தாகமுள்ளவன் தனக்கு விதிக்கப்பட்ட பாலையிலிருந்தும் அமுதம் பெறுகிறான்

 


எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர் செந்திலின் காணொளிக்கான இணைப்பு கீழே.

https://youtu.be/OFGHuw0y4Hk

இந்த வீடியோ எனக்குள் இருக்கும் வாசகிக்கு உத்வேகம் அளிப்பது.

வாசிப்பின் உன்னதத்தை ஒரு சிறந்த வாசகரின்றி எவர் சொல்லமுடியும். வாசிப்பு என்பது 'வேலையற்றவர்கள் செய்கிற வெட்டிவேலை' என்ற கேலியை உடைக்க இது ஒரு கூர்மையான குரல். இப்படியான ஒன்றை வாசகர் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் சொல்லும் பொருள் மேலும் அர்த்தம் உள்ளதாகிறது. நாள் முழுதும் உழைக்கும் ஒருவரின் சொல்லில் கலைமகள் மேலும் அழகாகிறாள்...அர்த்தப்படுகிறாள்...அன்றாடத்தில் அவளின் இருப்பு மேலும் வலுவாகிறது. தமிழ் போன்ற வளம் மிக்க மொழியை கொண்ட சமூகத்தில் ,வாசிப்பு என்பது எங்கோ சிலர் செய்வதும் செய்யகூடியது என்பதும் எனக்கு ஏற்புடையது அல்ல. அதுவும் நம் அன்றாடத்தின் மிகமுக்கியமான செயல்பாடு. செந்திலின் குரல் அன்றாடத்தில் இருந்த அவரை ஒரு அழகியபறவையாக சிறகுவிரிக்க வைக்கிறது. இலக்கியம் அவரை மண்ணிலிருந்து விண்ணின் பறவையாக சிறகுதந்திருக்கிறது. திருமகளைப்போல கலைமகளும் பொன்னாகி பொலிபவள் தான். பொலியும் இடங்கள்தான் வேறு.

Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்