Posts

மழைமுகம்

Image
பனிநீர்,குளிர்,தண்மை,நளிர்,அளி என்று பல சொற்கள் நம்மிடம் உண்டு. எனக்கு தண்மை என்ற சொல் மீது ஈர்ப்பு உண்டு. அந்த சொல்லிலேயே அந்த உணர்வு தெரியும். குறைச்சல் கூடுதலில்லா ஒரு இதநிலை. அன்பு போல. இங்கு அனைத்து பருவநிலைகளுமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கோடை, குளிர், மழை,காற்றுகாலம் என்று அனைத்துமே.  கோடை மழைக்கான முதல் முழக்கமே எங்காவது பக்கத்தில் இடிவிழும் சத்தத்துடன் நம்மை அதிரவைத்தடி வரும். இந்த கோடைமழையும் எப்பொழுதும் போல இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வீட்டில் இடிவிழுந்தபடி வந்தது. சென்ற முறை ஒரு பனைமரத்தை எரிய வைத்தது. இரண்டுநாட்களுக்கு முன் மழைப்பெய்யாமல் முழக்கமாக மட்டும்  அமைதியாகிவிட்டது. அடுத்தநாள் காலையில் மாடியில் படிந்திருந்தன புழுதியில் நீர்சொட்டுகளின் தடங்கள். கண்ணன் தன் மழைக்கால்களுடன் சீராக நடந்து விளையாடியது போல தூரலின் காய்ந்த தடங்கள். மாடியின் சிவப்பு ஓட்டுத்தரை முழுவதும் ஏதோ ஒரு லிபியை தூரல்கள்  எழுதி சென்றிருந்தன. நேற்று இரவு அரைமணி நேரத்திற்கு மேல் மழை. ஒரு உழவு மழை. காய்ந்து கிடக்கும் மண்ணை கலப்பையால் மேலாக ஒரு கீறுகீறிப்போடலாம். ஆனால் பெரும்பாலும் இங்கு அப்படி ஒன்றும்

சொல்லென்று வந்து நிற்பது

சொற்கள் உணர்வுகளின் ஒலிவடிவங்கள். சில சொற்கள் முன் நாம் ஸ்தம்பித்து நின்றுவிடுவது உண்டு.  அப்படி ஒரு சொல் அறம். https://kamaladeviwrites.blogspot.com/2024/05/blog-post.html இந்தப்பதிவில் என் கதையை பற்றிய ஒரு விவாதம் உள்ளது.  அதில் உள்ள அறம் என்னை தொந்தரவு செய்தது. அந்தப்பதிவின் இறுதியிலேயே சரியான இடத்திற்கு வந்துவிட்டேன். ஏன் ஆளுமைகளை புனைவாக்கும் கதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ஏன் சட்டென்று அப்படி சொன்னேன் என்று யோசித்தேன். சுந்தரராமசாமி நினைவிற்கு வந்தார். சில நேரங்களில் அவர் தன் பேச்சின் அனைத்து கதவுகளையும் அடைத்துவிடுவார். மேற்கொண்டு எதுவும் பேசமாட்டார் என்று அவரைப்பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. அது மாதிரியான ஒரு விஷயம் தான் நான் செய்தது. மிக அண்மையில் வாழ்ந்தவர்களோ சங்ககாலத்தில் வாழ்ந்தவர்களோ யாராயிருந்தாலும் அவரின் வாழ்க்கை எழுத்தாளரின் கச்சா பொருள். அந்த வாழ்வில் இருந்து நம் மனம் உணர்வது இருளாகவோ வெளிச்சமாகவோ இருக்கலாம். நாம் தரிசிப்பது நேர்மறையான உணர்வாகவோ,எதிர்மறையான உணர்வாகவோ இருக்கலாம். அதை தன்னிலையில் படர்க்கையில் என்று எப்படியும

வெளிச்சம் கதை பற்றிய உரையாடல்

Image
 [அண்மையில் நான் எழுதிய வெளிச்சம் என்ற சிறுகதை குறித்து நடந்த ஒரு உரையாடல்...எழுத்தாளர் அம்பை வெளிச்சம் கதை பற்றி தான் எழுதியதை என்னிடம் பகிர்ந்தார்..பகிர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியும் அன்பும்.] கமலதேவி நான் 'வெளிச்சம்' கதை பற்றி இன்னொரு பதிவர் சுவரில் எழுதியிருப்பதை கேள்விபட்டிருப்பீர்கள். உங்கள் பார்வைக்காக இங்கு... கமலதேவியின் கதைகள் பிடிக்கும். ஆனால் 'வெளிச்சம்' கதை எழுதியது அறமற்ற செயல். மறைந்துபோன ஒரு எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு அறிந்திருந்தாலும் அதை கதையாக்குவது சரியல்ல. அதுவும் அதை தன்னிலை கதையாக்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. சூடாமணியை நான் என் எம்.ஏ படிக்கும் காலத்திலிருந்து அவர் மறையும் வரை அறிவேன். அவரின்  சகோதரர் சகோதரிகளுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். யாரும் இப்போது இல்லை. ஆனால் அவர் வாழ்க்கையையோ கருத்துகளையோ கதையாக்க துணிந்ததில்லை. காரணம் அது அறம் இல்லை. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் இதை படிக்கமாட்டார்கள் என்று தெரிந்திருப்பதால் இந்தக்கதை எழுதியிருந்தால் அது மிகப்பெரிய தவறு. கமலதேவி இதை செய்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. K.ரவிசங்கர் இதைப்ப

அம்பறாத்தூணி [கவிஞர் இசை கவிதைகள்]

Image
 [மார்ச் 2024 கவிதைகள் இணைய இதழில் வெளியான வாசிப்பனுபவக் கட்டுரை] இலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டு.  அதே போல சொற்களை கவிஞன் ஏவும் கணைகள் என்று சொல்வேன். சில சமயங்கள் இரண்டு மூன்றுஅம்புகளை சேர்ந்து தொடுப்பதை நம் புராணங்களில் இருந்து சினிமாக்கள் வரை பார்க்கலாம். கவிஞன் பயன்படுத்தும் சொல்இணைவுகளை அவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்.            கவிஞர் இசையின் கவிதைகளில் சொற்கள் செய்ய வேண்டிய தொழிலை ‘சொல்லின்பொருள்’ செய்கிறது. அதை பகடி என்றோ விளையாட்டு என்றோ சொல்லலாம். ஆனால் அது    தன்னியல்பில் கவிதைக்கு ஏற்ப அம்பின் கூரை கொண்டுள்ளது. வில் பழகுதல் என்பது விளையாட்டாக இருக்கும்போதே நம் அர்ஜூனர்கள் பறவையின் கண்ணைத் தான் குறி வைக்கிறார்கள்.  அ

வெளிச்சம்

Image
 [ஏப்ரல் 1 2024 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை] வெளிச்சம் வரைந்த ஓவியத்தை நகர்த்தி வைத்துவிட்டு தரையில் இருந்து எழுந்து ஜன்னல்பக்கம் சென்று நின்றேன். இன்னும் இருட்டவில்லை. சாயுங்கால வெளிச்சத்தில் நாகலிங்க மரம் பெரிய சிவந்த பூக்களை தன்னைச் சுற்றி உதிர்த்திருந்தது. மரத்திற்கு அப்பால் செல்லும் ப்ரிட்டிஷ்  அரசுக்குடியிருப்பின் ஸ்பர்டாங்க் சாலை நீண்டது. பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். ஒவ்வொரு குடியிருப்பின் முன்னால் வளர்க்கப்பட்டிருந்த  மரங்களின் நிழல்படிந்த வழியில் ஒரு ஃபோக்ஸ் வேகன் பீட்டில் கார் நிதானமாக சென்றுகொண்டிருந்தது. எதிரே சுதேசி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். இங்கு யாரைத்தேடி வருகிறாரோ.  ருக்மிணியின் கல்யாணம் முடிந்தப்பின் உறவுகள் கிளம்பி சென்றுவிட்டார்கள்.  பெரிய அக்காவும் , “பக்கத்துல தானே.. எதுன்னாலும் உடனே ஓடி வந்திடறேன்,” என்று நேற்று சாயங்காலமாக கிளம்பி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தன்வீட்டிற்கு சென்று விட்டாள். அக்காக்கள் கல்யாணமாகி சென்ற போது தங்கை  ருக்மிணி இருந்ததால் மனதிற்கு இத்தனை மசமசப்பாக இல்லை . அப்பா வழக்கம் போல பரபரப்பாகவே இருக்கிறார். ஒரு கல்யாணகாரியம் சரி

சூடாமணி கதைகள்_ கடிதம்

Image
  வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாசகசாலை தளத்தில் வெளியான வெளிச்சம் படித்தேன். மெல்லிய அகில் புகை போல வாழ்ந்து மறைந்த சூடாமணி அவர்களின் சித்தரிப்பு சற்றும் மிகையின்றி வந்துள்ளது. என்னுடைய பிரியத்துக்கு உரிய எழுத்து அவருடையது. சாந்தமான நடையால் சலனங்களை ஏற்படுத்தும் தன்மையுடையது. உங்கள் சிறுகதை என்னை ஒரு மீள்வாசிப்புக்குத்  தூண்டுகிறது.  நன்றி சூரியன் MR  அன்புள்ள சூரியன், நலம். நலம் விழைகிறேன். எழுத்தாளர் சூடாமணியின் கதைகள் பற்றி நீங்கள் எழுதியிருப்பது குறித்தும், மறுபடியும் அவர் கதைகளை வாசிப்பதற்கு என் கதை தூண்டுகோலாக நீங்கள் உணர்ந்தது குறித்தும் மகிழ்ச்சி. வாசிங்க. அன்புடன், கமலதேவி வெளிச்சம் கதைக்கான இணைப்பு :  https://vasagasalai.com/velicham-sirukathai-kamaladevi-vasagasalai-92/

இற்றைத்திங்கள் அந்நிலவில் 9

Image
 [பிப்ரவரி 2024 சொல்வனம் இணையஇதழில் வெளியான கட்டுரை] சந்தனம் வாடும் பெருங்காடு நல்வெள்ளியார் நான்கு அகப்பாடல்கள் பாடியுள்ளார்.  தலைவியும் தோழியும்  திணைப்புனத்தில் காவலிற்கு இருக்கிறார்கள். அங்கு வரும் மணிப் பூண் அணிந்த தலைவன் தலைவியிடம் பணிந்து பேசி தன் காதலை அறிவிக்கிறான். மறுக்கும் தலைவியின் மனதிடத்தை வியந்து திரும்பி செல்கிறான்.  அடுத்தநாள் தலைவி இப்படி சொல்கிறாள்.. ‘ இகுபெயல் மண்ணின் நெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் கடியகூறி’ [அகநானூறு 32] பெய்யும் மழையில் கரையும் மண் போல அவனால் என் மனம் கரைவதை கண்டு கொண்டானோ என்று பதறி மறுத்தேன் என்று வருத்தத்துடன் கூறுகிறாள்.  அதற்கு தோழி… இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று என் குறைப் புறனிலை முயலும் அண்கணாளனை நகுகம் யாமே  தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா… என்கிறாள். அடுத்தப்பாடலில் ஒரு தோழி தலைவனிடம் தலைவியின் நிலைய