Skip to main content

Posts

Showing posts from June, 2026

சுழலும் ஆழி

  குளிர் காதுகளை அடைத்தது. இன்னும் சூரியன் வெளிச்சம் காட்டவில்லை. பேருந்து மெதுவாக பச்சை மலை குன்றுகள் சிதறிக்கிடக்கும் பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. மரவட்டை நகர்வது மாதிரி நிலம் மெதுமெதுவாக மேடேறும் பாதை. ஒக்கரை குன்றடி சிற்பக்கூடங்களில் உளிகளின் சத்தங்கள் கலைந்து கேட்கிறது. “ஒக்கரை வந்துருச்சு..” என்று நடத்துனர் உறங்குபவர்களை எழுப்பினார். அருகில் உறங்கிக்கொண்டிருந்த பிரதிக்ஷாவை சேலை முந்தானையால் போர்த்தி அணைத்துக்கொண்டேன். ஆட்கள் தலையையும் காதுகளையும் துண்டால் போர்த்திக்கொண்டு இறங்கினார்கள். உளி சத்தங்கள் நினைவுகளை கொத்துவது போல காதுகளில் மொய்த்தது. கருங்கற்களை இரும்பின் கூர் தீண்டும் ஒலி. தாங்க முடியாமல் இடது புறம் நின்ற குன்றை பார்க்கத்தொடங்கினேன்.  கருங்கற்களையெல்லாம் பெயர்த்தெடுத்தப்பின் எஞ்சிய மண்ணாலும் கற்களாலும் ஆன குன்று. குட்டை மரங்களும் செடிகளும் பனியில் கருகியிருந்தன. யார்பார்த்தாலும் சீர்குலைந்த குன்று என்று சொல்லிவிடுவதற்கு ஏற்றமாதிரி குன்றில் பாதிபங்கு உயரமுள்ள பெரிய பாறை பாதிஉடைந்து மீதி குன்றுடன் நிற்கிறது. மஞ்சு படர்ந்திருந்த உச்சியிருந்து பார்வையை இறக்கி...

காகிதப்பூக்களும் கற்றாழையும்

 ‘சமகாலத்தை எழுதுவது என்பது புதிய காயத்தை கையாள்வது போல’ என்று அண்மையில் நேர்காணல் ஒன்றில் சொல்லியிருக்கும் எழுத்தாளர் வாசுமுருகவேல் தன்னுடைய மணிப்பல்லவம் நாவலை அவ்விதமே நிதானமான பார்வை மற்றும் உணர்வுடன் எழுதியிருக்கிறார்.  அன்றாடத்திலிருந்து போர்சூழலை, வன்முறையை சொல்வதினால் வன்முறை துல்லியமாக வேறுபட்டு தெரிகிறது. பரந்த பச்சை வயல் பரப்புக்கு  நடுவே வாய்க்கால் போல.கண்முன்னே அழகான கடல் ஆனால் கூடவே ராணுவமுகாம். எங்கோ எப்போதோ விழுந்த விஷவிதை விருட்சமாகி நிற்கும் போது அதை நம்பி அதன் கிளைகளில் வசிக்கும் பறவைகள். போர்இலக்கியம் எங்கேயோ எப்படியோ ஃபாசில் [fossil] தன்மையுடன் இருக்க வேண்டியிருக்கிறது அல்லது குளிர்ப்பதன பெட்டியில் இருக்கும் தாய் நுண்ணுயிரி கலம் ( Mother plate _ நுண்ணுயிரி ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுவது) போல இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு உயிருள்ள நினைவாக…அதன் உயிர் தன்மையை இழக்காமலும் அதே சமயம் பரவிவிடாமலும். தன்னுடைய செறிந்த நாவலில் அன்றாடத்தை எழுதும் போது சற்று கூடுதலாத சொல்லிவிடும் எழுத்தாளர், வன்முறையை மிகக்கவனமாக தொட்டு நகர்ந்துவிடுகிறார். இந்த உணர்வுநிலையில் இரு...

காத்திருந்த காற்று

  பல ஆண்டுகளாகிவிட்டன மழை தன் முகம் காட்டி...  நிலம் காய்ந்து வெடித்து நொறுங்கி புழுதி பறக்கிறது..  வானம் பார்த்திருந்த நிலத்திற்கிரங்கி எங்கிருந்தோ கூடி வந்தன  மேகங்கள். .. கூடவே தலைமுறைகளாக காத்திருந்த காற்றும்..