மார்கழியின் அந்திசூரியன்
கொல்லிமலையின் பின்னே
மறைந்த பின்...
இருள் வந்தும்
தென்மேற்கு மூலை சிவந்திருந்தது,
மறைந்த சூரியன்
அந்த சிகரத்தின் உச்சியில்
ஒரு வீண்மீனை விட்டுச் சென்றிருந்தது.
சூரியனைப் போலவே,
அத்தனை பிரகாசத்துடன் மினுங்கிய
அதை...
இமைக்காமல் பார்த்த கண்களின்
ஈரம் மாற்ற அன்னாந்து பார்த்தேன்,
வானெங்கும் சிவந்த துளிகளாய்
அத்தனை விண்மீன்கள்.
Comments
Post a Comment