கவிஞர் பிரான்சிஸ் கிருபா 16.11.21 அன்று மாலை இயற்கை எய்தினார். "மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்" _பிரான்ஸிஸ் கிருபா பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகள் கண்முன் பெய்யும் மழைபோல அப்பட்டமானவை. அதற்கு எந்த வடிகட்டுதலும் இல்லை. அவை மிகையான உணர்வுகளை கொண்ட கவிதைகள் என்று சொல்லப்படலாம். என்றாலும் அவை அந்தத் தன்மையாலேயே அழகு கொள்கின்றன. "கணங்கள்தோறும் என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும் போது….ஏன் நீயேனும் கொஞ்சம் என்னை மன்னிக்கக்கூடாது" பிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை சாதாரணமாக பார்த்தால் காதல்கவிதையாக தோன்றக்கூடும். ஆனால் ஒரு கவிதை வாசிப்பவருக்கு எப்படியாகவும் இருக்கலாம் என்பதே கவிதை என்னும் வெளிப்பாட்டை மிக வசீகரமானதாகவும், அந்தரங்கமானதாகவும் ஆக்குகிறது. இந்தக்கவிதையை இறையை நோக்கி திருப்பும் போது அது எத்தனை விரிவு கொள்கிறது! "நடைபோடும் வழிகள் கடைகள் வரை நினைக்கின்றன பிள்ளைகள் பற்றிக்கொள்ள ஒருவிரல் போதுமென்று ஒற்றை விரலுக்குப் பின்னே மு...