இற்றைத்திங்கள் அந்நிலவில் 3
செப்டம்பர் 2023 இதழில் வெளியான கட்டுரை சங்கப்பெண்கவிகள்:3 மொழியென்னும் ஆடி ஆதிமந்தியார்,ஊண்பித்தை,ஓரிற்பிச்சியார்,காமக்கணிப் பசலையார்,காவற்பெண்டு,குமிழிஞாழலார் நப்பசலையார் மற்றும் குறமகள் இளவெயினி ஆகியோரின் பாடல்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருபாடல் எழுதியுள்ளார்கள். சங்கப்பாடல்களில் துணங்கை கூத்து என்ற கூத்தினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பெண்கள் கைக்கோர்த்து ஆடும் நடனம் என்று சொல்லப்படுகிறது. திருவிழாவில் தேர்வலம் முடித்த மாரியம்மன் கோவில் ஊஞ்சலில் வைக்கப்பட்டப்பின், பெண்கள் கூடி கைக்கோர்த்து வட்டமாக ஆடும் ஆட்டம் துணங்கை கூத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம். ஆட்டன்அத்தியை காவிரி வெள்ளம் அடித்துச் செல்கிறது. அவரைத் தேடிச் செல்லும் மனைவி ஆதிமந்தியார் பாடும் பாடல் இது. ஆடிமாத காவிரியில் வெள்ளம் கரை புரள அதை வரவேற்கும் விழாக்கள் கரை நெடுக நடக்கின்றன. ……………… என்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகளமகனே [குறுந்தொகை :31 ஆதிமந்தியார்: மருதத்திணை] அன...