சன்னிதியின்
படிகளில் படிந்திருக்கும்
ஒவ்வொரு சுவட்டிலும்
வியர்வையின் ஈரம்..
உள்ளே
சிவந்த ஔியாய்
தேங்கி நிற்கிறது அமைதி...
ஆகாயத்தின் கீழே
உக்கிரமானவெயிலில் நனைந்தபடி
கோபுரஉச்சியில் தனித்து நிற்கிறது
சிலுவை..
உன் கோபுர இடுக்கொன்றில்
கூடு கட்டியிருக்கும் குருவி ஒன்று
தன் குஞ்சுகளை
உன்னிடம் விட்டுவிட்டு
இறைதேடி செல்கிறது...
அதன் இறகில்
நீ அமர்ந்து பறக்கிறாய்.
Comments
Post a Comment