Skip to main content

Posts

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

எரிக்கும் துக்கம்

  [2024 நவம்பர் நீலி இதழில் கவிஞர் பெருந்தேவி சிறப்பிதழில் வெளியான கட்டுரை] குவிந்த உள்ளங்கை நிறைந்திருக்கிறதா அல்லது ஒன்றுமில்லாதிருக்கிறதா? அது எதையோ கொடுப்பதற்காக நீள்கிறதா அல்லது பெற்றுக்கொள்வதற்காக நீண்டிருக்கிறதா? இந்த சாத்தியங்களைப் போலவே கவிதை தன் சொல்லில் எதை கொண்டிருக்கிறது என்ற சாத்தியங்களும் பலவாறாக  உள்ளன. பெருந்தேவியின் கவிதைகளை அந்த குவிந்த உள்ளங்கையில் அள்ளிய வழிந்தோடக்கூடிய  நீர் எனலாம். சில நேரங்களில்  தொண்டையில் சிக்கிய முள் போல நம்மை தொந்தரவு செய்கின்றன. சிலதை துப்பிவிடலாம். சிலதை விழுங்கிவிடலாம். சில உறுத்திக்கொண்டே இருக்கின்றன இந்தக்கவிதை போல. ஆமென் இல்லைக்கும் இருப்புக்குமிடையே குதித்தோடுது சாம்பல்வட்டம் எரிபடாத பிணக்கணக்கில் இன்றென் பெயர் ஆகுக. ஒரு மெல்லிய சருகு மண்ணிற்கு தன்னை ஒப்புக்கொடுக்காமல் காற்றுக்கு  ஒப்புக்கொடுத்து அலைகழியும் வதைகளின் சொல்வடிவம் இந்தக்கவிதைகள். அந்த ஒற்றை சருகு பலவாக உருமாறி எதிர்காற்றில் சுழல்கிறது. காற்று நின்றால் தரையுடன் படிந்து விடக்கூடும். ஆனால் நிற்காத காற்று அதை சுழற்றிக்கொண்டே இருக்கிறது. மேலும் எங்கும் ...

அமுது

  காரைக்கால் துறைமுகம் அந்திக்கு முந்தைய பரபரப்பில் இருந்தது. கடல்புறத்து அங்காடிகளையும், கடலையும் பார்த்தபடி திலகவதி கடல்திசை நோக்கி திறந்திருந்த பூக்கண் சாளரத்தின் அருகில் நின்றாள். விரல்கள் சாளரங்களின் இடைவெளிகளை பற்றியிருந்தன. காரைக்கால் துறைமுகத்திலிருந்து பரமதத்தன் கடலேறி சென்று ஒரு திங்கள் ஆகியிருந்தது. கண் முன்னே கடல் தழும்பிக்கொண்டிருந்தது. பரதவர்கள் கட்டுமரங்களை கரையில் இழுத்துவிட்டுக்கொண்டிருந்தனர். பரமதத்தனை நினைக்கும் போதே அவளுக்கு  தொண்டையில் விண்னென்று ஒரு வலி வந்து போனது. வரும் திங்களோடு அவளுக்கு பதினாறு அகவை திகைகிறது. கடல் அலைகளை பார்த்துக்கொண்டு வரையப்பட்ட ஓவியம் போல நெடுநேரம் நின்று கொண்டிருந்தாள். ஒரு சில கணங்கள் புறாவென தத்தும் விழிமணிகள் பின்  கடலில் நிலைகொண்டன. மென்னிளம் மாங்கொழுந்தின் நிறம் அவளுக்கு. எதிரே மேற்கு சாளரத்தின் வழி வந்த ஔிப்பட்டு அவளின்  மஞ்சள் பூசிய முகம் வியர்வையில் மினுங்கியது. “இப்படியே நாள் பொழுது இல்லாமல் உப்புக்காற்றில் வெயில்பட நின்றால் உடல் வெம்பிப்போய் விடும் புனிதா,” என்று சொல்லியபடி பூங்கொடி உணவுத்தட்டை மனைபலகைக்கு கீ...

