அந்த சிறுகுருவி
உலகை எட்டிப்பார்த்த கணம்
அத்தனை பச்சை
அத்தனை குளுமை
கூட்டுக்குள் இருந்தபடி
பசுமை பார்த்திருந்தது.
மெல்ல கிளைகளில் நடந்து
ஆகாயம் பார்த்தது.
பின் எப்போதோ
நிலம் பார்த்தது.
தண்ணீர் வற்றிய கோடையில்
சிறகு வலிக்க பறந்து திரிந்தது...
அதற்கென்று ஒரு துளி நீரும்
இல்லாமல் போன ஒருநண்பகலில்
பறக்க முடியாத வானத்தை பார்த்தபடி
கிளையமர்ந்த அதன் மீது...
மழைத்துளிகளை
அள்ளி வீசியது வானம்.
Comments
Post a Comment