசிக்கிறேன். வாழ்நாள் முழுவதும் வாசிப்பேன் என்றே நினைக்கிறேன். மொழியழகும்,பாடல்கள் மனதில் வரையும் காட்சிகளும் சங்கப்பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் என்னை ஈர்க்கின்றன.  புறப்பாடல்களில் சங்ககாலத்தின் அறம்,மன்னர்கள்,போர் பற்றிய தகவல்கள் நம் ஆர்வத்தை தூண்டுபவை. ஆனா

நாயகி

Image
 [டிசம்பர் 1, 2023 வாசகசாலை இணைய இதழில் வெளியான கதை] ஒரு வாரமாக நாள்முழுதும் மழை அடித்துக்கொண்டே இருந்தது. இன்று விடாத சாரல். வீட்டிற்கு முன் நிற்கும் வேப்பமரத்து இலைகள் பசேல் என்று குதூகலமாக இருப்பதை பார்த்தவாறு சிமெண்ட் சாய்ப்பின் கீழ் நின்றேன். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மழை காலத்தின் நசநசப்பு. காலை பத்துமணி என்ற எண்ணமே இல்லை. இப்போதுதான் விடிந்த மாதிரி மந்தமான மனநிலை. சுள்ளென்று ஒருமணி நேரம் வெயில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது. கொடியில் காயும் துணிகளை எல்லாம் மடித்து வைத்தாலே மண்டைக்குள் இருக்கும் எரிச்சல் காணாமல் போய்விடும். இந்த வேப்பமரம் மட்டும் எத்தனை அழகாய் என்று நினைக்கும் போதே வீடியோ போடலாமே என்று தோன்றியது.  அலைபேசியை எடுத்தேன். “டேய் தம்பி..அம்மாக்கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு வரியா..ஒருவீடியோ போடுவோம்,” “இந்த மழையிலேயும் எப்படிக்கா,” “வீட்டுக்கு முன்னாடி இருக்க வேப்பமரம் தான் பேக்ரவுண்டு…என்னா அழகு பச்சையா இருக்கடா…” “என்னா பாட்டு..” “மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்குது…எப்பிடி,” “நல்லாதான் இருக்கு,” என்று இழுத்தான். விடுமுறைநாள் என்பதா

வாசகர் கடிதங்கள்

Image
 என் கதைகளை,கட்டுரைகளை வாசிப்பவர்கள் அவ்வப்போது எனக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள். என் மூன்றாவது தொகுப்பான கடுவழித்துணைக்கு முதல் வாசகர் கடிதம் வந்ததாக நினைவு. உறுதியாக நினைவில் இல்லை. இது வரை என் முதல் தொகுப்பான 'சக்யை' க்கு அதிகக்கடிதங்கள் வந்துள்ளன. இனி கடிதங்களை தளத்தில் பதிய வைக்கலாம் என்று தோன்றியது. வணக்கம் அக்கா. தொடர்ந்து உங்களது சிறுகதைகள் வாசித்து வருகிறேன். உங்கள் எழுத்து நல்ல அனுபவத்தைத் தருகிறது. வாசகசாலையில் சமீபத்தில் வெளிவந்த நாயகி சிறுகதையில் ரீல்ஸ் செய்பவர்களின் வாழ்வை நீங்கள் காட்டியது நன்றாக இருந்தது. துணிக் கம்பெனி, சிங்கிள் பேரண்ட் போன்ற விஷயங்கள் ரீல்ஸ் வீடியோக்கள் செய்யும் ஜெகதீஸ்வரி என்பவரை நினைவுபடுத்தின. சிறப்பான சிறுகதை. வாழ்த்துகள்.  -ந.சிவநேசன் சேலம் வணக்கம் தம்பி, நலம் விழைகிறேன். கதையை வாசித்து கடிதம் எழுதி உங்கள் எண்ணங்களை பகிர்ந்தது குறித்து மகிழ்ச்சி. அப்படி ஒருவரை குறிக்கும் கதை அல்ல அது. நான்கைந்து பேரின் கலவையில் உருவான கதாப்பாத்திரம் அது. அப்படி ஒருவர் ரீல்ஸ் பண்ணுவதே எனக்குத் தெரியாது.  ஒரு கதையை வாசிக்கும் போது நமக்குத் தெரிந்த யாரோ ஒருவர

