[2023 சொல்வனம் 300 வது சிறப்பிதழில் வெளியான கட்டுரை] அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். [ குறள். அதிகாரம்: மக்கட்பேறு] வழக்கமான சொல்லுடன் கட்டுரையைத் தொடங்கலாம். இலக்கியம் என்பது எப்போதும் வாழ்க்கையை தன் பேசுபொருளாகக் கொண்டது. உலகம் முழுவதுமே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வாழ்க்கைமுறை வெகுவாக மாறி இருக்கிறது. சமூகத்திலிருந்து குடும்ப அமைப்பு,தனிமனிதன் வரை உலகமயமாக்கலால் மாறிக்கொண்டிருக்கிறது. தனிமனிதன் என்ற கருதுகோலிற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. வாழ்க்கையை விரிவாக பேசும் இலக்கியவடிவமான நாவலின் பேசுபொருளானது விதவிதமான வாழ்க்கை முறைகள்,மனிதர்கள்,நிலப்பரப்புகள் என்று விரிந்து செல்கிறது. தத்துவம்,வரலாறு,காதல்,மண் சார்ந்த வாழ்க்கை,தனிமனிதன்,விளிம்பு நிலை வாழ்க்கை என்று நாவலின் பேசுபொருள்கள் மிகப்பரந்தவை. சமூகமனிதரான காந்தியையும் அவர் மகனையும் மையப்படுத்திய ஹரிலால் த/பெ மோகன்தாஸ் காரம்சந்த் காந்தி என்ற நாவலையும்,தனிமனிதரின் குழந்தையின்மை சிக்கலை பேசும் காயாம்பூ நாவலையும் இந்தக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்கிறேன். எழு...