Skip to main content

Posts

Showing posts from July, 2020

பெருங்கனவின் வெளி

      [2018 அழிசி விமர்சனக்கட்டுரைப் போட்டிக்காக எழுதிய கட்டுரை. ஆனால் விமர்சனமாக ஆகவில்லை. வாசிப்பனுபவமாகவே நின்று விட்ட கட்டுரை]                                  பெருங்கனவின்வெளி நாவல்  :கொற்றவை  எழுத்தாளர் :ஜெயமோகன் கதைகேட்கத் துவங்கிய கணத்தில் விழித்தலில் கனவு கைகூடும் மாயம் நிகழ்கிறது.இல்லை அதற்கு முன்பே பார்க்காததிருடனை,வராத பூனையை நாம் விரட்டியதைப் பற்றி நாமாக கதைகளை அய்யா,அம்மா விடம் சொல்கிறோம்.சொல்பவருக்கும், கேட்பவருக்கும் ஆனந்தம் தரும் கதைகள்.அது நம் சுயநலத்திற்காக,பிறர் கெடுதலுக்காக மாறுகையிலேயே கதை என்ற பெயர் பொய்யன்றாகிறது.கவிதையில் அதுவே மீண்டும் பேரழகாகிறது.என்றபோதும் மிகஆழத்தில் உண்மையை ஒருசிறு வைரத்துளியென அனைத்துக்கதைகளும் கனிக்குள் சிறுவிதையென பொத்தி வைத்திருக்கின்றன.அந்த விதை விருட்சமாகி காடாவது போல முன்னோர்களின் ஆளுள்ளத்து பேருண்மைகள்,அச்சங்கள்,நம்பிக்கைகள்,மனநிறைவுகள்,அவர்கள் மட்டும் உணர்ந்ததென ஒவ்வொருவரும் நினைக்கும் சில கண்டடைதல்கள் இணைந்து பொதுவாகும் ஒர...

கவிதைகள்

                பச்சைக்குளம்        ஓரமாய் ஒதுங்குகிறது கலைகிறது மிதந்து திசையில்லாமல் நகர்கிறது நீர் மேல் பாசி. அத்தனை அலைகழிப்புகளையும் சமன் செய்து அசைத்தபடி மிதக்கிறது. பின்னொரு அதிகாலையில் குளத்தை தன்னடியில் ஔித்தபடி  அசைவற்று நிற்கிறது.. அன்றைய முதல் தொடுதலுக்காக.                                                                                                                   அம்மையப்பன்                                                                         ...

அவள் பள்ளிகாெண்டபுரம்

                     நாவல்:பள்ளிகொண்டபுரம் ஆசிரியர்:நீல.பத்மநாபன் மீள்வாசிப்பின் பொழுது தான் தெரிகிறது இந்த நாவலை நான் மறக்கவே இல்லை என. சிலபகுதிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அத்தனைக்கு வலிமையான எழுத்து.  பத்மநாபசுவாமி கோயிலை சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் அந்தநகரின் அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளையானது அதன் இருளோடும் குளிரோடும் நினைவில் இருக்கிறது. கருவறை இருளில் இருந்து சுடர் வெளிச்சத்தில் துலங்கி வரும் பத்மநாபசுவாமியின் பதினெட்டு அடி கருத்த சயனத்திருமேனியின் சித்திரம் மனதில் எழுகிறது. அனந்தன்காடானது திருவனந்தபுரமாக மாறிய புராணக்கதையும், அதன் வரலாறும் நாவலில் சொல்லப்படுகிறது.  அவ்வளவு பெரிய ஆலயத்தைச்சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளும்,விழாக்களும் ,ஆலய அமைப்பும்,நகரமும்,கோவில் சார்ந்த கலைகளும் நாவல் முழுக்க நிறைந்திருக்கின்றன. பத்மநாபபுரம் தன் அத்தனை அழகுகளுடனும்,சந்தடிகளுடனும் நாவலின் ஒரு கதாப்பாத்திரமாக  இருக்கிறது. நாவலின் மொழியானது சமஸ்கிருதமலையாளம் கலந்த தமிழ். எழுதும் களத்தை சார்ந்து இவ்வாறுதான் எழுதமுடியும்...