காயங்கள்

Image
அதிகாலை ஐந்துமணி இருக்கலாம். கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனின் வலைப்பூவில் சிலப்பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.  தெருவில் சலசலப்பு.  இரும்புக்கதவை திறந்து எட்டிப்பார்த்தேன்.  ஏரிக்கரைக்கு அப்பால் இருக்கும் வயலில் தூக்குப்போட்டு ஒரு அம்மா தற்கொலை. "பேய் அடிச்சிருச்சு...நேத்து எங்கூடத்தான் வயநடவுக்கு வந்தா... வேல விட்டு வாரப்பவே எருக்கங்குச்சி ஒடிச்சு கையிலயே எடுத்துக்கிட்டு வந்தா..கட்டில் பக்கத்துல வச்சுக்கிட்டு தான் தூங்கியிருக்கா,"என்று செல்லம் அம்மா பூஞ்சோலை அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். காலை ஆறுமணிக்கே பயிர்நடவு, களையெடுப்புக்கு ஆட்கள் கிளம்பிவிடுவார்கள். வயல்காரர்கள் குட்டியானை வண்டியில் ஆட்களை அமர்த்தி கூட்டிச்செல்வார்கள். இரண்டு  குட்டியானை ஆட்டோக்கள் முடக்குகளில் நின்றன. ஆட்கள் வழக்கமில்லாத சலசலப்புடன் கையில் வயர் கூடை, தண்ணீர் பாட்டில்களுமான நடந்தார்கள். வீட்டு முடக்கில் சிலர் நின்று பேசுவது எனக்குக் கேட்டது.  "பிள்ள காலேசுக்கு போவுது...பய பள்ளிக்கூடம் முடிக்கப்போறான்..அந்தாளு பழக்கவழக்கதனதுல நல்ல மனுஷன்..இப்படி பண்ணிட்டாளே," "நல்ல மனுஷருக்கு தான்

முதல் கனி

Image
 2018 டிசம்பர் 5. நான் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பான சக்யை நூலை தொகுத்து முடித்தநாள். சக்யை வெறும் புத்தகம் மட்டுமல்ல. நான் கொண்ட விடாத பிடிப்பின் முதல் கனி . இந்த புத்தகத்தில் சில பல போதாமைகள் இருக்கலாம்.  நுண்ணுணர்வு நிரம்பிய சிறுகதைகளை கொண்ட தொகுப்பு என்பதில் எனக்கு ஐயமில்லை. அதற்கான வாசகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது வரை உண்டு. நேற்று காலை வானத்தை பார்க்கும் போது போதவிழ் வான் பூ என்ற சங்கப்பாடல் வரி மனதில் ஓடியது. எப்பொழுதோ எழுதப்பட்ட ஒரு வரி.  குறிப்பிட்ட செய்யுளில் அதற்குள்ள உறவு வேறு. தனி வரியாக நம் மனதிற்குள் பதிவது வேறு. சிலநாட்களாக தொடர்ந்த மழையால் அவ்வளவாக சூரியஉதிப்பு கண்களுக்கு புலப்படவில்லை. தினமும் காலைமழையால் வெளிச்சமாக மட்டுமே சூரியனின் இருப்பை உணர முடிந்தது. மந்தமான இருள் கலந்த வெளிச்சம். நேற்று வானம் தெளிந்து சூரியன் உதிப்பதற்கு முன்பான வெளிச்சத்திலிருந்து, சூரியன் உதிக்கும் வரை இந்த வரியே மனதில் இருந்தது.  வானம் இதழ் விரிக்கிறது. காலைவானம் ஒரு அமைதியான மொட்டு விரிவதைப்போல ஔிவிரித்து ஔி  எழுந்தது. மேற்கே உள்ள கொல்லிமலை மரகத பச்சைக்கு மாறத்தொடங்கியது. அங்கங்

இற்றைத்திங்கள் அந்நிலவில் 5

Image
          [நவம்பர் 2023 சொல்வனம்  இதழில் வெளியான  கட்டுரை] காத்திருப்பின் கனல் சங்கப்புலவர்களுள் ஒருவரான கச்சிப்பேட்டு நன்னாகையார் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சிப்பேட்டு என்ற ஊரில் பிறந்தவர். இவர் குறுந்தொகையில் எட்டுப்பாடல்கள் பாடியுள்ளார். எட்டுப்பாடல்களும் தலைவனை பிரிந்த தலைவியின் பிரிவு மனநிலையை குறித்தப் பாடல்கள். இந்தப்பாடல்களில் உள்ள பிரிவை, பொருள் தேட சென்ற தலைவனின் பலநாட்களின் பிரிவாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ‘பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட’   [குறுந்தொகை : 30]  பொய்க்கூறுவதில் வல்லவனான அவன் மெய்யாகவே தழுவுதல் போல கனாகண்டேன் என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். மெய்யாகவே நடந்தது எதுவும் இல்லை. மணப்பதாக சொன்னவன் இன்னும் வரவே இல்லை. அதனாலயே அவள் பொய்வலன் என்று சொல்கிறாள். வண்டு சூழாத குவளை மலரின் தனிமை அவளுடையது. பாலைத்திணை பாடலில் குவளையும் குளமுமாக இருப்பது என்ன? மனமும் அது நிறைக்கும் உணர்வுகளும் ஈரமான கண்களுமா? அல்லது குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலத்தின் பழைய நினைவா? ‘பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் வாரார்’  [குறுந்தா