2022 ஆகஸ்ட் 1,வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை. மொட்டவிழும் கணம் ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, மந்தி நல் அவை மருள்வன நோக்க, கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, செருச் செய் யானை செல் நெறி வினாஅய், புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் பலர்தில், வாழி தோழி! அவருள், ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஓர் யான் ஆகுவது எவன்கொல், நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? அகநானூறு:82 பாடியவர்:கபிலர் திணை:குறிஞ்சி அகநானூற்றில் களிற்று யா...