இற்றைத்திங்கள் அந்நிலவில் 15
[செப்டம்பர் 2024 சொல்வனம் இதழில் வெளியாகிய கட்டுரை] காவிரி சூழ் நாடன் பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியாரால் பாடப்பெற்றது. இது காவிரி பாயும் மருதநில மன்னனை பற்றிய கதை. ஆற்றுப்படைகள் செய்யுள்வடிவில் எழுதப்பட்ட நீண்ட கதைகள் எனலாம். இது பாடாண் திணையில் பாடப்பட்டுள்ளது. இது புறப்பாடல். சோழ அரசன் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஆற்றுப்படை இது. பாடப்படும் தலைவனை உயர்த்திப்பாடும் பாடலாக இருந்தாலும் நிலவியல்காட்சிகள்,பாடிணியின் பாலை நில வழிபாடு,யாழின் அமைப்பு மற்றும் யாழிசை பற்றி கூறும் பகுதிகள் நுட்பமானவை. கரிகால் பெருவளத்தான் புலவர்களை வழியனுப்பும் பண்பு தனிச்சிறப்பானது. கரிகாலனை பெருவளத்தான் என்று குறிப்படுவதே அழகிய சொல்லாட்சி மட்டுமல்லாது அதிலேயே அவன் நாட்டின் வளம் பற்றிய குறிப்புள்ளது. அவன் தந்தை இளம்சேட்சென்னி இளம் வயதில் இறந்ததால் மிக இளமையிலேயே கரிகாலன் அரசுகட்டில் ஏறுகிறான். இளமையில் தீவிபத்தில் கால் கருகிவிட அவனுடைய எரிந்த கால்களாலேயே சிறப்புபெயர் பெற்ற மன்னன் கரிகாலன். முடத்தாமகண்ணியார் பொருநறாற்றுப்படையின் இறுதியில் மூவுகளந்தவனின் கால்களை குறித்துப் பாடியபின் கரி