அடுத்த நாட்கள்



மிக மெல்ல தீப்பிடித்து

சாவின் ஐந்தாம் நாள் சீறி எரிகிறது

பிரிவின் எரி,

பிரிவின் கைப்பிடித்து மனம்

 இருளிற்குள் செல்லப்பார்க்கிறது,

அதோ

மழைமுடித்த காலை வானம்.

மேகங்களின் இடையில்

கிழக்கே ஔிக்கீற்று சிதறுகிறது.

அதன் எதிரே 

மரகதப்பச்சையாகிறது மாமலை.

அறுப்பு முடிந்த

கழனியில் மிதக்கின்றன...

நாளை முளைக்கப்போகும் நெல்மணிகள்.

வானில் வெள்ளை பறவை ஒன்று

 இறைதேடிப்பறக்கிறது...

உதித்துக்கொண்டிருக்கும் சூரியனின் வெப்பத்தில்

என் சிறகுகளும் உலரட்டும்...


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

முதல் கனி