Skip to main content

Posts

Showing posts from September, 2026

நித்தியத்துவம்

 சில சமயம் கவிதை வரிகள் மனதின் அகால த்திலிருந்து சட்டென்று நினைவிற்கு வருவதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.  நாம் அதற்கான சரியான காரணங்களைக் கூடசொல்லிவிட முடியும். நம் சூழல் மற்றும் உடல்நலம் அல்லது மனநிலை தூண்டலால் அப்படி நினைவிற்கு வருகிறது என்று சொல்லலாம் தான். ஆனால் பதினோரு வயதில் பள்ளிப் படமாக வந்த கவிதை எப்படி மின்சாரம் இல்லாத அமாவாசை இரவில் வானத்தை நிறைத்திருக்கும் விண்மீன்வெளியிலிருந்து குதித்து வருகிறது ஒரு மழை துளியை போல. விண்வெளி என்பது நம் மனம் தானா? மண்ணை விட வானம் நமக்கு ஏன் இத்தனை அணுக்கமாக இருக்கிறது?  தமிழ் வழி கல்வியில் அரசு பள்ளியில் மனப்பாடம் செய்ய சிரமப்பட்ட ஆங்கிலகவிதை வரிகள் இன்று வானத்தை பார்க்கும் போது சட்டென்று மனதில் ஓடியது. நம் அனைவருக்குமே தெரிந்த வரிகள்.  கவி ராபர்ட் ப்ராஸ்ட்டின் வரிகள்.  The woods are lovely dark and deep But I have promises to keep I have miles to go before I sleep I have miles to go before I sleep 6 ம் வகுப்பில் பாடப் பகுதியாக வந்த கவிதை. இப்போதெல்லாம் சில நேரங்களில் பள்ளிப் படங்களிலிருந்து இத்தகைய வரிகள் மனதில் ...