எழுத்தாளர் கா.சிவா அவர்களுக்கு அன்பும் நன்றியும். சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை. பூமுள் கதைகள்- கமலதேவியின் "குருதியுறவு" நூலை முன்வைத்து எழுத்தாளர் கா.சிவா திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் இடையே கொல்லிமலைக்கு அருகே வசித்துவரும் கமலதேவியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "குருதியுறவு". இந்நூலில் முன்னுரை, என்னுரை, ஆசிரியர் குறிப்பு எதுவுமில்லாமல் பதினேழு கதைகள் உள்ளன. பின்னட்டையில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி எழுதியுள்ள குறிப்பிலிருந்துதான் ஆசிரியரைப் பற்றிய சிறிய அறிமுகம் கிடைக்கிறது. அவர் ஆசிரியையாக பணியாற்றுபவராக இருக்கக் கூடும் என்று சில கதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது. பதினேழு கதைகளில் "வேலி" என்ற ஒருகதை மட்டும் மிகுபுனைவாகவும், "குன்றத்தின் முழுநிலா" கதை வரலாற்றுக் கதையாகவும், "ராதேயன்" புராணக் கதையாகவும் உள்ளன. மற்ற கதைகளெல்லாம் யதார்த்த வாழ்வை உரைப்பதாக உள்ளன. இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போதே ஈர்ப்...