இருளின் ஔி
மேகங்களில்லா வானில்
ஔியை இழையாய் பிரித்து நெய்த
கோடானுகோடி ஔிப்படலத்தை அழுத்தி செய்த முழுநிலா,
உற்றுப்பார்த்தால்
வானிலிருந்து பிரிந்து எழுகிறது.
பதறி கண்மூடித்திறக்கையில்
மென்ஔி கரும்பட்டுத்திரையில்
வட்டஔிக்கல்.
ஔி ஒருஊற்றிலிருந்து
பீரிடுகிறது,
ஔி ஒருமாயம் என விரிகிறது.
இத்தனை வார்த்தைகளாலும்
ஆவது ஒன்றுமில்லை.
“சந்தமாமா பாரு” அம்மாச்சி
அழைத்துக் கொடுத்த வார்த்தை.
ஆமாம் சந்தமாமா .
நகர்ந்து கொண்டிருக்கும்
சந்தமாமா பஞ்சுப்போர்வையை போர்த்திக்
கொள்ளும் முன்
ஒருவாய்…ச்.. இல்லை
ஒருமுறை புன்னகைத்தேன்.
Comments
Post a Comment