ஆதித்தனிமை [பொன்முகலியின் இரு கவிதைகள்]

                       

உனது தனிமை என்பது

உனது பனிக்குடத்தில் எழுதப்பட்டது

அன்பே

                                  _பொன்முகலி

        இந்தக்கவிதையை வாசித்ததும் நம்முள் உறையும் காரணமில்லாத தனிமையின் ஆதி ஊற்று இது தானாே என்று தோன்றியது. தனிமைக்கு காரணங்களாக எந்த மனிதராவது எந்த பொருளாவது இருந்தால் அந்தத்தனிமை ஒரு பிரிவர்த்தத்தை பெற்றுவிடுகிறது. ஆனால் காரணமில்லாத ஒரு தனிமை நம்மில் உண்டு. இந்த உணர்வு எங்கிருக்கிறது என்ற எண்ணம் அடிக்கடி வரும். இதை ஒரு மனிதர் நீக்கிவிட முடியாது. சில நேரங்களில் நாய்க்குட்டிகளால் மிகஎளிதாக நம்முள் எழும் அந்த தனிமையை சட்டென்று நீக்கிவிட முடியும். 

அந்தத்தனிமை எங்கிருந்து பதியமாகி நம்முள் உறைந்து அவ்வப்போது உருகுகிறது என்பதை இந்தக்கவிதை காட்டுகிறது. சட்டென்று  பரணில் கிடந்த ஒரு பழைய பெட்டியை திறந்து பெரியவீட்டின் கனமான சாவியை எடுப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்தக் கவிதை தரக்கூடிய தவிர்க்க முடியாத துக்கத்தை மழை நீரால் கனத்துக்கிடக்கும் இலையை மெல்ல துடைத்து துடைத்துவிடும் காற்றாவோ, சூரிய ஔியாக அடுத்தக்கவிதை உள்ளது.

அன்பு எப்போதும்

நுனி மரத்தில் அமர்ந்தே

அடிமரத்தை வெட்டுகிறது.

மழை நீருக்குச் செழித்து தழைக்கிற

கோவைக் கொடிகளுக்கு

இந்தக் கவலைகளுண்டா?

                                      _கவிஞர் பொன்முகலி

எடை இழந்த இலை இப்போது இயல்பாகி காற்றுக்கு அசைகிறது. அது மீண்டும் எடை கொள்வதும் எடையிழப்பதுமான விளையாட்டே இந்த வாழ்க்கை. 

[இந்த விஷயத்தில் இரட்டையர்களுக்கு என்ன? என்று கேட்கக்கூடாது]


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்