தொட்டனைத்தூரும் மணற்கேணி என்ற உவமையை கற்றலிற்கும் அறிவிற்கும் வள்ளுவர் சொல்கிறார் . ஒரு படைப்பாளியின் படைப்பு மனநிலைக்கும் தொட்டணைத்தூரும் மணற்கேணி என்ற உவமையை சொல்லலாம் . சங்க இலக்கியம் ஊற்றை அடைக்கும் பொருளை ' துறுகல்' என்று சொல்கிறது . சில நேரங்களில் படைப்பாளிகளுக்குள் ஏதோ ஒன்று படைப்பு மனதை ஊறிப்பெருக விடாமல் தடுக்கிறது . படைப்புமனதை இரண்டு அடிப்படையான விஷயங்கள் பாதிக்கின்றன என்று தோன்றுகிறது . முதலாவதாக அன்றாட விஷயங்கள் . ' என்னை இந்த உப்பிற்கும் புளிக்கும் கவலைப்பட விட்டுவிடாதே' என்று பாரதி அன்னை பராசக்தியிடம் கலங்கி சொல்கிறார் . அடுத்ததாக அகத்தின் சஞ்சலங்கள் படைப்பு மனதை தடுமாற வைப்பது . கம்பர் இதை ' ஐம்புலக்குறும்பர் .. மாறிலி கள்வர் மயக்காமல் என்னை காக்கும் தேவி' என்று சரஸ்வதியை பாடுகிறார் .( ஐம்புலன்களை ஐவகை நிலங்களாக சொல்வதில் உள்ள கவித்துவம் நம் மனதை பரவசமாக்குகிறது . கம்பராமாயணம் போன்ற பெரும்படைப்பை இயற்றுவதற்கு முன்போ , இயற்றிய பின்னரோ கம்பர் சரஸ்வதி அந்தாதியை ...
🌿🦋என்னால் பூக்காமலிருக்க முடியவில்லை _ கவிஞர் அய்யப்ப பணிக்கர் 🌺🍀