Posts

Showing posts from November, 2024

இற்றைத்திங்கள் அந்நிலவில் : 16

Image
 [2024 அக்டோபர் சொல்வனம் இணைய இதழில் வெளியான கட்டுரை] தளிர் பெருமரம் ஔவையார் அகநானூற்றில் நான்கு பாடல்கள் பாடியுள்ளார் . நான்கும் பாலைத்திணை பாடல்கள் . பிரிவ   பாடும் தலைவி கூற்றுகள் . ஓங்கிய மலைகளையும், வரண்ட காடுகளையும் , மணல் வெளிகளையும் கடந்து தலைவன் பொருள் தேடி செல்கிறான் . தலைவி தன் நிலத்தை விட்டு வெளியே சென்றவள் இல்லை . கதைகளாக மற்றவர் சொல்லக் கேட்கும் தலைவி தன் ஊகத்தாலும் ,   கற்பனையாலும் , கனவாலும் விரித்துக்கொள்ளும் நிலவெளி இந்தப்பாடல்களில் உள்ளது . தலைவியின் மனதில் விரியும் நிலமும் , பிரிவு சார்ந்த உணர்வுகளும் பாடல்களாகியுள்ளன . பிடவம் பூக்களையும் , வேங்கை மலர்களையும் காணும்   தலைவிக்கு தலைவன் நினைவு வருகிறது . அவன் செல்லும் வழியில் புலிகள் இருக்கிறது . அதுவும் குட்டிகளை ஈன்று பசியுடன் இருக்கும் புலி . அந்தப் பெண்புலியின் இணையான ஆண் புலி தன் ஐந்துபொறிகளும் உச்சநிலையில் விழித்திருக்க இரைக்காக காத்திருக்கும் காட்டு வழியில் தலைவன் சென்றுள்ளான் என்று தலைவி பதறுகிறாள் . ஓங்கு மலைச் சிலம்பில் பிடவ