2017 டிசம்பர் சொல்வனம் இதழில் வெளியான சிறுகதை. நன்றி:சொல்வனம் புதையல் “ஒருமுறை பார்ப்பதால் என்ன நடந்துவிடும்?” என்ற கேள்வியுடன் படிகளில் இறங்கினேன். கால்களில் மெல்லிய நடுக்கமிருந்தது. வியர்வையில் நனைந்த உள்ளங்கைகளை கைக்குட்டையில் துடைத்துக் கொண்டேன். இருபுறமும் இழுக்கும் மனதின் கடிவாளத்தை இழுப்பதே வேலையாக இருக்கிறது. தமிழ் மேடமை பார்ப்பதற்கே எனக்கு ...