Skip to main content

எழுத்தாளர் திருச்செந்தாழை

 எழுத்தாளர் பா.திருச்செந்தாழைக்கு இலக்கியத்திற்கான புதியதலைமுறை தமிழன் விருது வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். கண்விழித்ததும் பார்த்த முதல் செய்தி. உடனே அவரின் கதைகள் மனதில் சுழன்றன. அவற்றைப்பற்றி நான்கு வரிகளாவது எழுதிவிட வேண்டும் தோன்றியது.





நேற்று முன்தினம் தமிழினி இணையஇதழில் திருச்செந்தாழையின் வீழ்ச்சி சிறுகதை வாசித்தேன். அந்தக்கதை மனதிலேயே சுழன்று கொண்டிருந்ததால் சமைக்கும்போது அம்மாவிடன் கதையாக கூறினேன்.

ஒரு வாசகியாக செந்தாழையின் கதைகளில் என்னைத் தொட்டு அசைப்பவை அவரின் கதைமாந்தருக்குள் இருக்கும் 'வெகுளித்தன்மை' . வியாபாரத்திற்கு சரியான எதிர்நிலை என்றால் அது வெகுளித்தனம் தானே. வியாபரம் என்பது எத்தனை பெரிய ஆடுகளம்.

வியாபாரத்தை ஒருவர் கையிலெடுக்கும் போது முதலில் எழும் எண்ணம் வீழ்ச்சி பற்றியதாகத்தான் இயல்பிலேயே நமக்கு எழுகிறது.

வியாபாரத்தை கதைக்களனாக் கொண்டு எழுதும் போது வியாபாரத்தில் வெல்லும் ஒருவரை விட தோற்கும் ஒரு கதாப்பாத்திரம் நம்மை பதட்டமடைய வைக்கிறது. பொதுவாக வியாபாரத்தில் வெல்லும் தலைமுறைக்கு அடுத்தத்தலைமுறை வியாபார சூட்சுமங்களை மனதிலிருந்து இழக்கிறது. வீழ்ச்சி என்ற இந்தக்கதையில் இருகுழந்தைகள் வெகுளித்தன்மையிலிருநது சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளத்துவங்கும் தருணங்கள் அழகாக வெளிப்பட்டுள்ளன. இரு குழந்தைகளின் வாழ்க்கை பார்வை மாறும் தருணங்களின் கதை என்பதால் இந்தக்கதை மேலும் மனதிற்கு நெருக்கமாக உள்ளது.

வீழ்ச்சி கதைக்கான இணைப்பு: 

https://tamizhini.in/2022/07/25/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/

சிற்றில் குழுவில் முன்வைக்கப்பட்ட திருச்செந்தாழையின் இருகதைகள்.

கதை: துலாத்தான்

ஆசிரியர்: பா. திருசெந்தாழை

இதழ்: தமிழினி

பரிந்துரை: கமலதேவி

வழக்கம் போல திருச்செந்தாழை அவர்களின் வியாபார களம் சார்ந்த கதை. ஆ.மாதவன் அவர்களின் கடைத்தெருவின் கலைஞன் போல இவரிடம் மண்டி வாழ்க்கை சித்திரங்கள் நிறைய இருக்கின்றன. தரகு வேலையின் சாமர்த்தியமும்,தரகரின் உண்மை வாழ்க்கை நிலையும் பற்றிய கதை. கதை முடிவு அத்தனை எதார்த்தமாக இருந்த போதும் கவித்துவமானது என்று தோன்றுகிறது.

https://tamizhini.in/2021/07/27/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/

கதை: விலாஸம்

ஆசிரியர்: பா. திருச்செந்தாழை

இதழ்: தமிழினி

பரிந்துரை: கமலதேவி

உரையாடல்: சுரேஷ் பிரதீப்

*

கமலதேவி:

கதையை வாசித்ததிலிருந்து இன்னும் அந்த முடிவு மனதைவிட்டு அகலவில்லை. அப்படியான முடிபுள்ள கதைகளை எழுதவிரும்பித்தான் அனைவரும் எழுதிப்பார்க்கிறோம். மொடமொடப்பான தூய வெள்ளைசட்டையில் மழைத்துளிகள் விழ மூட்டைத்தூக்கும் கொக்கியுடன் ஓடும் அந்த மையக்காதாப்பாத்திரம் மனதில் சட்டமிடப்பட்ட அசையும் படம் போல இருக்கிறார். கண்முன்னே தினமும்  அத்தகைய ஒருவரை காண்பதால் கூடுதல் ஒட்டுதலாக இருக்கலாம். இத்தகைய கதைகள் யதார்த்த கதைகள் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துக்கின்றன.

*

சுரேஷ்ப்ரதீப்:

மொழி கச்சிதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் நல்ல கதை. இக்கதை தேர்ந்து கொண்டிருக்கும் களம் ஓரளவு புதிதாகத் தெரிந்தாலும் அக்களம் வழியே சொல்லப்படும் உணர்வுகள் ஏற்கனவே நன்கு பரிச்சயமானவை என்றே தோன்றுகின்றன. பெரும்பாலும் ‘வாழ்ந்து கெட்ட’ குடும்பங்களின் கதைகள் வாழ்ந்து கெட்டவர்களின் வழியாகவே சொல்லப்பட்டிருக்கும். இங்கு எதிரே இருப்பவரால் சொல்லப்படுகிறது. மேலும் அப்பாவை பார்த்து பார்த்து பையன் அடையும் ஆச்சரியம் வாசகருக்கு கடத்தப்படுகிறதா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.

https://tamizhini.in/2021/04/25/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b8%e0%ae%ae%e0%af%8d/

எழுத்தாளருக்கு வாழ்த்துகளும் அன்பும்.

Comments

  1. அன்புள்ள கமலதேவி
    நான் திருச்சியில் இருந்து டெய்ஸி. இன்று ஜெ சாரின் தளத்தில் இருந்து உங்களது தளத்திற்கு வந்தேன். திருச்செந்தாழையைப் பற்றிய உங்களது பதிவுகளைப் படித்தேன். எனக்கு திருவின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும்.வீழ்ச்சி படித்து நானும் திருவிற்கு எழுதினேன். வியாபாரத்தில் வெகுளியாய் இருந்து தோற்பதே தெரியாமல் தோற்றுப்போகும் ஆட்களின் கதை திருச்செந்தாழையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது இல்லையா? நீங்கள் சியமந்தகத்தில் எழுதிய துதிக் "கை"கட்டுரையையும் படித்திருக்கிறேன். அந்தப் படிமம் மிகவும் பிடித்திருந்தது. விவிலியத்தில் ஒரு வசனம் உண்டு. "வலதுபுறம் இடதுபுறம் சாயும்போதும் வழி இதுவே என்று பின்னால் இருந்து வரும் ஒரு சொல்". எனக்கு அந்தக் குரலாகத்தான் ஜெ சார். நீங்களும் உங்கள் கட்டுரையில் அதையே சொல்லி இருந்ததால் உங்களையும் பிடித்து விட்டது. உங்கள் எழுத்துக்களை படிக்கிறேன் கமலதேவி. என்னுடைய எண் 9942380036. உங்களுக்கு வசதிப்படும்போது பேசலாமா?

    வாழ்த்துக்களுடன் டெய்ஸி.

    ReplyDelete
  2. டெய்ஸிக்கு அன்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...