கண்ணனை அழைத்தல் 1994 ஆம் ஆண்டு இலக்கியஆண்டுமலர் இந்தியாடுடேவின் இந்தஇதழும்,முன்னால் பிரதமர் இந்திராகாந்தி பற்றிய முழுஇதழ் ஒன்றும் எனக்கு மிகவும் ப்ரியமானது. இந்தப்புத்தகத்தின் தாள்கள் ஔிமங்கி,சிதையத்தொடங்கி விட்டன. ஒருஇதழ் இத்தனை ஆண்டுகள் வாசிக்கும்படி இருப்பதே வியப்புதான். ஒரு மேமாதத்தில் பழையபுத்தகங்களை பிரித்து வைக்கும் போது அய்யா இதை எடுத்துக்கொடுத்தார். எழுத்தாளர்கள் எஸ்.ரா,ஜெயமோகன்,இரா.முருகன்,கோமல் சுவாமிநாதன்,சி.சு.செல்லப்பா,கல்யாண்ஜீ,கலாப்ரியா,யுவன்,தெளிவத்தை ஜோசப், அம்பை,வாஸந்தி என்று நீளும் இந்த இதழின் படைப்புகளின்,படைப்பாளர்களின் இலக்கியமுக்கியத்துவத்தை அன்று அறியவில்லை. புலிக்கட்டம்,அனந்தசயனம் காலனி,நஞ்சு,சிலிகன் வாசல்,ஆயிரம்கால் மண்டபம்,பீலி மேலே போகிறது,வேறு வேறு,பார்வைகள்,வாடிவாசல் என்ற குறுநாவல்,காதில் வெண்டைக்காய் என்ற நாடகம் என்று அனைத்துமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் படைப்புகள். இந்த இதழில் எழுத்தாளர் அம்பையின் ' பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்' என்ற இந்தக்கத...