எப்போதும்
அவளைத் தேடிச்செல்கிறேன்.
அன்றொரு நாள்
அவளிடம் எதையாவது
கேட்கச்சொன்னார்கள்.
என்ன கேட்பது?
சொல்லாகி நிற்பவள் முன்பு
வெற்று கல்லென்று நின்றேன்.
மீண்டும் மீண்டும்
அவளை நோக்கியே செல்கிறேன்.
ஆனால் அவள் சென்ற பாதையில் அல்ல..
அவளை அடையவும் அல்ல
அவளாக மாறவும் அல்ல.
என்றாலும்
அவளையே தேடிச்செல்கிறேன்.
அவள் மதுமணக்கும் மலர்வனம்.
நான் சமனமாகாத துலாத்தட்டில் விழும்
ஒற்றை துளசி.
Comments
Post a Comment