2023 மார்ச் 16 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை. அகநக நட்பு யாழொடும் கொள்ளா,பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன_ ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு : 92 பாடியவர்: ஔவையர் பாட்டுடைத்தலைவன்: அதியமான் நெடுமான் அஞ்சி திணை : பாடாண்திணை துறை : இயன்மொழி ஔவையார் அதியமானை பாட்டுடை தலைவனாக்கி ‘எண்தேர்செய்யும் தச்சன்’ [புறம் 87] போன்ற புகழ் பெற்ற பலப்பாடல்களைப் பாடியுள்ளார். உவமை அழகுகள் மிக்க பாடல்கள் அவை. தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்ததை கூறும் பாடல் உள்ளது. புலால் நாற்றமடிக்கும் என் தலையை அவனுடைய நறுமணம் மிக்க கையால் தடவுவான் என்று ஒளவை ஒருபாடலில் சொல்கிறார். ‘முழவுத்தோள் என் ஐயை’[புறம் 89] என்ற வரியில் தலைவனாக,இறைவனாக,தந்தந்தையாக அவனைப் பாடுகிறாள். அதியமானை ‘என் ஐயை’ என்று இன்னும் சில பாடல்களிலும் கூறுகிறாள். ‘நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை’[ புறம் 94]...