புரவி ஆகஸ்ட் இதழில் வெளியான என்னுடைய கதை. காயம் தெருவிளக்கு வெளிச்சம் படரும் தகரதாழ்வாரத்து கயிற்றுக்கட்டிலில் செல்வம் அமர்ந்திருந்தார். மனதிலிருப்பதை பேசமுடியாத எரிச்சல் நெற்றி சுருக்கங்களாக வளைந்தது. அவர் பார்வை திண்ணையைத் தாண்டி வீட்டினுள் சென்றது. சௌமியாவும் சத்யாவும் எதுவுமே நடக்கவில்லை என்பதைப...
🌿🦋என்னால் பூக்காமலிருக்க முடியவில்லை _ கவிஞர் அய்யப்ப பணிக்கர் 🌺🍀