Skip to main content

Posts

Showing posts from March, 2025

அரும்பு

  சாயுங்கால வெயில் தணிந்திருந்தது. எங்கள் சுற்றுக்குள் உள்ள நான்கு வீடுகளிலும் மதியஉறக்கம் முடித்த அம்மாக்களின் நடமாட்டம் தொடங்கியது. நான்கு வீடுகள் சுற்றியிருக்க வீடுகளுக்கு நடுவில் உள்ள சிமெண்ட் தளம் இறகுபந்து விளையாட்டு பயிற்சிக்களம் அளவுக்கு மேல் இருக்கும். தெற்கு ஓரத்தில் பழைய கிணறு ஒன்று. அதன் முடிவில் கிழக்கு பார்த்த சுற்றுசுவரில் பெரிய இரும்பு கதவுகளின் முன்னே வண்டி வந்து நின்றது. சனிக்கிழமை என்பதால் வங்கியிலிருந்து சீக்கிரமே அப்பா வந்துவிட்டார். நான் அவருக்கு கைக்காட்டிவிட்டு ஓடிப்போய் கதவுகளைத் திறந்துவிட்டேன். திரும்பி வந்து துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டேன். அவர் ஹீரோ ஹோண்டாவை உள்ளே தகரதாழ்வாரத்தின் அடியில்  நிறுத்தி விட்டு கருப்பு தோள்பையை கையில் பிடித்தபடி என் அருகில் வந்து நின்றார். “எப்பப்பாத்தாலும் இந்த ஹெட்ஃபோனை மாட்டிக்கிட்டே திரியற. யாரு பேசறதையும் கேக்கறதில்ல,” “பாட்டு கேக்கறது ஒரு தப்பாப்பா,”  “பொழுதன்னைக்கும் பாட்டா..லீவ்ல கம்ப்யூட்டர் க்ளாஸ் போகனுன்னியே..என்னாச்சு..இப்படிஒக்காந்து ஒக்காந்தே துவைக்கற கல்லை தேய்க்கப்போறியா,” “இல்லப்பா..விசு ஸ்டார்...

அது

பிரவாகத்தில் அல்ல அதன் ஆழத்தில் அல்ல அதற்கும் கீழே மண்ணுக்கு அடியில் நகரும் நீராய்.. அதன் காலடியில் அமர்ந்திருக்கிறேன் காலகாலமாய்... பின்னொரு தவ்வலின் பீறிட்டலில் பிரவாகத்தின் அலையின் மிதக்கும் கிளையொன்றில் சிறுபறவை நான். பின் எப்போதோ கிளை நகர்ந்து கொண்டது சிறகு மறைந்துபோனது உடலும்கூட நீரோடு கரைந்தது இப்போது பிரவாகம் நான்.

அரிதாரம்

 ஊரில் ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கூத்து நடக்கிறது. சாயுங்காலமானால் ஒலிப்பெருக்கியின் ஆதிக்கம் துவங்கிவிடும். இன்னொரு பக்கம் பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள். நான் எங்கள் ஊர் பள்ளியில் தற்காலிக ஆசியராக பணி செய்த போது பணியில் சேர்ந்த ஆண்டின் ஆண்டுவிழாவி்ன் போது விழித்துக்கொண்டு நின்றேன். அது வரையான தன்னம்பிக்கை மிக்க ஆசிரியர் தலைகுனியும் நேரம். நடனமாட தெரியாது..ஒப்பனை செய்யதெரியாது . 'புது டீச்சருக்கு லிப்ஸ்டிக் கூட போட்டுவிட தெரியல," என்று வாயில் கை வைத்து பிள்ளைகள் என்று சிரித்தன. உண்மையிலேயே பெண்ணாய் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. " ஏம்மா...இந்த புடவைங்களையாவது பிள்ளைகளுக்கு கட்டி விடேன்..." என்று சகஆசிரியைகள் சலித்துக்கொண்டார்கள். கல்வியியல் கல்லூரி படிக்கும் போது இருபத்துநான்கு வயதில் முதன்முதலாக சேலை கட்டிப்பழகினேன். இன்று வரை எனக்கு புடவை வசதியான உடை இல்லை. நான் தவிர்க்கும் உடையாகவே இருக்கிறது. 'புடவை ஒரு கன்வீனியன்ட்டான டிரஸ் இல்லை' என்பது என் கருத்து. கவுன், மிடி, பாண்ட் டீசர்ட் ,தாவணி,சுடிதார் என்று கடந்து வந்ததில் இன்றுள்ள அனார்கலிகுர்தா தான் எனக்கு மிகவு...