Skip to main content

Posts

கவிஞர் பிரான்சிஸ் கிருபாவிற்கு அஞ்சலி

         கவிஞர் பிரான்சிஸ் கிருபா 16.11.21 அன்று மாலை இயற்கை எய்தினார். "மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்"                 _பிரான்ஸிஸ் கிருபா        பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகள் கண்முன் பெய்யும் மழைபோல அப்பட்டமானவை. அதற்கு எந்த வடிகட்டுதலும் இல்லை. அவை மிகையான உணர்வுகளை கொண்ட கவிதைகள் என்று சொல்லப்படலாம். என்றாலும் அவை அந்தத் தன்மையாலேயே அழகு கொள்கின்றன.  "கணங்கள்தோறும்  என்னை நானே தண்டித்துக்கொண்டிருக்கும் போது….ஏன் நீயேனும் கொஞ்சம் என்னை மன்னிக்கக்கூடாது" பிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை சாதாரணமாக பார்த்தால் காதல்கவிதையாக தோன்றக்கூடும். ஆனால் ஒரு கவிதை வாசிப்பவருக்கு எப்படியாகவும் இருக்கலாம் என்பதே கவிதை என்னும் வெளிப்பாட்டை மிக வசீகரமானதாகவும், அந்தரங்கமானதாகவும் ஆக்குகிறது. இந்தக்கவிதையை இறையை நோக்கி திருப்பும் போது அது எத்தனை விரிவு கொள்கிறது! "நடைபோடும் வழிகள் கடைகள் வரை நினைக்கின்றன பிள்ளைகள் பற்றிக்கொள்ள ஒருவிரல் போதுமென்று ஒற்றை விரலுக்குப் பின்னே மு...

சிறுகதை

      சொல்வனம் இணையஇதழில் வெளியான கதை .                              பொன்சிறகு இதென்ன சாவுஉறக்கம் என்று ராணி மங்கம்மாள் விழித்து எழுந்தபோது இருள் விலகாமலிருந்தது. அவிழ்ந்து கிடந்த நீண்ட நரைகலந்த கூந்தலை கொண்டையாக இடும்பொழுது, இன்னுமா மதுரா கமலத்தை எழுப்ப சூரியன் ஓடிவரவில்லை என்று நினைத்து புன்னகைத்தார். பொன்அகலின் திரி தீயும் கருகல் மணம் பரவுவதை நுகர்ந்து பொழுதுணர்ந்து மனம் திடுக்கிட்டு மெத்தையிலிருந்து இறங்கினார்.  சாளரம் இருக்கும் திசைக்கு பழக்கவாசத்தில் நடக்கும் போது கண்களை கசக்கிக்கொண்டார். அறுபதை நெருங்கும் வயதில் கண்களில் ஔி குறையாமல் என்ன செய்யும் என்று நினைத்தவராக சாளரக்கதவுகளை தள்ளினார். அது திறக்கவில்லை. மனம் இரண்டாகப்பிரிந்து ராஜபாட்டையில் விரையும் குதிரைகளானது. பலம் கொண்ட மட்டும் கதவுகளை சாளரங்களை மீண்டும் தள்ளினார். வாளேந்தி சந்திரகிரியை மீட்க நினைத்திருந்த கனவுகள் கலைந்ததும் கரங்களுக்கு அரண்மனை சாளரக்கதவையும் திறக்கமுடியவில்லை என்ற எண்ணத்துடன் கைகளை உதறிக்கொண்டார். துரத்தி செல்ல ...

சிறுகதை : காயம்

     புரவி ஆகஸ்ட் இதழில் வெளியான என்னுடைய  கதை.                                                                                                                              காயம்                                                                 தெருவிளக்கு வெளிச்சம் படரும் தகரதாழ்வாரத்து கயிற்றுக்கட்டிலில் செல்வம் அமர்ந்திருந்தார். மனதிலிருப்பதை பேசமுடியாத எரிச்சல் நெற்றி சுருக்கங்களாக வளைந்தது. அவர் பார்வை திண்ணையைத் தாண்டி  வீட்டினுள் சென்றது. சௌமியாவும் சத்யாவும் எதுவுமே நடக்கவில்லை என்பதைப...

எழுத்தாளர் ம.நவீன் நேர்காணல்

மலேசிய எழுத்தாளர் ம.நவீன் அவர்களின் பேய்ச்சி நாவலை மையப்படுத்தி புரவி ஆகஸ்ட் இதழிற்காக செய்த நேர்காணல். எழுத்தாளர் நவீன் மற்றும் வாசகசாலை நண்பர்களுக்கு என் அன்பு. எழுத்தாளரின் நூல்கள்: 1.சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்), 2.வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல் 3.மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு) 4.போயாக் 2018 (சிறுகதை தொகுப்பு) 5.பேய்ச்சி (2019) நாவல் 6.மகாராணியின் செக் மெட் (2019) கவிதை 7.உச்சை (2020) சிறுகதை தொகுப்பு 8.கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு) 9.விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு) 10. வகுப்பறையின் கடைசி நாற்காலி  – 2015 (கட்டுரைத் தொகுப்பு) 11. லகின் நாக்கு - 2017 (உலக இலக்கிய அறிமுகம்) 12.மீ ண்டு நிலைத்த நிழல்கள் 2018 (நேர்காணல் தொகுப்பு) 13.நா ரின் மணம் 2018 (பத்தி தொகுப்பு) 14.மனசிலாயோ - 2020 (பயண நூல்) ம 15.ம லேசிய நாவல்கள் (2020) தொகுதி   நேர்க்காணல்: எழுத்தாளர் ம.நவீன் நேர்க்கண்டவர்:எழுத்தாளர் கமலதேவி கேள்வி: பேய்ச்சிக்கான முதல் விதை விழுந்த நிகழ்வென்று ஏதாவது உள்ளதா? அதை எத்தனை காலம் மனதிற்குள் க...

ஒன்றெக்கலத்தல்

       காலச்சுவடு ஜீன் இதழில் வெளியான கதை. ஓவியம் :காலச்சுவடு.                                                        ஒன்றெனக்கலத்தல் குருவாயி கோவிலின் முன்னால் கிளைபிரிந்த அய்யாற்றில் தண்ணீர் சுழித்துக்கொண்டு பாய்ந்தது. ஆற்றின் சீறல் ஓசை தொலைவு வரை கேட்டது. எங்கும் புங்கைகள் கிளைநீட்டி தடித்து வளர்ந்திருந்தன. மழை கழுவிய கரும்பச்சை இலைகள் சூரிய ஔியில் மினுமினுத்து அசைந்தன.  ஆற்றின் அக்கரையில் சிவப்பு நிறத்துணி அசையும் மங்கலாய் குருவாயி தெரிகிறாள். இக்கரையில் புளியம், மா, பலா பெருமரங்கள் நின்ற அடிவாரப்பகுதியை அடுத்து அய்யாற்றின் அடுத்தக்கிளை. அதைஅடுத்த காட்டிலிருந்து கொல்லிமலை ஏற்றம். சற்று நேரம் நின்ற காளங்கன் நான்கு ஆட்கள் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத புளியமரத்தின் மழைஈர வேர்ப்புடைப்பில் அமர்ந்தார். அவர் முன்பு விரிந்த இடத்தில் முன்பு இருந்த அதே அளவுள்ள மாமரங்களை, புளியமரங்களை வெட்டி தோண்டி எடுத்தப்பள்ளங்களை நிரப்பிய...