பிரவாகத்தில் அல்ல
அதன் ஆழத்தில் அல்ல
அதற்கும் கீழே
மண்ணுக்கு அடியில்
நகரும் நீராய்..
அதன் காலடியில் அமர்ந்திருக்கிறேன்
காலகாலமாய்...
பின்னொரு தவ்வலின்
பீறிட்டலில்
பிரவாகத்தின் அலையின் மிதக்கும்
கிளையொன்றில் சிறுபறவை நான்.
பின் எப்போதோ
கிளை நகர்ந்து கொண்டது
சிறகு மறைந்துபோனது
உடலும்கூட நீரோடு கரைந்தது
இப்போது பிரவாகம் நான்.
Comments
Post a Comment