என்னுரை _ பெருங்கனவின் வெளி [கட்டுரைத்தொகுப்பு]

  எழுத்தாளர் அம்பைக்கு சமர்ப்பணம். வாசகியாக மட்டும்….. கட்டுரைகள் எழுதும் போது ஒரு வாசகியாக மட்டும் இருக்கிறேன். அது ஒரு ஒப்புக்கொடுத்தல் நிலை. வாசகநிலை என்பது படைப்புகளுக்கு முழுவதுமாக மனதை கொடுத்தல்.   பெருங்கனவின் வெளி என்ற தலைப்பில் இந்த நூலில் ஒரு கட்டுரை உள்ளது என்றாலும் இந்த நூலிற்கு இந்த தலைப்பை வைப்பதற்கான காரணம் வேறு.  ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவர்களின் அகத்தில் விரிக்கும் கனவு வெளி வெவ்வேறானது. ஒருவர் வாசிப்பது அவருக்கு மட்டுமேயான அனுபவம். அவருக்கு மட்டுமேயான கனவு பரப்பு. நம்முடைய கை ரேகை கண்ரேகைகள் போல தனித்துவமானது. வாசிப்பவர்களுக்கிடையே சில ஒற்றுமைகள் இருக்கும் என்றாலும் கூட வாசிப்பு  அவரவருக்கு உரியது. வாசிப்பவரும், அந்த புத்தகம் விரிக்கும் கனவும் இணைந்தது. இந்த இயல்பே புத்தகங்களை நமக்கு நெருக்கமாக்குகிறது. நம் நடைமுறை தினசரி வாழ்வில் இருந்து ஒரு எம்பு எம்பி அந்த கனவு வெளிக்கு சென்று திரும்புகிறோம். வாசிப்பு என்பது ஒரு பெருங்கனவு வெளி. எனில் வாசிப்பு என்பது கனவு மட்டுமா? என்று கேட்கலாம். கனவு என்பது நம் ஆழ்மனம். கனவு என்பது நம் கற்பனை. கனவு என்பது...

கட்டுமரங்கள் [2024 ஆம் ஆண்டு]

சரியாக பத்துஆண்டுகளுக்கு முன் 2014 ஜனவரியில் கன்னியாகுமரிக்கு சென்றோம். உறவுகளில் ஒரு இருபது பேர் சேர்ந்த பயணம். அண்ணன் மகனிற்கு திருச்செந்தூரில் மொட்டை போடுவதாக வேண்டுதலை முடித்துக்கொண்டு நாகர்கோயில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி குமரியம்மன் கோயில் மற்றும் விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம் காமராஜர் நினைவகம் காவிரி பூம்பட்டினம் போன்ற இடங்களுக்கு சென்றோம். சிறுவயதிலிருந்து பள்ளி கல்லூரி சுற்றுலாவில் ஐந்தாறு முறை இந்த இடங்களுக்கு சென்றுள்ளேன். கொற்றவை வாசித்தப்பின் காவிரி பூம்பட்டிணம் கடற்கரையில் செயற்கை அலைதடுப்பு கற்களில் அமர்ந்திருந்த போது மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருந்தேன். காலத்தின் மடியில் தன் செல்வங்களை ஒப்படைத்து அமர்ந்திருந்த கிழவி போல காவிரி பூம்பட்டிணம் அமர்ந்திருந்தது. நாலங்காடி அல்லங்காடி சதுக்க பூதம் எல்லாம் இங்கு தானே இருந்திருக்கும் என்று சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். அதே போல திருச்சேந்தூர் தேரிகாட்டு செந்நிலம் மனதை வியாப்பித்திருந்தது.  விவேகானந்தர் பாறைக்கு படகில் ஏறி லைஃப் ஜாக்கெட்டை மாட்டியதும் மனம் துறுதுறு என்று இருந்தது. வள்ளுவரையும் விவேகானந்தர் பாறைய...

