வெந்தழலால் வேகாது :2
புரவி இதழிலி வெளியான கட்டுரை உயிர்ப்பின் வெளி இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின் புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத் தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும் போது வா. - வில்லியம் சிட்னி வால்கர் உன் கடிதத்தை இவ்வாறாக எதிர்பார்த்தேன் என்று கி.ராவிற்கு கு.அழகிரிசாமி எழுதுகிறார். கு.அழகிரிசாமி கி.ராவுக்கு எழுதிய கடிதங்கள் ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. அதன் முன்னுரையில் கி.ரா இந்தக்கடிதங்கள் காதல் கடிதங்களின் அளவிற்கு உணர்வுபூர்வமானவை என்கிறார். இந்தநூலின் வழி இன்னொரு அழகிரிசாமியை நம்மால் தரிசிக்க முடிகிறது. நண்பரை அளவு கடந்து நேசிக்கும் ஒருவரின் அலைகழிப்புகளும், அன்பின்பித்தும் நிறைந்த கடிதங்கள் இவை. சென்னையில் இருந்து இடைசெவலிற்கு தினமும் ஒரு கடிதம். அழகிரிசாமிக்குதான் அனைத்து அலைகழிப்புகளும். கி.ரா கு.அழகிசாமியின் அழியா அன்பின் மீது நம்பிக்கை வைத்து ‘பயல்’ எங்கே போய்விடப