எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்
இசையாகி நின்றாய் புரவி செப்டம்பர் இதழில் வெளியாகிய தமிழின் மூத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல். என் கேள்விகளையும், குரலையும் பொறுமையாக கையாண்ட யுவன்சார்க்கும் ,வாசகசாலை நண்பர்களுக்கும் என் அன்பு. எழுத்தாளர் யுவன்சந்திரசேகர் அவர்கள் தமிழின் மிகமுக்கியமான படைப்பாளி. ஆறுநாவல்கள்,சிறுகதை தொகுப்புகள்,கவிதை தொகுதிகள் என மொழிவெளிப்பாடுகளின் பலவகைமைகளில் இயங்குபவர். இசையில் தோய்ந்து இசையுடனேயே இருக்கும் இயல்புடையவர். ஹிந்துஸ்தானி இசை என்ற தளத்தில் எழுதப்பட்ட மிகமுக்கியமான நாவல் கானல்நதி. பொதுவாகவே இசை குறித்த நாவல் என்ற வகையில் முக்கியமான நாவல். இந்த நாவலுடன் இணைத்து வாசிக்க வேண்டிய இவரின் மற்றொரு நாவல் நினைவுதிர்காலம். இது கானல்நதி நாவலை மையப்படுத்திய நேர்காணல். 1. நாவலிற்கான பின்னுரையில் இசை என்ற புலத்தைப் பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். நாவல் வெளிவந்த பின்னரான இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அந்தக் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கின்றனவா இல்லை கேள்விகள் அதிகமாகியிருப்பதாக நினைக்கிறீர்களா? அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதி