மலேசிய எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் பேய்ச்சி நாவலை மையப்படுத்தி புரவி ஆகஸ்ட் இதழிற்காக செய்த நேர்காணல். எழுத்தாளர் நவீன் மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு. எழுத்தாளரின் நூல்கள்: 1.சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்), 2.வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல் 3.மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு) 4.போயாக் 2018 (சிறுகதை தொகுப்பு) 5.பேய்ச்சி (2019) நாவல் 6.மகாராணியின் செக் மெட் (2019) கவிதை 7.உச்சை (2020) சிறுகதை தொகுப்பு 8.கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு) 9.விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு) 10. வகுப்பறையின் கடைசி நாற்காலி – 2015 (கட்டுரைத் தொகுப்பு) 11. லகின் நாக்கு - 2017 (உலக இலக்கிய அறிமுகம்) 12.மீ ண்டு நிலைத்த நிழல்கள் 2018 (நேர்காணல் தொகுப்பு) 13.நா ரின் மணம் 2018 (பத்தி தொகுப்பு) 14.மனசிலாயோ - 2020 (பயண நூல்) ம 15.ம லேசிய நாவல்கள் (2020) தொகுதி நேர்க்காணல்: எழுத்தாளர் ம.நவீன் நேர்க்கண்டவர்:எழுத்தாளர் கமலதேவி கேள்வி: பேய்ச்சிக்கான முதல் விதை விழுந்த நிகழ்வென்று ஏதாவது உள்ளதா? அதை எத்தனை காலம் மனதிற்குள் க...