Posts

Showing posts from July, 2021

சக்யை சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரையும் என்னுரையும்

Image
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அப்பொழுது எனக்கான வலைப்பூவை உருவாக்கவில்லை. இந்த நினைவை எழுதக்காரணம் அது அழகிய நினைவு என்பதே. இந்த மனிதர்களை நிகழ்வுகளை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும். மறதி குறித்த பதற்றம் எழுத நினைத்ததை உடனே எழுத செய்கிறது. மறதி வராமலும் போகலாம் என்ற சாத்தியமும் கொண்டதே வாழ்க்கை. ஜனவரி ஒன்றாம் தேதி பின்காலையில் அந்த மின்னஞ்சல் வந்தது. வீட்டிலுள்ள ஒன்பது பேரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம். தங்கையின் திருமணத்திற்காக முதல்நாள் வாங்கிய பட்டுப்புடவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். முதல்நாள் ஜவுளிவாங்கும் அலைச்சலில் என்னுடைய அலைபேசி, பயல்கள் எவனுடைய பேண்ட் பாக்கெட்டிலோ இருந்தது. அவன் என்னை யார் அழைக்கப்போகிறார்கள் என்று சைலண்ட்டில் போட்டிருக்க வேண்டும். அன்று ஜவுளிக்கடையில் வீட்டின் கூட்டத்துடன், உறவுகளின் கூட்டமும் இணைந்திருந்தது. யாரடி நீ மோகினி திரைப்பட திருமண ஜவுளி வண்டி கணக்காக நள்ளிரவில் திரும்பும் போதும் அலைபேசி யாரிடமோ இருந்தது. சென்ற வாரம் இதேபோல தம்பியின் (சின்னய்யாவின் மகன்) திருமணபத்திரிக்கை படைக்க குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோதும் அலைபேசியை

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் சிறுகதை

Image
      இந்தியாடுடே இலக்கியஆண்டுமலர் சிறுகதை 2                           எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் பைத்தியக்காரப்பிள்ளை என்ற சிறுகதையை எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராம் எழுதியிருக்கிறார். இக்கட்டான காலக்கட்டங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகள் நிறம் இழக்கின்றன. இந்தக்கதை வறுமையில் தாய் மகனின் உறவை விசாரிக்கிறது. கும்பகோணத்தின் சௌராஷ்ரா தெருவின் நெருங்கிய குடியிருப்பு ஒன்றின் அதிகாலையில் கதை தொடங்குகிறது. நாலறை மணிக்கு எழுந்த ராஜம் சந்தடி செய்யாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு காபிகடைக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா விழித்துவிடுகிறாள். அவன் எழுந்ததிலிருந்தே அம்மா மீதான சலிப்பில் ஏன் இப்படி இருக்கிறாள்? இவள் ஒரு அம்மாவா என்றே எண்ணிக்கொண்டிருக்கிறான். அவனுடன் சேர்த்து பத்துபிள்ளகளை பெற்ற அம்மா. பத்தாவது பிள்ளை பிறந்ததும் குடித்தே இறந்து போகும் அப்பா. எப்பொழுதும் பிள்ளைகளை திட்டவும் பேச்சால் அவமானப்படுத்தவுமாக வேலைவாங்கும் அம்மா. இந்தக்கதை வறுமை பீடித்த வாழ்வில் தாய்மகனின் அன்பை பரிசீலிப்பதாகவோ தாய்மை சார்ந்த கேள்வியை எழுப்புவதாகவோ கொள்ளலாம். கும்பகாணத்தின் சௌராஷ்ரா தெரு என்றதும

கபிலனின் காலடியில் விரியும் நிலம்

Image
                சில ஆண்டுகளுக்கு பிறகான தொடர்ந்த அடுத்தடுத்த மூன்றுநாட்களின் சிறுபயணங்கள் என் உள்ளிருக்கும் பாறைக்கு அடியில் புதைகொண்டிருக்கும் விதைகளின் இருப்பை காட்டிக்கொடுக்கின்றன.                                கபிலர்மலை நாமக்கலிற்கும் ஜேடர்பாளையத்திற்கும் இடையிலிருக்கும் கபிலர்மலையை கண்ணால் கண்டதும் மனம் சிலிர்த்துக்கொண்டது. கபிலர் மலை பற்றி எப்பொழுதும் போல நமக்கு பல கதைகள் உண்டு. கபிலமகரிஷி சித்தராக தவம் செய்த இடம். பாலசுப்ரமணிய சுவாமி சுயம்புவாக தோன்றிய தளம். கபிலநிற பசு பசிக்காக புல்மேய வந்த பொழுது அதை இரையாக கவ்விய புலி உயிருடன் விடுவித்த கருணை ஊறும் இடம் என்ற புராணக்கதைகள் உள்ளன.  அதனுடன் சங்கக்கவிஞர் கபிலர் சேரமன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பற்றி பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தில் பத்துபாடல்கள் பாடியுள்ளார். மன்னன் இந்த குன்றின் மீதிருந்து கைக்காட்டி பார்வைக்கு தெரியும் வரை உள்ள ஊர்களை பரிசிலாக தந்தான் என்ற வாய்மொழி வழி கூறப்படுகிறது. எதுவாக இருந்தபோதும் இந்த மலை, இன்று நின்று நினைவுபடுவத்துவது அந்தமாபெரும் கவிஞனை தான். இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றின் மாபெரும் ஆளுமை.