இற்றைத்திங்கள் அந்நிலவில் :18

  பெருமழைகாலத்துக்குன்றம் ஔவையார் நற்றிணையில் ஏழு பாடல்கள் பாடியுள்ளார்.  தலைவியை பிரிந்து சென்ற தலைவன் தேரில் திரும்பிவிருகிறான். அவன் கண்களுக்கு தலைவி காத்திருக்கும் குன்று புலனாகிறது. காயாம்பூ பூத்து நிறைந்திருக்கும் குன்றில் அப்போது தான் பூக்கும்  கொன்றை  போல நீலமலையை பொன்மின்னலின் வெளிச்சம் வெட்டிச்செல்கிறது. அந்த வெளிச்சத்தில் குன்றின் பிளவுகளும் கூட கண்களுக்கு துலக்கமாகிறது. தலைவியின் மாமை நிறத்தை ஒத்த நிறமுடைய மேகங்கள் குன்றை சூழ்ந்து கொள்ள மழை பெய்கிறது. அன் தன் பாகனிடம் மழை காலத்தில் திரும்பி வருவேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். என்னை நினைத்து இந்த அந்தியில் தலைவி கோபம் கொள்ளத் தொடங்கியிருப்பாள். ஆநிரைகளை ஒன்று சேர்த்து இல்லம் திரும்புவதற்காக கோவலர்கள் குழல் ஊதத்தொடங்கிவிட்டனர். இரவு முற்றி செறிவதற்கு முன் நாம் இல்லம் சேர வேண்டும்  சொல்கிறான். மின்னலை காயாங் குன்றத்து கொன்றை என்று ஔவை சொல்கிறாள். மின்னலை பொன் பூவாக மாற்றக்கூடிய அழகிய காதல் இந்தப்பாடலில் உள்ளது. பெயல்தொடங் கினவே பொய்யா வானம் நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி அழல்தொடங் கினளே ஆயிழை  ...

லாவண்யா சுந்தரராஜனின் கதைகள்

  எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் பற்றி ஆதியிலிருந்தே காட்டிற்கும் மனிதர்களுக்குமான  பிடிமானமும் விலகமுமான உறவே மனிதகுலத்தை இன்றுவரை நகர்த்தியுள்ளது. ஒரு உக்கிரமான விட்டுவிட முடியாத பிணைப்பும், தவிர்க்கவே முடியாத விலகலுமான உறவு என்று சொல்லலாம். காட்டிலும் இருக்க முடியாது, காட்டை தவிர்க்கவும் முடியாத வாழ்வு நம்முடையது. முற்றிலுமாக நகரமாகிவிட்ட இடத்தையும் ‘கான்க்ரீட் காடு’ என்று தான் சொல்வோம். எவ்வளவு இடப்பற்றாக்குறையிலும் சிறுதுளசி செடி அல்லது டேபிள் ரொஸ் தொட்டிக்காவது வீட்டில் இடம் தேடுவோம். இல்லாவிட்டாலும் நமக்கு சுவற்றிலாவது பச்சையாக வரைந்துவிட வேண்டும். கடுமையான போக்குவரத்து நெரிசல் மையம் கொள்ளும் இடங்களிலும், அதிவேகமெடுக்கும் சாலைகளின் நடுவிலும் பூச்செடிகளுக்கும் தீக்கொன்றை மரங்களுக்கும் இடம் கிடைக்கிறது. கொஞ்சம் முன்னால் சென்றால்  சாலைகளின் இருபக்களிலும் புளியமரங்கள் அணிவகுத்து நிழல் காத்து நின்றன. இன்று சாலைகளை அகலப்படுத்தி விரைவாக வளரும் மரங்கள், அழகாக பூக்கும் மரங்கள், கரும்புகையை அதிகமாக உறிஞ்சுவதாக நம்பப்படும் செடிகள் நடப்படுகின்றன. பெரும்பாலும் வண்ண வண்...