சொல்வனம் ஜனவரி இதழில் வெளியான சிறுகவிதைகள். நன்றி சொல்வனம்.
அழகிய ஒன்றிரண்டு வரிகள் சட்டென மூளையில் உதிக்கின்றன. அவற்றை மறந்துவிட மனம் ஒப்புவதில்லை. அதற்கு கவிதை என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம். அப்படியான வரிகளை எப்பொழுதாவது இதழ்களுக்கு அனுப்ப மனம் ஒத்துக்கொள்கிறது.
கல்
தன்மீது கடந்து செல்ல
தாகத்துடன் நதிநீரில் கிடக்கும் கூலாங்கல்
மலர்
எட்டுதிசைகளிலும் மத்தகம் உயர்த்தி
நிற்கும் யானைகளின் காலடிகளில்
பத்திரமாய் உறங்குகிறது
நெருஞ்சியின் சிறுமுகை.
பாலை
ஒருசொட்டு நீர்போதும்
அந்த ஓவியத்தை நிறம் மாற்ற…
உகிர்
தன் மீது கால்பதித்து தத்தி நடந்து
முதன்முதலாக பறக்கக் கற்றுக்கொண்ட
பறவை கட்டிக்கொண்ட கூட்டை
வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது.
Comments
Post a Comment